நாட்டின் பெயர்:
கம்போடியா (Cambodia)
வேறு பெயர்கள்:
கம்போடிய இராச்சியம் மற்றும் கம்பூச்சியா(இது 'கம்போடியா' என்பதன் பிரெஞ்சு மொழி உச்சரிப்பாகும்)
அமைவிடம்:
அமைவிடம்:
தென்கிழக்கு ஆசியா
எல்லைகள்:
வடமேற்கு - தாய்லாந்து
வடகிழக்கு - லாவோஸ்
கிழக்கு - வியட்னாம்
தென்மேற்கு - தாய்லாந்துக் குடாக்கடல்
தலைநகரம்:
பினொம் பென் (Phnom Penh)
அலுவலக மொழி:
கிமெர் (Khmer)
சமயங்கள்:
புத்த சமயம் 92 %
தாவோயிசம் 4 %
கிறீஸ்தவம் 2 %
இஸ்லாம் 2 %
ஆயுட்காலம்:
ஆண்கள் 60 வருடங்கள்
பெண்கள் 65 வருடங்கள்
கல்வியறிவு:
73 %
அரசாங்க முறை:
கூட்டாட்சியுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் சம்பிரதாயபூர்வமான மன்னராட்சி
மன்னர்:
நோரோடொம் சிகாமொனி(Norodom Sihamoni)
பிரதமர்:
ஹுன் சென் (Hun Sen)
பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை:
09.11.1953
பரப்பளவு:
181,035 சதுர கிலோமீட்டர்கள்
சனத்தொகை:
14,805,358 (2011 மதிப்பீடு)
நாணயம்:
ரியெல் (Riel / KHR)
இணையத் தளக் குறியீடு:
.kh
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-855
இயற்கை வளங்கள்:
மரம், வைரக் கற்கள், இரும்பு, மங்கனீஸ், பொஸ்பேட், நீர் மின்சாரம்.
விவசாய உற்பத்திகள்:
அரிசி, ரப்பர், சோளம், காய்கறிகள், பருப்புகள்(முந்திரிப் பருப்பு), மரவள்ளிக் கிழங்கு, பட்டு.
தொழிற்துறைகள்:
சுற்றுலா, துணிகள், கட்டிடம், அரிசி, மீன்பிடி, மரம், தளபாடங்கள், ரப்பர், சீமெந்து, இரத்தினக் கற்கள் தோண்டுதல்.
ஏற்றுமதிகள்:
துணிகள், மரம், ரப்பர், அரிசி, மீன், புகையிலை, பாதணிகள்(காலணிகள் / செருப்பு, சப்பாத்து)
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
- இந்தியாவின்(வட இந்திய)மன்னர்களாலும், தமிழ் மன்னனாலும்(ராஜ ராஜ சோழன்) புராதன காலத்தில் ஆளப்பட்ட நாடு. இந்நாட்டைக் கைப்பற்றியதன் காரணமாகவே ராஜ ராஜ சோழனுக்கு 'கடாரம் கொண்டான்' எனும் பெயரும் நிலைத்தது.
- இந்நாட்டிலுள்ள 'ஆங்கூர் வாட்' எனும் கோயில் தமிழ்நாட்டின் 'தஞ்சைப் பெருங் கோயிலை' விடப் பெரியதாகும். இந்திய மன்னனாகிய ராஜ வர்மனால் விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்ட கோயில் காலப் போக்கில் கம்போடியா ஒரு பௌத்த நாடாகியபோது உலகின் மிகப்பெரிய பௌத்த ஆலயமாகியது.
- இந்நாட்டில் நிகழ்ந்த இருபது வருடகால உள்நாட்டு யுத்தத்தில் இந்நாட்டின் செம்படைக் கெரில்லாக்களாலும், வியட்நாமிய படைகளாலும், அமெரிக்க விமானக் குண்டு வீச்சுக்களாலும் முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப் பட்டனர்.
- இந்நாட்டில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தங்களால் சுமார் இருபது லட்சம் பேர் அகதிகளாயினர்.
- உலகின் கொடுங்கோலர்களில் ஒருவனாக வர்ணிக்கப்படும் போல் போட் தலைமையிலான 'செம்படைக் கெரில்லாக்களின்' ஆட்சியில் இருபது லட்சம் வரையான மக்கள் பசி, பட்டினி, கொடிய நோய்கள், 'உடனடி மரண தண்டனை' நிறைவேற்றம் போன்றவற்றால் கொல்லப் பட்டனர்.
- கம்யூனிஸ்டுகளாகிய செம்படைக் கெரில்லாக்கள் 1975 தொடக்கம் 1993 காலப் பகுதியில் கம்போடியாவின் கல்விச் சமூகத்தையே அழித்தொழித்தனர்.
- செம்படைக் கெரில்லாக்களின் ஆட்சியில் பல லட்சம் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் போன்றோர் கொன்றழிக்கப் பட்டனர்.
- அமெரிக்க-வியட்னாம் யுத்த காலத்திலும், செம்படைக் கெரில்லாக்களின் காலத்திலும் கம்போடியாவில் எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டு வீச்சுகள் போன்றவற்றால் கம்போடியாவின் வன விலங்குகளில் 75% மானவை அழிக்கப்பட்டு விட்டன.
- ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் அளவிற்கு செல்வச் செழிப்போடு திகழ்ந்த கம்போடியா இன்று உலக அரங்கில் 'பிச்சைப் பாத்திரம்' ஏந்தி நிற்கிறது.
- உலகின் ஏழை நாடுகளின் வரிசையில் கம்போடியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
- பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் கம்போடியாவும் ஒன்று.2011 நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலரின் கம்போடிய மதிப்பு 4095 ரியல்கள்(கம்போடிய நாணயம்).
- நாட்டில் போசாக்குக் குறைவினால் ஏராளமான குழந்தைகள் ஐந்து வயதிற்குள்ளாகவே இறந்துவிடும் நிலை காணப் படுகிறது.
- பெரியவர்களில் பலர் மலேரியா, எயிட்ஸ் போன்ற நோய்களால் குறைந்த வயதிலேயே இறக்கும் நிலை காணப் படுகிறது.
- இந்நாட்டில் ஆசியாவிலேயே அதிக அளவான எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.மொத்தச் சனத்தொகையில் 2.8 % பேர் (170.000) எயிட்ஸ் நோயாளிகள் ஆவர். இதுவரையில் எயிட்ஸ் நோயினால் 80.000 பேர் இறந்துள்ளனர்.(தகவலுக்கு நன்றி:www.utopia-asia.com)
- முற்றாக அழிந்து போன நாடாகிய கம்போடியா தற்போது ஐ.நா, மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவிகளால் மெல்ல மெல்ல உயிர்பெற்று வருகிறது.
6 கருத்துகள்:
நல்ல அறிவான தகவல் . நன்றி .
very good article we are lucky anthimaalai will help to ours
nalla vadajam. anthimaalaiku nanrai.
good we are interesing to reading
very interesting article.thanks anthimaalai
//நாணயம்:
ரியெல் (Riel / KHR)//
ரியெல் கம்போடியாவின் அதிகாரபூர்வ நாணயமாக இருந்தாலும் அமெரிக்க டாலரே இங்கு அதிகமாக புழங்குகிறது . பெட்டிக்கடைகளில் கூட அமெரிக்க டாலர் ஏற்றுக்கொள்ளப்படும் .ஒரு டாலருக்கு குறைவான சில்லறை கொடுக்கவே பெரும்பாலும் ரியெல் உபயோகிக்கப்படுகிறது
கருத்துரையிடுக