திங்கள், மே 02, 2011

மக்களின் பணியாளனை வாழ்த்துவோம்

கிராம சேவையாளர் பணியில் பதினைந்து வருடங்களைப் பூர்த்தி செய்யும் திரு.சின்னத்துரை இரத்தினேஸ்வரன் அவர்கள்.

இலங்கையில், யாழ் மாவட்டத்திலுள்ள அல்லைப்பிட்டி(J/10) கிராம அலுவலர் திரு.சின்னத்துரை இரத்தினேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம்(02.05.2011) கிராம அலுவலர் சேவையில் இணைந்து பதினைந்தாவது வருடத்தைப் பூர்த்தி செய்கிறார்.


1995 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி அன்று மேற்படி கிராம அலுவலர் பணியில் இணைந்து கொண்ட திரு இரத்தினேஸ்வரன் அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அவர் பிறந்து வளர்ந்த ஊர் மக்களுக்குத் தனது சேவையினை ஆற்றி வருகிறார்.
1962 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஒன்பதாம் திகதி அல்லைப்பிட்டியில் பிறந்த இரத்தினேஸ்வரன் அவர்கள் அக்கிராமத்தில் பல கல்விமான்களை உருவாக்கிய அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். பல்கலைக் கழகம் வரை சென்று கல்வி பயில வேண்டும் என்ற தணியாத தாகமும், திறமையும் அவரிடம் இருந்தபோதும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையும், அவரது குடும்ப நிலைமையும் அதற்கு உகந்ததாக அமையப் பெறவில்லை.


ஓர் அரசாங்க உத்தியோகத்தில் இணைந்து கொள்வதற்கு திரு இரத்தினேஸ்வரன் அவர்கள் பத்து வருடங்களுக்கும் மேலாகக் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இவரது அயராத முயற்சியின் காரணமாக 1995 ஆம் ஆண்டில் மேற்படி கிராம அலுவலர் நியமனம் கிடைத்தது. இவர் இப்பணியில் இணைந்த காலப்பகுதியானது மிகவும் நெருக்கடிகளும்,சவால்களும் நிறைந்ததாகும். இருப்பினும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தனது பணியினைத் திறம்படச் செய்தார், செய்தும் வருகின்றார்.அது மாத்திரமின்றி கிராம அலுவலர் என்ற எல்லைக்குள் நின்று விடாமல் 'ஊராக வளர்ச்சி', சமூக மேம்பாடு போன்றவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவர்.


ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்குள்ள அதிகாரத்திற்கு எந்த வகையிலும் குறையாத அதிகாரம் ஒரு கிராம சேவையாளருக்கு உண்டு என்ற விடயம் நம்மில் பலர் அறியாதது.ஆனாலும் திரு இரத்தினேஸ்வரன் அவர்களைப் பொறுத்தமட்டில் தன்னை ஓர் சாதாரண பொதுமகனாகவே நினைத்து, கர்வம் இல்லாது மக்களோடு இணைந்து, இயல்பான வாழ்வு வாழ்ந்து வருகிறார். நம் ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களில் இவரும் ஒருவர்.
'கிராம சேவையாளர்' எனும் பணியானது ஒரு காத்திரமான பணியாகும். ஓர் கிராமத்துக்கும் அங்குள்ள மக்களுக்கும் அரசினால் நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி கிராம சேவகரேயாவார். அக்கிராமத்தில் என்ன நடந்தாலும், நடைபெற இருந்தாலும் கிராம அலுவலரின் பங்களிப்பு அல்லது அனுமதி பெறப்பட்டு இருத்தல் வேண்டும்.அந்த அளவுக்கு இச்சேவை வீரியம் கொண்டதாகும்.ஓர் வீட்டில் இயற்கை மரணமொன்று நிகழ்ந்தால்கூட மேற்படி மரணம் சம்பந்தமான 'மரண விசாரணை' நடைபெற்று முடியும்வரை, இறந்தவரின் குடும்பத்தவரைவிட, கிராம சேவகரின் வேலைப்பழு அதிகரித்துவிடும். அது இரவு,பகல் என்று பாகுபாடும் பார்க்கமுடியாத அளவு செயற்திறன் கொண்டதாகும்.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கென்று அரசினால் நடாத்தப்பட்ட ஆங்கிலம் மற்றும் சிங்களம் தரம் 3 என்ற பாடங்களில் திரு இரத்தினேஸ்வரன் அவர்கள் சிறப்புத் தேர்ச்சி அடைந்துள்ளார்.நம்மூரில் வாழும் மிகவும் அரிதான மும்மொழிகளிலும் தேர்ச்சி உள்ளவர்களில் இவரும் ஒருவர்.
ஒரு கிராமத்திற்கு அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரே கிராம சேவையாளராக நியமனம் பெறவது என்பதுதான் சிறப்பான விடயமாகும். ஏனெனில் அவரால்தான் அந்த ஊர் மக்களின் தேவை அறிந்து சேவையாற்றுவது இலகுவாக இருக்கும்.அம்மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதும், அணுகுவதும், விசாரிப்பதும் எளிதானதாக அமையும்.
அந்த வகையில் பதினைந்து வருடங்களை தன் கிராம மக்களுக்குச் சேவை செய்வதில் அர்ப்பணித்துப் பதினாறாவது ஆண்டில் கால்பதிக்கும் திரு இரத்தினேஸ்வரன் அவர்களை வாழ்வில் மென்மேலும் வளர்ச்சிகண்டு, மக்களுக்கும், நாட்டிற்கும் சிறந்த சேவையை வழங்கவேண்டும் என்று இறைவனை வேண்டுவதோடு, ஊர் மக்கள் சார்பாகவும், என் சார்பாகவும் எமது முதல் தர கிராம அலுவலர் அண்ணன் இரத்தினேஸ்வரன் அவர்களை 'அந்திமாலை' இணையத்தளம் ஊடாக மனதார வாழ்த்துவதில் பெருமகிழ்வு அடைகிறேன். 

நன்றி.

உள்ளார்ந்த அன்புடன் 
வை.பிரணவன் 
2 ஆம் வட்டாரம்.
அல்லைப்பிட்டி 
யாழ்ப்பாணம் 
இலங்கை 

9 கருத்துகள்:

uthayan சொன்னது…

ஒரு மனிதன் உலகில் பிறந்தால் அவன் எதாவது தணல் முடிந்த
உதவியை நாட்டுக்கோ உருக்கோ குடும்பத்திற்கோ செய்தால் அவன் மற்டவர்கள் போற்ற படுவன்
sinathurai ratnesvaran அவர்கள் என்றும் தன பணியை செய்து மக்கள் நன்மை பெற நாமும் வாழ்த்துகின்றோம்

Kannan family U.K சொன்னது…

Congrats

yogan, France. சொன்னது…

vaalththukkal Annaa.

Thanabalasingam family, Colombo, Sri Lanka. சொன்னது…

May God bless you.

suthan சொன்னது…

சின்னதுரை ratnesvaran அவர்கள் தன் 15 year ஊர் மக்களை தன்னால் முடிந்த உதவிகள் செய்து சந்தோசமாக
வாழ செய்கின்றார் அவர்கள் நீடுழி காலம் உடல் நலத்தோடு வாழ நாம் வாழ்த்துகின்றோம்

Jude Dharmenthira, Canada. சொன்னது…

vazhththukkal Anna.

Paransothinathan Thillainathan சொன்னது…

Best wishes from Paransothinathan family, Denmark

டென்மார்க் ஸ்ரீ சொன்னது…

வாழ்த்துக்கள்

இலங்கை சதீஸ்வரன் சொன்னது…

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

வாழ்த்துவது சதீஸ்வரன் சொர்ணலிங்கம்

கருத்துரையிடுக