அங்கோலா
முழுப்பெயர்:
அங்கோலாக் குடியரசு
அமைவிடம்:
ஆபிரிக்கா
தலைநகரம்:
லுவாண்டா
நாட்டு எல்லைகள்:
- வடக்கு: கொங்கோ ஜனநாயகக் குடியரசு.
- தெற்கு: நமீபியா
- கிழக்கு: சம்பியா
- மேற்கு: அத்திலாந்திக் சமுத்திரம்
நாட்டின் பரப்பளவு:
1,246,700 சதுர கிலோமீற்றர்கள்
சனத்தொகை:
18,498,000 (2009 மதிப்பீடு)
நாணயம்:
கிவான்சா
கிவான்சா
நாட்டு மொழி:
அலுவலக மொழி - போர்த்துக்கேய மொழி
தேசிய மொழிகள் - கொங்கோ, சொக்வீ ,
வட உம்புண்டு, தென் உம்புண்டு.
அலுவலக மொழி - போர்த்துக்கேய மொழி
தேசிய மொழிகள் - கொங்கோ, சொக்வீ ,
வட உம்புண்டு, தென் உம்புண்டு.
அரசாங்கமுறை:
ஜனாதிபதியால் ஆளப்படும் குடியரசு.
ஜனாதிபதியால் ஆளப்படும் குடியரசு.
ஜனாதிபதி:
ஜோஸ் எடுவார்டோ டொஸ் சண்டோஸ்.
ஜோஸ் எடுவார்டோ டொஸ் சண்டோஸ்.
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
௦௦-244
சமயங்கள்:
93,5 % ரோமன் கத்தோலிக்கர்
4,7 % பழமைவாத இயற்கையியல் சமயம்,
0,6 % முஸ்லீம்கள்,
0,9 % அக்நோஸ்,
0,2 % நாத்தீகர்
93,5 % ரோமன் கத்தோலிக்கர்
4,7 % பழமைவாத இயற்கையியல் சமயம்,
0,6 % முஸ்லீம்கள்,
0,9 % அக்நோஸ்,
0,2 % நாத்தீகர்
கல்வியறிவு:
67,4%
67,4%
ஆயுட்காலம்:
47 வருடங்கள்
47 வருடங்கள்
பிரதான வருமானம் தரும் தொழில்துறை:பெற்றோலிய ஏற்றுமதி.
ஏற்றுமதிப்பொருட்கள்: வைரக்கற்கள், தங்கம், செப்பு.
கனியவளங்கள்: பெற்றோலியம், தங்கம், செப்பு.
வரலாற்றுக் குறிப்பு: 400 வருடங்களுக்கு மேலாக(1575 தொடக்கம்) போர்த்துக்கல்லிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது, சுதந்திரமடைந்த 1975 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டுவரை உள்நாட்டுப் போரால் சீரழிந்தது. உலகின் பெரிய நாடுகள் வரிசையில் 23 ஆவது இடத்தில் உள்ளது.
நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித்தரும் தகவல்கள்/தரவுகள் :
- குழந்தைகள் இறப்பு வீதம் அதிகமுள்ள நாடு. 1000 பிறப்புகளில் 130 மரணங்கள்.
- ஆபிரிக்கக் கண்டத்திலேயே அதிகளவில் பெற்றோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 2 ஆவது இடத்தில் இருந்தாலும், உலகிலுள்ள வறிய நாடுகளில் 2 ஆவது இடத்திலும், ஆபிரிக்காவிலுள்ள வறிய நாடுகளில் 44 ஆவது இடத்திலும் உள்ளது.
- 27 வருட உள்நாட்டு யுத்தத்தால் 40 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.
- மனித உரிமைகளை மதிக்காத நாடு.
- ஊழல், வறுமை, லஞ்சம் தலைவிரித்தாடுகின்ற நாடுகளுள் ஒன்று.
- ஊழல் நாடுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் உள்ளது.
- பழங்கள்(விசேடமாக வாழைப்பழம்), கோப்பி, போன்றவற்றை ஆபிரிக்க நாடுகளுக்கு அள்ளி வழங்கிய விளை நிலங்கள் 'கண்ணிவெடிகளால்' நிரம்பி வழிகின்றன.
- ஆபிரிக்க நாடுகளுக்கு பெருமளவில் உணவுப்பொருட்களை ஏற்றுமதிசெய்த நாடு, இன்று தனது உணவுத்தேவைக்காகத் தென்னாபிரிக்காவிடமும், போர்த்துக்கல்லிடமும் 'கையேந்துகிறது'
2 கருத்துகள்:
அடுத்த நடுகல் பற்றி அறிய ஆர்வம் உள்ள அனைவரும் விரும்பி vasibbarkal
உங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்ததற்கு நன்றி
மென்மேலும் வளர எம் ஆசிகள்
உங்கள் ஆக்கங்கள் அனைத்து மக்களுக்கும் தேவையானவை
கருத்துரையிடுக