வியாழன், செப்டம்பர் 22, 2011

அந்திமாலைக்கு ஆண்டுநிறைவு வாழ்த்து.


பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.

இலட்சியம் ஊற்றி நிரப்பி
இலக்கோடு மானுடம் நிமிர்த்த
கோலோச்சும் அந்திமாலைக்கு தமிழ்
மொழியோச்சும் பணி வலையில்.
தலை நிமிர்ந்த தமிழை
அலைந்திட விடாது டென்மார்க்கிலும்
இலை விட்டு வளர்கவென
நிலையூன்றும் வினை வலைப்பூ
அந்திமாலை இணையம் ஓயாது
பந்தி விரித்துத் தமிழை
சிந்தி வந்து இப்போது
ஏந்துகிறது ஓராண்டு நிறைவை.
நிலைமைக்கேற்ற உரை கல்லாக
கலை, இலக்கியம், தகவல்,
விலையற்ற பொது அறிவென
நிலைபெற்ற பல சேவை வாழ்க!.
சின்னஞ் சிறாருக்கும் எந்தப்
பென்னம் பெரும் கலைஞருக்கும்
சின்ன வேற்றுமையற்ற சமவிடம்.
என்னே! உன் சேவை வாழ்க!
என்னையும் உன்னுள் எடுத்தாய்!
என் நெஞ்சார்ந்த சேவையுண்டு.
விரிபுவியில் நீ வளர்ந்து
வியத்தகு புகழ் நாட்டு!
சொற்கள் கொம்பு சீவிய
நாவார்ந்த ஓராண்டு நிறைவு
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 
வாழ்க! வளர்க! வளர்க!

10 கருத்துகள்:

Rupan Selvaratnam, CH சொன்னது…

Your greeting poem is super

Ramesh, DK சொன்னது…

Very nice poem. congrats to Anthimaalai and Vedha aunty.

Arul, DK சொன்னது…

அருமையான கவிதை சகோதரி.நீங்கள் ஒரு 'கவிதாயினி' என்று இவ்விடத்திலும் நிரூபித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

பெயரில்லா சொன்னது…

Dear brothers...Rupan Selvaratnam, Ramesh; Arul thank you so much.This is a good manure for me. god bless you and your family.

M.R சொன்னது…

வாழ்த்துக்கள்

Muruganandan M.K. சொன்னது…

அருமையாக கவிமாலையாகப் பாராட்டு. சிறப்பான படைப்பு

anthimaalai@gmail.com சொன்னது…

அருமையான வாழ்த்துக் கவிதைக்காக சகோதரி 'கோவைக்கவி' அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள். ஒரு 'வாழ்த்துக்கவிதை' மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் என்ற முழு அக்கறையோடு முயற்சி செய்து எழுதியிருக்கிறார் என்பது தெரிகிறது. பாராட்டுக்களும் உரித்தாகுக.
"ஒன்றுபட்டு உயர்வோம்"
என்றும் வேண்டும் இந்த இனிய உறவு.

மிக்க அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்.
ஆசிரியர்
www.anthimaalai.dk

V. Gayathiry, USA சொன்னது…

Your greeting poem is so good. You have proven that a greeting not just are a few lines of words. Only a professional poet can write like you. GREAT.

அபிராம் சொன்னது…

வாழ்த்துக்கள். நல்ல வாழ்த்து கவிதை

பெயரில்லா சொன்னது…

Dear brother M.R - Dr.M.K.Muruganantham Sir, and anthimaalai. Mikka nanry. God bless you all.

கருத்துரையிடுக