புதன், செப்டம்பர் 21, 2011

வாசகர்களின் கவனத்திற்கு

அந்திமாலையின் கருத்துரைப் பகுதியில்(Comments) தனி மனிதத் தாக்குதல்களோ, அவசியமில்லாத, அநாகரிகமான கருத்துக்களோ இடம்பெறுவதைத் தவிர்க்கும் முகமாகவும், ஏனைய இணையத் தளங்களோடு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாகவும், வாசகர்கள் எழுதும் கருத்துரைகள் (Comments) அந்திமாலையின் ஆசிரிய பீடத்தின் 'வடிகட்டலின்' பின்னரே இடம்பெறுகிறது என்பதை அந்திமாலைக்குத் தினமும் வருகை தரும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். இந் நடைமுறையைக்   கடந்த ஜூலை மாதம் தொடக்கம் செயற்படுத்தி வருகிறோம்.
நேற்றைய தினமும் (20.09.2011), இன்றைய தினமும் (21.09.2011) அந்திமாலைக்கு வாழ்த்து மற்றும் கருத்துரைகள் எழுதிய வாசகர்களில் சிலர் உங்கள் கருத்துக்கள் உடனடியாக அந்திமாலையில் இடம்பெறாததால் சிறிது குழப்பம் அடைந்தீர்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது. இதனாலேயே உங்களில் சிலர் கருத்துரைப் பகுதியில் எழுதிய கருத்துக்களை எமக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைத்துள்ளீர்கள். உங்கள் கருத்துரை உடனடியாக இடம்பெறாவிட்டால் குழப்பமடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அனைவரது கருத்துக்களும் ஒரு சில மணி நேரத் தாமதத்தின் பின்னர் கண்டிப்பாக உங்கள் 'அந்திமாலையில்' இடம்பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாசகர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்.

இங்ஙனம் 
ஆசிரியர் 
அந்திமாலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக