நாட்டின் பெயர்:
டென்மார்க்கில்(டேனிஷ் மொழியில்) இந்நாட்டை எல்பன்பின்குஸ்டன்(Elfenbenkysten) என அழைக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்பதை டென்மார்க் நாட்டு வாசகர்கள் நினைவில் கொள்க.
இந்நாட்டின் பெயர் 26 வருடங்களுக்கு முன்பே பிரெஞ்சுப் பெயராக மாற்றப் பட்ட பின்னரும் BBC போன்ற மேற்கத்தைய ஊடகங்கள் தற்போதும் இந்நாட்டின் ஆங்கிலப் பெயராகிய 'ஐவரி கோஸ்ட்' என்பதையே உபயோகித்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
கோட் டி வோர் குடியரசு (Republic of Cote d'Ivoire)
அமைவிடம்:
மேற்கு ஆபிரிக்கா
எல்லைகள்:
வடக்கு - மாலி, புர்கினா பாசோ
தெற்கு - கினிய வளைகுடா
கிழக்கு - கானா
மேற்கு - லைபீரியா, கினியா
சமயங்கள்:
இஸ்லாம் 38.6 %
சமயம் சாராதோர் 16.7 %
எல்லைகள்:
வடக்கு - மாலி, புர்கினா பாசோ
தெற்கு - கினிய வளைகுடா
கிழக்கு - கானா
மேற்கு - லைபீரியா, கினியா
தலைநகரம்:
யமுசூக்ரோ (Yamoussoukro)
பெரிய மற்றும் வணிகத் தலைநகரம்:
அபிஜான்(Abidjan)
அலுவலக மொழி:
பிரெஞ்சு, மற்றும் 60 உள்ளூர் மொழிகள்.
சமயங்கள்:
இஸ்லாம் 38.6 %
கிறீஸ்தவம்(ரோமன் கத்தோலிக்கம்) 32.8 %
பழமைவாத சமயங்கள் 11.9 %சமயம் சாராதோர் 16.7 %
ஆயுட்காலம்:
ஆண்கள் 55.7 வருடங்கள்
பெண்கள் 57.8 வருடங்கள்
கல்வியறிவு:
கல்வியறிவு:
48.7 % (பெண்களின் கல்வியறிவு வீதம் மிகவும் குறைவு ஆகும்)
ஆட்சிமுறை:
ஜனாதிபதி தலைமையிலான குடியரசு
ஜனாதிபதி:
அல்சானே உவட்டரோ (Alassane Ouattara) *இது 27.09.2011 அன்று உள்ள நிலவரம் ஆகும்.
பிரதமர்:
குலாமே சோரோ (Guillaume Soro)
பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை:
07.08.1960
பரப்பளவு:
322,460 சதுர கிலோ மீட்டர்கள்
சனத்தொகை:
20,617,068 (2009 மதிப்பீடு)
நாணயம்:
மேற்கு ஆபிரிக்க பிராங் (West African franc / CFA /XOF)
இணையத் தளக் குறியீடு:
.ci
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00+225
விவசாய உற்பத்திகள்:
கோப்பி(காப்பி), கொக்கோ, வாழை, தென்னை, சோளம், அரிசி, மரவள்ளிக் கிழங்கு, வற்றாழைக் கிழங்கு, சீனி, பருத்தி, ரப்பர், மரங்கள்.
தொழிற்சாலைகள்:
உணவு பதனிடல், மதுபானங்கள் உற்பத்தி, மரத்தளபாடங்கள் தயாரித்தல், எண்ணெய் சுத்திகரித்தல், கனரக வாகனங்கள் பொருத்துதல், பேருந்துகள் பொருத்துதல், துணிவகை தயாரிப்பு, உரம் தயாரிப்பு, கட்டிடப் பொருட்கள் தயாரிப்பு, கப்பல் கட்டுதல், கப்பல் பழுது பார்த்தல்.
ஏற்றுமதிகள்:
கொக்கோ(உலகில் கொக்கோ ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது), கோப்பி(காப்பி), மரம், பெற்றோலியம், பருத்தி, வாழைப்பழம், அன்னாசிப் பழம், மர எண்ணெய்(பாமாயில்), மீன்.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
- உலகின் மிகப்பெரிய கொக்கோ ஏற்றுமதி நாடு. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் நீங்கள் விரும்பி உண்கின்ற பிரபலமான சாக்லேட்டுகள் அனைத்தும் இந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'கொக்கோவிலிருந்தே' தயாரிக்கப் படுகின்றன.
- இந்நாட்டின் ஏற்றுமதியில் 40% கொக்கோ ஏற்றுமதியாகும்.
- நாடு விவசாயம், ஏற்றுமதி எனப் பல வகைகளிலும் வருமானத்தைச் சம்பாதித்த போதிலும் நாட்டு மக்களில் 25% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
- இந்நாடு கடந்த இருபது வருடங்களில் பல தடவைகள் உள்நாட்டு யுத்தத்தையும், இராணுவச் சதிப்புரட்சியையும் சந்தித்துள்ளது.
- கடைசியாக இவ்வருடம் ஏப்பிரல் மாதத்தில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு, உள்ளநாட்டு யுத்தம் போன்றவற்றால் மேலைத்தேய ஊடகங்களில் இடம் பிடித்தது.
- கடைசியாக இடம்பெற்ற உள்நாட்டுக் கலவரத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இறந்தவர்கள், காணாமற் போனோர் பற்றி சரியான தகவல்கள் இல்லை.
- இந்நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்கு என சுமார் 9000 வரையிலான ஐ.நா.அமைதி காக்கும் படையினர் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் நிலை கொண்டுள்ளனர்.
- கடந்த காலங்களில் நடந்து முடிந்த வன்முறைகளால் இதுவரையில் சுமார் 7 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
- நாட்டின் சுகாதார நிலையும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
- பிறக்கின்ற 100 குழந்தைகளில் 12 குழந்தைகள் இறந்து பிறக்கின்றன அல்லது பிறந்தவுடன் இறந்து விடுகின்றன.
- ஒரு லட்சம் நோயாளிகளுக்கு 12 மருத்துவர்கள் எனும் நிலை காணப் படுகிறது.
- நாட்டின் சனத் தொகையில் 3.4 % பேர் எயிட்ஸ் நோயாளிகள் ஆவர்.
- இந்நாட்டில் எயிட்ஸ் நோயின் தாக்கத்தினால் கடந்த 2009 ஆம் ஆண்டுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஆகும்.
- தற்போதைய மதிப்பீட்டின்படி இந்நாட்டில் 450,000 எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.
2 கருத்துகள்:
ஒரு லட்சம் நோயாளிகளுக்கு 12 மருத்துவர்கள் எனும் நிலை காணப் படுகிறது.
நல்ல முயற்சி. வாழ்த்துகள் ஐவரி என்றால் தந்தம் அல்லவா! யானைத் தந்தம் நிறையக் கிடைக்குமோ! அதனால் அந்தப் பெயரோ?
நீங்கள் கூறுவது மிகவும் சரியானதே. ஐவரி(Ivory) என்றால் 'யானைத் தந்தம்' என்று பொருள். 18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் இந்நாட்டைக் கைப்பற்றியபோது இங்கு 'யானைத் தந்தங்கள்' பரவலாகக் கிடைத்தன. அதன் காரணமாகவே இந்நாட்டிற்கு இப்பெயர் உருவாகியது. தற்போது இங்கு யானைகளும் யானைத் தந்தங்களும் அருகி விட்டன. யானைத் தந்தங்களுக்காகவும், இறைச்சிக்காகவும் யானைகள் வேட்டையாடப் பட்டதால் இந்த நிலை. இருப்பினும் பெயர் மட்டும் நின்று நிலைத்துள்ளது.
கருத்துரையிடுக