வியாழன், செப்டம்பர் 08, 2011

வாழ்வியல் குறள் - 11


ஆக்கம்: வேதா இலங்காதிலகம்.
டென்மார்க்.

குழந்தைச் செல்வம்

குழந்தைச் செல்வத்தை மக்கள் இளமைக் 
காலத்தில் பெறுதல் ஆரோக்கியம்.
குறையற்ற குழந்தைச் செல்வத்தை எமது
குறையற்ற உடல் உற்பத்தியாக்குகிறது.
குழந்தையைப் பெற்றால் மட்டும் போதாது
குறைவறப் பராமரித்தல் அவசியம்.
உலகிலேயே இனிய இசை  தம்
மக்கள் மழலைச் சொற்களே.
உலகத்துத் துன்பங்களை  ஒரு மழலை
உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்.
சின்னக் கைகளின், கால்களின் அபிநயத்திற்கு
என்ன விலையும் கொடுக்கலாம்.
நல்ல பிள்ளைகள் பெற்றவருக்கும், பெற்றவர் 
நல்லவரானால் பிள்ளைகளுக்கும் பொக்கிஷமே.
உலகிலேயே பெரிய துன்பம் பிள்ளைகள்
உருப்படாது உருவாகுதல் என்பது.
குழந்தைச் செல்வம் நவீன உலகில்
குழப்பமுடைய  செல்வமாம் சிலருக்கு.
குற்றமற்ற பளிங்கு மனதால் தெய்வத்திற்கு
குழந்தையை சமன் படுத்துகிறோம்.

3 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

அருமை…

குழல் இனிது யாழ் இனிது என்பார் தம்
மக்கள் மழலைச் சொல் கேளாதார் .

உலகில் மழலைச் சொல்லை விட இனிமை என்று எதை யார் சொன்னாலும் அது தவறான ஒன்றாகவே இருக்கும்.

பெறாதவர்களிடமும் தாய்மையைச் சுரக்க வைக்கும் இறைவனின் இனிய படைப்பு மழலை என்பது…

Seelan சொன்னது…

Thanks Vetha we have to try full help to our children, ours children are give to as all,happys

பெயரில்லா சொன்னது…

அந்திமாலை! வாழ்வியல் குறளை சிறிது காலம் நிறுத்தி வைக்கலாமே! நேயர்கள் கருத்திட பஞ்சிப் படுகிறார்கள்..என்பதால். ....விநோ, சீலன் மிக்க நன்றி உங்களுக்கு. இறை ஆசி கிட்டட்டும்.

கருத்துரையிடுக