தொகுப்பு:
சி.சக்திதாசன்,
ஸ்கெயான், டென்மார்க்
- மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே.
- ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.
- மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது, ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.
- பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.
- மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.
3 கருத்துகள்:
நல்லா இருக்கிறது, இன்னும் பொன்மொழிகளை எதிர்பார்க்கின்றோம்.
நல்ல பலமொழிகள் நன்றிகள் பற்பல
மேலும் உங்கள் அறிவான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்
நன்றி
Good & Keep it up!!!
கருத்துரையிடுக