திங்கள், ஆகஸ்ட் 06, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் 

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை. (444)

பொருள்: தம்மினும் அறிவில் மேம்பட்ட பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு அவர் வழியில் நடத்தல் ஒருவர்க்குரிய வலிமைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த வலிமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக