செவ்வாய், ஏப்ரல் 05, 2011

நாடுகாண் பயணம் - பொலிவியா





நாட்டின் பெயர்:
பொலிவியா (Bolivia)

முழுப் பெயர்:
பல் இனங்களின் பொலிவிய அரசு(Plurinational State of Bolivia)

அமைவிடம்:
தென் அமெரிக்கா


எல்லைகள்:
வடக்கு,கிழக்கு:பிரேசில் 
தெற்கு:பராகுவே மற்றும் ஆர்ஜென்டீனா
மேற்கு: சிலி மற்றும் பெரு

தலைநகரம்:
சுக்ரெ(Sucre)

மிகப் பெரிய நகரம்:
சண்டா குரூஸ் டி லா சியெரா(Santa Cruz de la Sierra) 


பரப்பளவு:
1,098,581 சதுர கிலோமீட்டர்கள் 

சனத்தொகை:
10,907,778(2010 மதிப்பீடு)


அலுவலக மொழிகள்:
ஸ்பானிஷ், குவேகுவா(Quechua), அய்மாரா(Aymara) மற்றும் 34 பிராந்திய மொழிகள்.


இனங்கள்:
55% அமெர் இந்தியர்கள்(Amerindians, quechua and Aymara), 30% மெஸ்டிசோ, 15% வெள்ளையர்கள்(லத்தீன் அமெரிக்கர்கள்)


சமயங்கள்:
78 % ரோமன் கத்தோலிக்கம்.
16 % புரட்டஸ்தாந்துகள் 
3 % ஏனைய கிறீஸ்தவப் பிரிவுகள் 
சிறிய தொகையில் இஸ்லாமியர்கள், மற்றும் யூதர்கள்.

கல்வியறிவு:
86 %

ஆயுட்காலம்:
ஆண்கள்:64 வருடங்கள் 
பெண்கள்: 70 வருடங்கள் 

ஆட்சிமுறை:
ஜனாதிபதி தலைமையிலான கூட்டாட்சி 

ஜனாதிபதி:
ஈவோ மோராலஸ்(Evo Morales) 

துணை ஜனாதிபதி:
எல்வாரோ கார்சியா(Garcia Linera Alvaro)

சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்ட தேதி:
6.08.1825

ஸ்பெயின் நாட்டினால் முழுச் சுதந்திரம் வழங்கப்பட்ட ஆண்டு:
21.07.1847

நாணயம்:
பொலிவியானோ (BOB)

இணையத் தளக் குறியீடு:
.bo

சர்வதேசக் தொலைபேசிக் குறியீடு:
00-591


இயற்கை வளங்கள்:
காடு, பெற்றோலியம், தகரம்.


வருமானம் தரும் தொழில்கள்:
காடு சம்பந்தமான கைத்தொழில்கள், மீன்பிடி, சுரங்கக் கைத்தொழில்.

ஏற்றுமதிகள்:
துணிகள், உடைகள், சுத்திகரிக்கப்பட்ட உலோகங்கள், பெற்றோலியம்,கொக்கோ.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்பதற்குப் பயன்படும் 'கொக்கோ' அதிகமாக விளையும் நாடுகளுள் ஒன்று.
  • லத்தீன் அமெரிக்காவிலுள்ள வறிய நாடுகளுள் ஒன்று.
  • இந்நாட்டின் 60 % மக்கள் வறுமைக் கோட்டில் வாழ்கின்றனர்.
  • உலகிலேயே மிகவும் உயரத்தில் இருக்கும் நகரமாகிய லா பாஸ்(La Paz) இந்நாட்டிலேயே உள்ளது.
  • கியூபா உட்பட பல லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்காகப் போராடியவரும்,'கெரில்லாப் போராட்டத்தின் தந்தை' எனவும் வர்ணிக்கப் படும் சே குவேரா(Che Guevara) இந்நாட்டில் வைத்து 9.10.1967 இல் சுட்டுக் கொல்லப் பட்டார்.
  • போதை வஸ்து உற்பத்தி மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோர் அதிகமுள்ள நாடுகளுள் ஒன்று. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக