சனி, செப்டம்பர் 24, 2011

அந்திமாலைக்கு ஆண்டுநிறைவு வாழ்த்து.

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே !
அந்திமாலை ஓராண்டு நிறைவு எய்தியதை முன்னிட்டு வாழ்த்துக்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் எனது பாடசாலை நண்பனும், அந்திமாலையின் வாசகருமாகிய 'சுதா' என்றழைக்கப்படும் அமலதாஸ் அவர்கள் பிரான்சிலிருந்து எனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைத்த ஒரு மின்னஞ்சலை உங்கள் பார்வைக்காகத் தருகிறேன். இம்மடலில் அவர் 'பரிமளகாந்தன்' எனக் குறிப்பிட்டிருப்பது என்னை நல்ல முறையில் கல்வி கற்க வைத்து, ஒரு பட்டதாரியாக உருவாக்கிய எனது மாமாவை (தாய்மாமன்)என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
உங்களன்புள்ள
இ.சொ.லிங்கதாசன் 

இதோ உங்கள் பார்வைக்கு சுதாவின் மடல்:

அந்திமாலைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
அதன் ஆசிரியர் லிங்கதாசனுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நிற்க ,
உங்கள் தளத்தை நீங்கள் தொடங்கிய நாளிலிருந்து ஏறக்குறைய ஒவ்வொருநாளும் நுனிப்புல்லாக மேய்ந்தோ,
 அடிக்கரும்பாக சுவைத்தோ பார்த்திருக்கிறேன்.
 தாசனின் ஆழ்ந்த படிப்பும், அபார உழைப்புமாய் அந்திமாலை சிறப்பாகவே வளர்ந்து  வருகிறது. 
குறுகிய வட்டத்துக்குள்  சுழலாமல் பரந்து பட்டு எல்லாத்திசைகளையும் தொட்டு விரிந்து வருகிறது. 
இவ்வாறு மென்மேலும் வளர்ந்து மணம்பரப்ப எங்களின் வாழ்த்துக்களும், ஆதரவும் எப்போதும் கூடவரும்.

"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மருமகனை 
சான்றோன் எனக்கேட்ட மாமா."
--அந்திமாலையைப் போன்றே பரிமளகாந்தன் அண்ணாவுக்காக சற்றே மாற்றப் பட்ட குறள்.
என்றும் அன்புடன்

சுதா.
21.09.2011

1 கருத்து:

இ. சொ. லிங்கதாசன், www.anthimaalai.dk டென்மார்க். சொன்னது…

சுதாவின் வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.
"ஒன்றுபட்டு உயர்வோம்". என்றும் வேண்டும் இந்த இனிய உறவு.

கருத்துரையிடுக