இன்றைய சிந்தனைக்கு
பகிர்வு:கௌசி, ஜேர்மனி
வாசித்துச் சுவைத்தது.
புத்தரிடம் ஆத்திரம் கொண்ட ஒருமனிதன், அவரை அணுகி ஆத்திரம் தீரும்மட்டும் திட்டித் தீர்க்கின்றான். "உன்னையே எல்லோரும் விரும்புவதற்கு நீ என்ன பெரிய மனிதனா? நீ சொல்பவற்றை எல்லாம் எல்லோரும் கேட்கவேண்டும் என்று நினைக்கின்றாயா?" என்று பலவாறாக அவரில் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகத் திட்டித் தீர்க்கின்றான். புத்தரும் நிதானமாகக் கேட்கின்றார். "ஒருவருக்கு ஒரு பரிசில்(பரிசு) பொருளொன்று அவருக்குக்கொடுப்பதற்காக வாங்கிச் செல்லுகின்றீர்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கின்றார். அந்த மனிதனும் "அதை நானே வைத்திருப்பேன்" என்று கூறுகின்றான். அதற்குப் புத்தரும் "அப்படியேநீங்கள் கூறிய வார்த்தைகள் எனக்குள்ளே புகுந்து கொள்ளவில்லை. அதற்கு உரிமையுள்ளவர் நீங்களாகின்றீர்கள்" என்று கூறி முடிக்கின்றார். அடுத்தவரை வெறுப்பவர்கள் தமக்குத் தாமே வெறுப்பைக் கொண்டவர்கள் ஆகின்றார்கள்.
5 கருத்துகள்:
நல்ல தத்துவம் .
Super.
நல்ல விடஜம் , பாராட்டுக்கள் .
Nalla thakaval.
எனக்கு இப் பகுதி மிகவும் பிடிக்கும்
கருத்துரையிடுக