திங்கள், மே 30, 2011

தாய்லாந்துப் பயணம் - 3


ஆக்கம்: திருமதி.வேதா இலங்காதிலகம்
விமான நிலையத்தின் கீழ் உள்ள ரயில் நிலையம் 
டென்மார்க் தலைநகர் கொப்பென்கேகன் காஸ்ருப் விமான நிலையத்திற்குச் செல்லும் தொடருந்தால் விமான நிலையத்திற்குள் சென்றோம்.
தாராளமான நேரம் இருந்தது. மாலை 4.30க்கு ஒஸ்ரியன் விமானத்தில் நாம் ஒஸ்ரியா வீயென் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.                                                 
Wien  என்பது டெனிஷ் உச்சரிப்பு. ‘ஐ’ என்ற ஆங்கில எழுத்து டெனிஷில் ‘ஈ’ என்ற உச்சரிப்பைப் பெறுகின்றது. இதுவே வீன்னா, வைன் என்றும் வேற்று மொழியில் உச்சரிப்பு வரலாம்.                                                  
காஸ்ருப் விமான நிலையம் 
நேரம் வர தகவல் பலகையில், உள்ளே செல்லும் படலை இலக்கம் அறிந்தோம். பயணக் கண்காணிப்புக்கு ‘ செக் இன்னுக்கு’ வரிசையில் நின்று எமது பெட்டிகளை ஒப்படைத்தோம். அப்பாடா! இனி தாய்லாந்தில் அதை எடுக்கலாமே! ஒரு பாரச் சிறகை உள்ளே மடக்கியது போல இலேசாக இருந்தது. இரண்டு பெட்டிகளும் 16, 16 கிலோ இருந்தது என்றதும் மகிழ்வாக இருந்தது. ஏனென்றால் வரும் போது இன்னும் பாரத்துடன் வரலாமேயென்ற மகிழ்வு.                                               
உலகத்துத் தொல்லைகள் அனைத்தையும் விட்டு வீசி விட்டு வேறொரு உலகத்துள் புகுவதாக மாலை 4.30க்கு விமானத்திற்குள் சென்றோம். நாமும் எமக்குச் செல்லம் கொடுக்க விரும்பி எடுத்த பயணம் இது. மனம் நூறு விகிதமும் ஆனந்தத்தில் மிதந்தது. அது என்ன செல்லம் கொடுத்தல் என்கிறீர்களா?
காஸ்ருப் விமான நிலையம் 
டென்மார்க்கில் ஒருவர் மிகத் துன்பத்தில் இருந்தால் அவருக்கு நண்பர்கள், நெருங்கியவர்கள் புது உடை, சப்பாத்து, என்று ஏதாவது பரிசுகள் வாங்கிக் கொடுத்து துன்பப்படுபவரை மகிழ்விப்பார்கள், செல்லம் கொடுப்பார்கள்.
துன்பப்படுபவரும் தன்னை உற்சாகப் படுத்த தலையலங்காரத்தை மாற்றுதல், பயணம் செல்லுதல் என்று தனக்குத் தானே செல்லம் கொடுப்பார். மனதில் தைரியம் உள்ளவர்கள் தான் இதைச் செய்வார்கள். மற்றவர்கள் துன்பத்தில் விழுந்து தத்தளிப்பார்கள். இதைத் தான் டெனிஷில் "Forkæle"  பண்ணுதல், செல்லம் கொடுத்தல் என்போம்.
”….ஒரு சோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் 
    உறவன்றி வேறு இல்லை கவனங்களில்.”….
ஒஸ்ரியன் விமானம் 
விமானத்தில் பேசியபடி, சாளரம் ஊடாகப் பார்த்தபடி, தொலைக் காட்சியில் நாடுகளுக்கு ஊடாகச் செல்வதை ஆர்வமாகப் பார்த்தபடியும் பயணித்தோம்.
சிறிது நேரத்தால் உணவு வண்டில் வந்தது. இந்த விமானத்தில் எனக்கு சைவ உணவு பதிவு செய்ய இயலாது என்றனர்.  என்ன உணவு வருமோ என்று குழப்பமாக இருந்தது. நல்ல வேளை ஒஸ்ற், கத்தரிக்காய், பஸ்ரா எல்லாம் கலந்த சூடான ஒரு உணவுக் கலவையும், புடிங், பாண், பழங்கள் என்றும் தந்தனர். மகிழ்வு தான். கணவர் கோலாவுடன், நான் தேனீருடன் உணவு கொண்டோம். மிக அருமையாக, திருப்தியாக இருந்தது.                                        
மாலை 6.30க்கு வீயென் விமான நிலையமடைந்தோம்.   
வீயென் விமான நிலையம்
உள்ளே சுற்றுசுற்றென்று சுற்றினோம். அங்கிருந்து பாங்கொக்கிற்கு இரவு 11.20 ற்கே விமானம். ஆமாம்! காத்திருந்த நேரம் அதிகம் தான். நடந்து கால்கள் நோக, அமர்ந்திருந்தும் நேரத்தை ஓட்டினோம். புத்தகத்திலும் பாதிக்குக் கிட்ட வாசித்துவிட்டேன்.
சுமார் 10.00 மணிக்கு படலை திறக்க உள்ளே சென்றோம். இது வரை ஐரோப்பாவில் சுற்றினோம்.
இனி பத்து மணி நேரப் பயணம், ஐந்து மணித்தியால நேர வித்தியாசத்தில் பாங்கொக் விமானநிலையம்  சென்று சேருவோம்.
பயணம் தொடரும்

16 கருத்துகள்:

K. Arul, Waldgirmes (Germany) சொன்னது…

very interesting

Krishna, Chennai, India. சொன்னது…

Super.

Kovaikkavi (Vetha) சொன்னது…

ம்!...பரவாயில்லை வேதா.!..வாசிக்க சிறிது சுவையாகத்தான் உள்ளது. நேயர்களின் வித்தியாசமான இடுகைகளைப் பார்க்கும் ஆவல். இடுகையிடும் மொழியில் கூட நேயர்களின் தரம் காண முடியும் அல்லவா! எப்படி சுவைக்கிறார்கள் என்று!...வாங்கோ தொடர்ந்து பயணிப்போம்!!!!.....

suthan france சொன்னது…

excellent vetha

Kaljanai Sweden சொன்னது…

நல்லா இருக்கிறது .

seelan germany சொன்னது…

மிகவும் நல்லதாய் இருக்கிறது மேன்மேலும்
வளர்க vetha

Balamurugan, Malaysia. சொன்னது…

rompa nanraaka ezhuthiyullaar. paaraaddukkal.

vinothiny சொன்னது…

very interesting.great job

kumar சொன்னது…

நல்லது மீண்டும் தொடர்க

துஜீஸ்காந் புஸ்பராஜா, Sri Lanka சொன்னது…

நன்றாக எழுதியுள்ளார், வேதா

நிர்மலன், கனடா சொன்னது…

உங்களின் விபரிக்கும் பாங்கு அருமை. பாராட்டுக்கள்.

Ravi.skjern சொன்னது…

Mikkavum nallaiullathu.

Thurai Denmark சொன்னது…

.உங்கள் தொடர் மிகவும் சிறப்பாக உள்ளது . வாழத்துக்கள்.

PALAN SWEDEN சொன்னது…

unkal thodar thodra vallathukal.

ragini france சொன்னது…

very good yours article is excellent to vetha

Kovaikkavi (vetha, Denmark) சொன்னது…

கருத்துரையிட்ட அத்தனை அன்புள்ளங்களுக்கும், இனி கருத்து இடப்போகிறவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். உங்கள் ஊக்குவிப்பு எனக்கு உரம் தருபவை. இறை ஆசி உங்கள் அனைவருக்கும் கிட்டட்டும்.

கருத்துரையிடுக