செவ்வாய், ஏப்ரல் 12, 2011

நாடுகாண் பயணம் - போஸ்னியா

நாட்டின் பெயர்:
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (Bosnia and Herzegovina)


அமைவிடம்:
தெற்கு ஐரோப்பா (பால்கன் வளைகுடா)

எல்லைகள்:
வடக்கு,தெற்கு,மேற்கு - குரோசியா 
கிழக்கு - செர்பியா 
தென்கிழக்க - மொண்டநிக்ரோ

பரப்பளவு:
51,209 சதுர கிலோ மீட்டர்கள் 

சனத்தொகை:
3,842,566 (2011 மதிப்பீடு)

தலைநகரம்:
சரஜீவோ(Sarajevo)


ஆட்சிமுறை:
பிரதேச சுயாட்சிக் குடியரசு.

அலுவலக மொழிகள்:
போஸ்னியன், குரோசியன், செர்பியன்.


சமயங்கள்:
முஸ்லீம்:40 %
பழமைவாதக் கிறீஸ்தவம்:31 %
ரோமன் கத்தோலிக்கம்:15 %
ஏனையோர்: 14 %

இனங்கள்:
போஸ்னியர்கள் 48 %
செர்பியர்கள் 37.1 %
குரோசியர்கள் 14.3 %

கல்வியறிவு:
96.7 %


ஆயுட்காலம்:
ஆண்கள்:75 வருடங்கள் 
பெண்கள்: 82 வருடங்கள் 

உயர் பிரதிநிதி:
வலன்டீன் இன்ஸ்கோ(Valentin Inzko)



பிரதமர்:
நிக்கொல ஸ்பிரிஸ்(Nikola spiric)

முன்னாள் யூகோஸ்லாவியாவிடமிருந்து சுதந்திரம்:
1.03.1992 

நாணயம்:
மார்க்(Convertible Mark)

 

இணையத் தளக் குறியீடு:
.ba

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-387

கனிய வளங்கள்(இயற்கை வளங்கள்):
நீர்மின்சாரம், நிலக்கரி, இரும்பு, பொக்சிட், மங்கனீஸ், செப்பு, குரோமியம், ஸிங், கோபால்ட், நிக்கல், களிமண், ஜிப்சம், உப்பு, மணல், காடுகள்.


ஏற்றுமதி:
உலோகங்கள், துணிவகை, மரத்தளபாடங்கள், கோதுமை, தானியங்கள், பழங்கள், காய்கறிகள்.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • முன்னாள் யூகோஸ்லாவியா உடைந்தபோது உருவான சிறிய நாடுகளில் ஒன்று.
  • ஐரோப்பாவில் 'எரியும் பிரச்சினை' எனவும், 'இன அழிப்பு' எனவும் வர்ணிக்கப் பட்டதால் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது.
  • முன்னாள் யூகோஸ்லாவியா எனும் நாடு  செர்பியா, குரோசியா உட்படப் பல சிறிய நாடுகளாக உடைந்தபோது, போஸ்னியாவிலும் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 20000 பேரைக் காணவில்லை என ஐ.நாவிடம் முறையிடப் பட்டுள்ளது.
  • கடந்த 90 களில் ஐரோப்பாவில் 'எரியும் பிரச்சினை' என வர்ணிக்கப் பட்ட யூகோஸ்லாவியப் பிரச்சனையில் 'இன அழிப்பு' நடைபெற்றதையும், ஒரு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை அடக்கியாள முற்பட்டதையும், தமது தீர்வை அச்சிறுபான்மை இனத்தின்மீது திணித்ததையும் மேற்கத்திய நாடுகள் கண்கூடாகக் கண்டுகொண்டன.
  • இந்நாட்டிலும் அதன் அண்டை நாடுகள் பலவற்றிலும் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து 60000 வரையான நேட்டோ படைகள் போஸ்னியாவில் நிலைகொண்டிருந்தனர். அங்கு அமைதி ஏற்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான நேட்டோ படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டு அமைதி காக்கும் பொறுப்பு ஐரோப்பிய ஒன்றியப் பாதுகாப்புப் படையினரின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. சுமார் 7000 வரையான ஐரோப்பிய ஒன்றியப் படையினர் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் நேட்டோவின் தலைமைச் செயலகம் ஒன்று இன்னமும் போஸ்னியாவின் தலைநகரமாகிய 'சரஜீவோ' வில் இயங்கி வருகிறது.
  • இப்பகுதிக்கான ஐ.நா. அமைதிகாக்கும் படையினர், இந்நாட்டின் அண்டை நாடுகளில் ஒன்றான 'கொசொவோ' வில் நிலை கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக