செவ்வாய், மே 17, 2011

நாடுகாண் பயணம் - புர்கினா பாசோ


நாட்டின் பெயர்:
புர்கினா பாசோ (Burkina Faso)

அமைவிடம்:
மேற்கு ஆபிரிக்கா 

எல்லைகள்:
வடக்கு - மாலி 
கிழக்கு - நைகர்
தென்கிழக்கு - பெனின் 
தெற்கு - டோகோ, கானா 
தென்மேற்கு - ஐவரி கோஸ்ட் 

தலைநகரம்:
அவ்கா டவ்கோ (Ouagadougou)

ஆட்சிமுறை:
பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் சம அதிகாரமுடைய இரட்டை அதிகார (Semi presidential) குடியரசு 

அலுவலக மொழி:
பிரெஞ்சு 

பிராந்திய மொழிகள்:
மூரே (Moore)
டியோலா (Dioula / Bambara)

சமயங்கள்:
முஸ்லீம்கள் 50 %
பழமைவாத இயற்கையியல் சமயம் 40 %
ரோமன் கத்தோலிக்கம் 10 %

கல்வியறிவு:                             
28.7 %

ஆயுட்காலம்:
ஆண்கள் 51.7 வருடங்கள் 
பெண்கள் 55.7 வருடங்கள் 

பிரான்சு நாட்டிடம் இருந்து சுதந்திரம்:
5.08.1960

பரப்பளவு:
274,200 சதுர கிலோமீட்டர்கள் 

சனத்தொகை:
15,746,232 (2009 மதிப்பீடு)

ஜனாதிபதி:
பிளாய்சே கொம்ப்பவ்ரே (Blaise Compaore)

பிரதமர்:
லுக் அடொல்பே தியாவோ (Luc-Adolphe Tiao)

நாணயம்:
மேற்கு ஆபிரிக்க பிராங்(West African Franc / CFA /XOF)


இணையத்தளக் குறியீடு:
.bf

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-226


இயற்கை வளங்கள்:
தங்கம், செப்பு, இரும்பு, மங்கனீஸ்.

விவசாய உற்பத்திகள்:
இறுங்கு, வாற்கோதுமை, சோளம், வேர்க்கடலை(கச்சான்), அரிசி, பருத்தி.


ஏற்றுமதிகள்:
தங்கம், பருத்தி, கால்நடைகள்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • கடந்த 1960 ஆம் ஆண்டு வரை இந்நாடு அப்பர் வோல்டா(Upper Volta) எனும் பெயரால் அழைக்கப்பட்டது.
  • உலகில் கல்வியறிவு மிகக்குறைந்த நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • உலகில் குறைந்த ஆயுட்காலம் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் ஒன்று.
  • கல்வியைப் போலவே சுகாதாரத் துறையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒரு லட்சம் நோயாளிகளுக்கு 10 மருத்துவர்கள் எனும் நிலையே காணப்படுகிறது.
  • சிறுமிகளுக்கு சமயச் சடங்காக 'பெண் உறுப்பின் உணர்வுள்ள பகுதியை' கூரிய ஆயுதத்தினால் வெட்டும் 'கொடுமை' நிகழும் நாடுகளில் ஒன்று. உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளி விபரப்படி புர்கினா பாசோவில் கடந்த 2005 ஆம் ஆண்டில் 72.5 % சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் இக்கொடுமை நிகழ்ந்துள்ளது(தகவலுக்கு நன்றி: en.wikipedia.org)
  • இந்நாட்டின் விவசாயம் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடனேயே நடைபெறுகிறது.
  • இந்நாட்டின் மொத்தத் தேசிய வருமானத்தில் பெரும்பகுதியை வெளிநாட்டில் தொழில்புரியும் இந்நாட்டுப் பிரஜைகள் அனுப்பும் அந்நியச் செலாவணி (பணம்) ஈடு செய்கின்றது.
  • பத்திரிகைச் சுதந்திரம் இல்லாத நாடுகளில் ஒன்று.
  • ஐ.நா.வின் மதிப்பீடுகளின்படி உலகில் வறிய நாடுகளின் வரிசையில் 6 ஆவது இடத்திலும், வறிய ஆபிரிக்க நாடுகளின் வரிசையில் 3 ஆவது இடத்திலும் உள்ளது.
  • உலகில் ஏராளமான வெளிநாட்டுக் கடனைக் கொண்டுள்ள, மிகக் குறைந்த 'தனி நபர் வருமானம்' உள்ள நாடுகளில் ஒன்று. 

5 கருத்துகள்:

Manivannan Germany சொன்னது…

நல்ல தகவல்

suthan சொன்னது…

i am very happy see every counrys

kumar சொன்னது…

congratulation

Kala UK சொன்னது…

வாசகர்களுக்கு மிகவும் உபயோகமானது .

Arun Norway சொன்னது…

அந்திமாலைக்கு நன்றிகள்

கருத்துரையிடுக