செவ்வாய், அக்டோபர் 05, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 3


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
'செட்டிநாடு உணவகங்கள்' எல்லாமே சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவையா? இதுதான் நான் திரு.பழனிச்சாமி அவர்களிடம் கேட்ட அடுத்த கேள்வி. அவர் கூறினார்: "உலகில் நூற்றுக்கு நூறு வீதம் பூரணமானவர் என்றோ (perfect person), தவறே செய்யாதவர் என்றோ யாரையும் காட்ட முடியாது. அதேபோல் ஆங்காங்கே சில தவறுகள் நிகழலாம், இருப்பினும் நானறிந்தவரை செட்டிநாடு உணவகங்கள் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவை. இதில் இன்னும் சில தகவல்களையும் குறிப்பிட்டாகவேண்டும். ஒரு காலத்தில் தமிழகத்தில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் செட்டிநாட்டவர்கள் மட்டுமே 'செட்டிநாடு மெஸ்' அல்லது 'செட்டிநாடு ரெஸ்டோரன்ட்' நடத்தி வந்தார்கள். ஆனால் அண்மைக் காலமாக பல புதிய செட்டிநாட்டு உணவகங்கள் உலகம் முழுவதும் தோன்றி விட்டன. இவற்றில் சிலவற்றின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால், அவைகளை நடத்துபவர்களுக்கும் 'செட்டிநாட்டுக்கும்' எவ்வித சம்பந்தமும் இருக்காது. வெறுமனே பெயர்ப் பிரபலத்திற்காக அவ்வாறு வைத்திருக்கிறார்கள், இது ஒரு வகை ஏமாற்றுவேலை" என்றார்.

"அப்படியானால் செட்டிநாட்டைச் சாராதவர்கள், அந்தப் பெயரில் உணவகம் ஆரம்பித்தால்  
அதைப் போலித்தயாரிப்பு(duplicate) என்றோ, அல்லது செட்டிநாட்டு உணவகம் என்ற நல்ல பெயரில் ஏற்பட்ட கலப்படம் என்றோ கூறலாமா? இது எனது அடுத்த கேள்வியாக இருந்தது. அவர் தொடர்ந்தார், "பல உணவகங்களுக்கும்(உதாரணமாக : KFC, MC Donalds, Pizza Hut), பல பொருட்களின் வியாபாரப் பெயர்களுக்கும்(உதாரணமாக Addidas, Nike,Nokia), ஏன் புத்தகங்களுக்குக் கூட காப்புரிமையோ(copyright), அல்லது தயாரிப்பு உரிமையோ(patent right) உள்ளன. ஆனால் இந்தச் செட்டிநாட்டு உணவகங்களுக்கு எந்தவிதமான தயாரிப்பு உரிமையும்(patent right) கிடையாது. யார் விரும்பினாலும் 'செட்டிநாடு உணவகம்' என்ற பெயரில் உணவகமொன்று ஆரம்பிக்கலாம். இது ஒரு துரதிர்ஷ்டமான நிலை" என்றார்.

"அப்படியானால் செட்டிநாட்டு மக்கள் சேர்ந்து அப்படி ஒரு உரிமையை வாங்கலாம் அல்லவா"? இது எனது அடுத்த கேள்வி. அவர் தொடர்ந்தார், "வாங்கியிருக்கலாம், வாங்கலாம், செய்திருக்கலாம். ஆனால் யாருமே முயற்சி செய்யவில்லை, 'பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற கேள்விதான் ஞாபகத்திற்கு வருகிறது, இவ்வாறான அக்கறையின்மையால் பல அபாயங்களும் உள்ளன" என்றார். அபாயங்களா? என்றேன் நான் குழப்பத்துடன். அவர் தொடர்ந்தார், " ஆம் அபாயங்கள்தான், கடந்த 1997 செப்டம்பரில் 'இந்தியாவின் பாரம்பரியச் சொத்தாகிய 'பாசுமதி' அரிசியை' சர்வதேசச் சந்தையிலும், சர்வதேசப் 'patent' உரிமைக் கழகத்திலும், அமெரிக்கா தனது சொத்து என்று வழக்குத் தொடர்ந்ததை உதாரணமாகக் கூறலாம்.
"என்னது, அரிசிக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடியதா"? என்றேன் வியப்பு மேலிட.
(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

1 கருத்து:

seetha சொன்னது…

உங்கள் கட்டுரை நன்றாக உள்ளது
எனது வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக