புதன், ஆகஸ்ட் 31, 2011

வியட்நாமில் மதுரை வீரன் - பகுதி 3

ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்
வியட்நாமின் வர்த்தக நகரான ஹோசிமின் சிட்டி -யில் பரவலாக காணப்படும் ,குறிப்பாக தமிழர்களால் கட்டப்பட்ட இந்துக் கோவில்களைப் பற்றி முன்னர் பாகம் -1 , பாகம் -2 -ல் குறிப்பிட்டிருந்தேன்.

இம்முறை அவ்விரு கோவில்களுக்கு மிக அருகிலேயே ,நகரின் மிக முக்கிய பகுதியில் அமைந்துள்ள தமிழருக்கே உரிய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை காண முடிந்தது.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கோவில் திறந்திருந்தாலும் ,தேடித் தேடிப் பார்த்தும் யாரும் கோவிலுக்குள் இல்லை .ஆனால் தமிழில் அச்சிடப்பட்டுள்ள நாட்காட்டி, தொடர்ந்து யாரோ சில தமிழர்களே கோவிலை பராமரித்து வருவதைக் காட்டியது.

Photobucket - Video and Image Hosting

தமிழிலேயே ஒரு கல்வெட்டும் காணக்கிடைத்தது .அதன் படி பாதரக்குடி மகாஸ்ரீஸ்ரீ பாபுராஜா பி.ஏ.சொக்கலிங்கம் பிள்ளை- யின் குமாரன் கடம்பவன சுந்தரம் பிள்ளை
1928 - ல் உபயம் செய்தது என அறிய முடிகிறது .பாதரக்குடி என்பது ஊரின் பெயரா ? தமிழகத்தில் அவ்வூர் எங்குள்ளது ?

Photobucket - Video and Image Hosting

(கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட படங்களின் தரத்துக்கு பொறுத்தருளுக!)



(நிறைவு பெற்றது) 

3 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

அருமையான தகவல்கள்.படங்கள் கைத்தொலைபேசியில் எடுத்தது போன்று தெரியவில்லையே ,படங்கள் மிகவும் துல்லியமாக இருக்கின்றன .வாசிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள். பாதரக்குடி தமிழ்நாட்டில் இருக்கும் என நினைக்கிறேன். சிலவேளைகளில் அந்த ஊரின் பெயர் இப்போ மாறியிருக்கலாம் .அது பற்றி இந்திய நண்பர்கள் யாராவது கருத்துரைப்பார்கள் என நம்புவோம். பாராட்டுக்கள்

Maran சொன்னது…

photos is good, no proplem
very nice story, i wish to you all the best

'அந்திமாலைக்காக' இ.சொ.லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

நண்பர் ஜோ அவர்களுக்கு 'பாதரக்குடி' என்பது எங்கே உள்ளது என்பது இப்போது தெரிய வந்திருக்கும் என நம்புகிறேன்.இருப்பினும் ஏனைய வாசகர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக கூகுள் இணையத்திலும், நண்பர் ஜோ அவர்களின் இணையத்திலும் கிடைத்த தகவல்களைப் பதிவு செய்கிறேன்.
"பாதரக்குடி என்பது காரைக்குடியில் இருந்து குன்றக்குடி வழியாக மதுரை போகும் சாலையில், கோவிலூருக்கு அடுத்த ஊர். பாதரக்குடிக்கு அடுத்தது குன்றக்குடி.

பாதரக்குடியில் உள்ள சிவமடத்தில் தான் நகரத்தார் ஆண்கள் சிவ 'தீக்கை'(தீட்சை) வாங்கிக் கொள்ளுவார்கள். அந்த ஊருக்கு அருகில் இருக்கும் 'துளாவூர்' மடத்தில் தான் நகரத்தார் பெண்கள் சிவ தீக்கை வாங்கிக் கொள்ளுவார்கள்"
மேற்படி கருத்தை நண்பர் ஜோ அவர்களின் இணையத்தில் பகிர்ந்துகொண்ட இராம.கி ஐயா அவர்களுக்கு நன்றிகள்.
மேலும் கூகுளில் தேடியபோது 'பாதரக்குடி' என்பது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் எனவும், இது NH-226 எனப்படும் காரைக்குடி ஊடாக மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது எனவும், இக்கிராமத்தின் அஞ்சற் குறியீட்டு எண் 630 307 எனவும் விடை கிடைத்தது.

தமிழ்நாட்டில் ஒரே பெயரில் பல கிராமங்கள் இருக்கும்.ஆச்சரியப் படத்தக்க விதத்தில் 'பாதரக்குடி' எனும் பெயரில் நான் மேலே குறிப்பிட்ட ஒரேயொரு கிராமம் மட்டுமே உள்ளது.
மேற்படி காரைக்குடி, சிவகங்கை பகுதிகளில் வாழ்கின்ற நாட்டுக்கோட்டைச் செட்டியார்(நகரத்தார்) என்ற சமுதாயப் பிரிவினர் இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக வியாபார நிமித்தம் மலேசியா,சிங்கப்பூர், இந்தோனேசியா,தாய்லாந்து,பர்மா,கம்போடியா,வியட்னாம் போன்ற நாடுகளுக்கு சென்று வந்ததுடன், அந்நாடுகளிலேயே வாழ்ந்தும் வந்தனர். அவர்கள் கட்டிய கோவில்களே நீங்கள் தற்போது புகைப்படத்தில் காணுகின்ற கோவில்களாகும்.

கருத்துரையிடுக