ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

உயிர்த்த ஞாயிறு தினக் கவிதை

இறவா உடலம் நிறைவாய் எழுந்தது.


வீரம் மிகுந்த உடலம்
விவேகம் மிகுந்த உடலம்
பாரச்சிலுவையின் பழுவினால்
பலமுறை விழுந்த உடலம்
இரக்கமற்ற ஈனர்களினால்
இடித்து நொருக்கிய உடலம்
சீரமைய உயிர்த்து எழுந்தது
சாவை வென்ற சத்தியம்

கானம் பாட விண்ணவர்
கனகம் சொரிய மண்ணவர்
மோனம் பாட முத்தமிழ்
மீட்பை தந்த ஒளிவடிவு
மானம் இழந்து தலைசாயா
மாண்புமிகு நல்விடிவு
ஈனம் போக்கும் உத்தமர்
ஈடில்லா உவமை தத்துவர்
கூனம் நிமிர எழுந்தனர்
குவலய மக்கள் மகிழ்ந்தனர்

புனைவு: 'கவி வித்தகர்' சேவியர் பாலசிங்கம் அல்லைப்பிட்டி, இலங்கை 

2 கருத்துகள்:

selan சொன்னது…

கவிதை தந்த எம் கவிஞ்ஞர் பாலசிங்கம் அவர்களுக்கு எமது அன்பான வாழ்த்துக்கள் மேன்மலும் உங்கள் கவிதைகளை எதிர் பார்க்கின்றோம்

Reginold, U.K சொன்னது…

nalla kavithai,paaraaddukkal.

கருத்துரையிடுக