ஆக்கம்: திருமதி.வேதா இலங்காதிலகம்
காலம்: 2008 ஆவணி 30 லிருந்து புரட்டாதி 12 வரை
வாழ்வு பரபரப்பு நிறைந்தது. ஓயாத ஓட்டமும், சவால்களுடனும் கூடியதாயினும் இடையிடையே வரும் இன்பங்கள், சூழல் மாறிய சிந்தனைகள், அனுபவக் காசுகளாக மனதிற்குப் பலம் தருகிறது.
யந்திரத்திற்கு எண்ணெய் மாற்றி, துடைத்து, இடைவேளை கொடுப்பது போல வாழ்வில் பயணங்களும், அதன் இனிய அனுபவங்களும் மன அமைதி, ஓய்வு, மகிழ்வு என மிக மிகப் பயன் தருகிறது.
இந்த வகையில் இது எமக்குத் தேவையென எம் குடும்பத்தினர் உணர்ந்த போது,’ ‘ நான் அண்ணாவிற்கு உதவுகிறேன் நீங்கள் வெளிக்கிடுங்கள்! ” என்று மகள் கை கொடுத்தாள்.
பயணம் சுற்றுலாவாகவும், மகனின் வியாபாரத்திற்கு உதவியாகப் பொருட்களும் கொள்வனவு செய்யலாம் என்று 2008 ஆவணி 30 ல் 12 நாட்கள் விடுமுறையில் சுற்றுலாவுடன், வியாபாரம் என்று தாய்லாந்தைத் தெரிவு செய்தோம்.
பாங்கொக் பயணவாசிகள் ஈரல் வியாதி சம்பந்தமான தடுப்பூசி போடவேண்டும் என்ற வைத்திய ஆலோசனையின் பிரகாரம் இரண்டு விதமான தடுப்பூசிகள் போட்டோம். அத்தாட்சிகளையும் சேகரித்தோம்.
தாய்லாந்து விபரங்களைக் கணனியில் சேகரித்தோம். அங்கு போனவுடன அவதிப்படாது தங்கிட வியாபார வட்டாரமான ‘பட்டுனாம்’ (Pratunam) ல் 2 நாட்கள் தங்க ஒரு வாடிவீட்டைத் தெரிவு செய்து உறுதிப்படுத்தினோம்.
அமைதியற்றுக் குளம்பிய மனசு, பயண ஆயத்தங்கள் ஒவ்வொன்றும் உறுதிப்பட உறுதிப்பட, அமைதியாகி பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மனம் மகிழ்வை எட்டியது. கற்பனை சிறகடிக்கத் தொடங்;கியது.
மகளும் 29ம் திகதி காலை இலண்டனிலிருந்து டென்மார்க் வந்து சேர்ந்தார்.
30ம் திகதி காலை ஒன்பது மணிக்கு பேருந்திலே உருட்டும் பயணப் பொதி, உணவுப் பொதியுடன் பயணம் மகிழ்வுடன் ஆரம்பித்தது.
காலை ஒன்பது நாற்பத்தைந்திற்கு ஒகூசிலிருந்து தொடருந்தில் தலைநகர் கொப்பென்கேகன் ‘காஸ்றுப்’ (Kastrup) விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும். மூன்று மணிநேரப் பயணம்.
இதற்கு முன்பு மகிழுந்தில் கடவைப் படகில் பயணித்திருந்தோம். இதுவே ஸ்ரோவ பெல்ட் பாலத்தினூடாக தொடருந்தில் முதற் பயணம். ஸ்ரோவ பெல்ட்டில் போகும் போது, சுற்றிவர கடல் நீராக, நல்ல ஒரு புதிய மிக அழகிய காட்சியாக இருந்தது.
(டென்மார்க்கில் யூலண்ட் (Jylland) நாமிருக்கும் தீபகற்பம் யேர்மனியுடன் நிலத்தொடர்பு கொண்டது. இங்கிருந்து தலைநகருக்குச் செல்வது குறிப்பிட்ட விமான நிலையம் செல்ல. இந்தப் பாதையை வெள்ளை அடையாளமுடன் பார்க்கிறீர்கள் டென்மார்க் படத்தில்.)
தாய்லாந்து இப்படியும் இருக்குமோ என்ற கேள்வியையும் தந்தது. பேசி மகிழ்ந்த, காட்சிகள் பார்த்த கணங்கள் போக, கணவர் பத்திரிகை வாசிக்க, நான் இது வரை வாசிக்கச் சந்தர்ப்பம் ஏற்படாத புத்தகமாக, சாதனையாளன், சகோதரன் எம்.பி. பரமேசின் ‘ என் இனிய பயணங்களில்…’ என்ற நூலை வாசிக்கத் தொடங்கினேன். பசி எடுத்தபோது நாம் கொண்டு சென்ற உணவையும் உண்டு மகிழ்ந்தோம்.
சுமார் ஒரு மணிக்கு காஸ்றுப் விமான நிலையத்தையடைந்தோம்.
மேலும் பயணிப்போம்...
13 கருத்துகள்:
வாசிக்க மனம் படபடக்கிறது. ஆங்கில வார்த்தைகள் தமிழில் புரண்டு அசிங்கம் தருகிறது. நானும் மறுபடி இதை வாசிக்கிறேன். அந்தி மாலைக்கு மிகுந்த நன்றி. முதலிரு கவிதைகளும் வேதா முன்னேற இன்னும் இடமிருக்கிறது என்று சொல்கிறது.
Very Nice.
Very interesting
மிகவும் நல்ல இருக்கிறது
மிகவும் ரசித்து உரைத்திரக்கிறீர்கள் அருமை.. அருமை..
very nice story good, good
நல்லது மீண்டும் தொடர்க
NALLA THODAR. PAARAADDUKKAL.
உண்மையாகவே நியமாக சந்தோசப்பட்டம்
கதையை எழுதியவருக்கு (mrs vetha)
நன்றி
Avaludan athir pakkerom thodari.
Nice article. It seems you're a professional writer.
Well done
அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. பாடப் பாட ராகம் என்பார்கள் இது எனது மூன்றாவது பயணக் கட்டுரை. இதில் அனுபவம் கூட ஜொலிக்கிறது. நிச்சயம் இன்னும் சுவையாக இருக்கும் எதிர்பாருங்கள்.அனைவருக்கும் இறை ஆசி கிட்டட்டும்.
கருத்துரையிடுக