கோஸ்ட்டாரிக்கா (Costa Rica)
வேறு பெயர்கள்:
கோஸ்ட்டாரிக்காக் குடியரசு
அமைவிடம்:
மத்திய அமெரிக்கா
எல்லைகள்:
வடக்கு - நிக்கரகுவா
தெற்கு - பனாமா
மேற்கு - பசுபிக் சமுத்திரம்
கிழக்கு - கரீபியன் கடல்
தலைநகரம்:
சன் ஜோச (San Jose)
*உலகில் 'சன் ஜோச' எனும் பெயரில் பல நாடுகளிலும் நகரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. ஸ்பானிய மொழியில் 'சன் ஜோச' என்றால் 'புனித யோசேப்'(இயேசுவின் தந்தை) என்று பொருளாகும்.
அலுவலக மொழி:
ஸ்பானிஷ்
அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்:
மெகதெலியு (Mekatelyu) பிரிபிரி(Bribri), ஆங்கிலம்.
இனங்கள்:
வெள்ளையர் (மெஸ்டிசோக்கள் உட்பட) 94% , கறுப்பர் 3 %, அமேர் இந்தியர்கள், சீனர்கள், மற்றும் ஏனையோர்.
ரோமன் கத்தோலிக்கம் 76%, இவாஞ்சலிக்கல் கிறீஸ்தவம் 13 % , ஜெகோவாவின் சாட்சிகள், புரட்டஸ்தாந்துகள், மற்றும் சமயம் அல்லாதோர்.
94 %
ஆயுட்காலம்:
ஆண்கள் 75 வருடங்கள்
பெண்கள் 80 வருடங்கள்
அரசாங்க முறை:
ஜனாதிபதி தலைமையிலான ஜனநாயகக் குடியரசு.
ஜனாதிபதி:
லாரா சின்சில்லா (Laura Chinchilla) *இது 06.09.2011 அன்று உள்ள நிலவரமாகும்.
01.07.1823
மத்திய அமெரிக்க மாகாணங்களிடமிருந்து சுதந்திரம்:
21.03.1847
ஸ்பெயின் நாட்டிடமிருந்து சுதந்திரம்:
10.05.1850
பரப்பளவு:
51,100 சதுர கிலோ மீட்டர்கள்.
சனத்தொகை:
4,608,426 (2010 மதிப்பீடு)
நாணயம்:
கோஸ்டா ரிக்கன் கொலன் (Costa Rican Colon / CRC)
இணையத் தளக் குறியீடு:
.cr
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
இயற்கை வளங்கள்:
நீர்மின்சாரம், காடு மற்றும் காட்டிலிருந்து கிடைக்கும் பல வகையான பொருட்கள், மீன்பிடி.
விவசாய உற்பத்திகள்:
வாழை, அன்னாசி, காப்பி, பழங்கள், மூலிகைகள், கரும்பு, சோளம், அரிசி, அவரை, உருளைக் கிழங்கு, மாட்டிறைச்சி, கோழிப் பண்ணைகள், பாற் பண்ணைகள், மரங்கள்.
தொழிற்சாலைகள்:
சிறு கைத்தொழில்கள், உணு பதனிடல், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி, துணிவகை, உடைகள், கட்டிடப் பொருட்கள், உர வகைகள், பிளாஸ்டிக் பொருட்கள்.
ஏற்றுமதிகள்:
வாழை, அன்னாசி, காப்பி, பழங்கள், மூலிகைகள், சீனி, மாட்டிறைச்சி, கடலுணவுகள், மின்சார உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள்.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
- உலகில் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் இல்லாத ஒரே நாடு.
- தற்போதைய நிலவரப்படி உலக வல்லரசுகள் எல்லாம் 'பொருளாதார நெருக்கடியில்' ஆழ்ந்து போய் இருக்கும் நிலையில், இத்தாக்கத்தால் எந்தவித பாதிப்பையும் எதிர்கொள்ளாத குட்டி நாடுகளுள் ஒன்று. இதற்கு இந்நாட்டின் பொருளாதாரக் கொள்கையே காரணமாகும்.
- நாட்டு மக்களில் 16 % பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
- உலகிலுள்ள நாடுகளில் பசுமையான நாடுகள் வரிசையில் முதலாமிடத்தில் உள்ளது.நாட்டில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று மரம், செடி, கொடிகளும், நீரோடைகளும், குளிர்ந்த அருவிகளும், நீர்வீழ்ச்சிகளும் காணப் படுகின்றன.
- மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்டு மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் இந்நாட்டு மக்கள் வாழ்கின்றனர்.
- லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இயற்கையும், அமைதியான சூழலும் நிலவும் நாடு. ஆண்டொன்றிற்கு இருபது லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தருகின்றனர்.
- 1949 ஆண்டில், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் நாட்டின் படைக் கட்டமைப்புகள் கலைக்கப் பட்டபோது 'படைவீரர்கள்' அனைவரும் ஆசிரியப் பணியில் சேர்க்கப் பட்டனர். தற்போது இந்நாடு 'கல்வியறிவில்' ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக உயர்ந்து நிற்கிறது.
2 கருத்துகள்:
''...உலகில் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் இல்லாத ஒரே நாடு...''Like a nanthavanam...may be.....
Thank you anthimaalai.....
Thanks for info about Costa Rica.
கருத்துரையிடுக