புதன், செப்டம்பர் 07, 2011

வினை தீர்க்கும் விநாயகன்

கடந்த சனிக்கிழமை (03.09.2011) இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், மண்டைதீவுக் கிராமத்தில் உள்ள திருவெண்காட்டுச் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற 'துவஜாரோகண' (கொடியேற்ற) வைபவத்தின் காணொளியைப் புலம்பெயர்ந்து வாழும் மண்டைதீவு, அல்லைப்பிட்டி மக்களுக்காகவும், உலகப் பரப்பில் வாழும் விநாயகப் பெருமானின் அடியார்களுக்காகவும் தருகிறோம்.

கொடியேற்றம் -2011(பகுதி-01)


கொடியேற்றம் -2011(பகுதி-02)

காணொளி உதவி: சென்னியூர் இணையம் மற்றும் You tube

5 கருத்துகள்:

senniyoorfm சொன்னது…

திருவெண்காடு சித்தி விநாயகனின் கொடியேற்றக்காணொளியை உங்கள் தளத்தின் வாயிலாக விநாயகப் பெருமானின் அடியவர்களுக்கு காட்சிப்படுத்தியமைக்கு நன்றிகள்.

என்றென்றும் நன்றியுடன்,
சென்னியூர் இணையம்.

அந்திமாலையின் வாசகர் சொன்னது…

இந்தப் பதிவினை நானும் பார்க்க அனுமதி உண்டா ? ஏனெனில் நான் மண்டைதீவையோ / அல்லைப்பிட்டியையோ பிறப்பிடமாகக் கொண்டவளில்லை. இப்படிக்கு அந்திமாலையின் வாசகர் ,ஆனால் நான் ஒரு விநாயகர் பக்தை

ஆசிரியர், அந்திமாலை. சொன்னது…

அன்பான சகோதரிக்கு,
முதலில் 'தவறைச்' சுட்டிக் காட்டிய உங்களுக்கு நன்றிகள்.நிச்சயமாக அந்திமாலையின் பதிவுகள் அனைத்து வாசகர்களுக்கும் பொதுவானவை என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழில் எழுதும்போது மிக அவதானம் அவசியம் என்பது நாங்கள் கற்றுகொண்ட பாடம்.இருப்பினும் புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களில் பலரது ஒற்றுமை உணர்வையும்???? பரந்த மனப்பான்மையையும்??? நீங்கள் அறிவீர்கள். எங்கோ ஒரு கிராமத்தில் நடைபெறும் ஆலய வைபவத்தை 'அந்திமாலை' வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே நாம் அவ்வாறு இரண்டு கிராமத்து மக்களைக் குறிப்பிட்டு எழுதக் காரணம்.நல்லூர் போன்ற ஆலயங்களின் விழாக்கள் நடைபெறும்போது அவை சம்பந்தமான புகைப்படங்கள், காணொளிகள், செய்திகள் போன்றவை சென்றடையும் பரப்பு(Focus area),மக்கட் கூட்டம்(Mass), கவனக் குவிப்பு(Concentration) போன்றவற்றையும், ஒரு கிராமத்தில் உள்ள ஆலயத்தின் நிகழ்வு சம்பந்தமான செய்தி சென்றடையும் பரப்பு, மக்கட் கூட்டம், பிரபலத் தன்மை(Publicity)போன்றவற்றிற்கும் உள்ள வேறுபாட்டையும், எமது நிலைப்பாட்டையும் உணர்ந்து கொள்வீர்கள் என்று உறுதிபட நம்புகிறோம்.

அந்திமாலையின் வாசகர் சொன்னது…

நிச்சயமாக .இது ஒரு தவறு என்பது அல்ல. என்ன ஆனால் இப்படி நீங்கள் ஊரை குறிப்பிட்டு எழுதியதை பார்த்ததும் அந்திமாலையையும் அதன் ஒவ்வொரு சிறிய விடயங்களையும் உன்னிப்பாக கவனித்து வாசித்து வருவேன் .இந்தக் கூற்று என்னை சிறிது வேதனைப்படுத்தியது. இருந்தாலும் அதற்கான உங்கள் விளக்கம் பார்த்த போது அதற்கான காரணம் புரிந்தது. அதுவும் உண்மைதான் .எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பவர்கள் இல்லையே.
நன்றி உங்கள் கருத்திடலுக்கு.

Sutha சொன்னது…

அரோகரா, விநாயகரே/.எம் மக்கள் துயரை தீர்த்து. மகிழ்வோடு வாழ வையும் ஐயா" God will give every body good life

கருத்துரையிடுக