திங்கள், அக்டோபர் 04, 2010

நாடுகாண் பயணம் - அல்ஜீரியாநாட்டின் பெயர்: 
அல்ஜீரியா 


முழுப்பெயர்:
அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு


அமைவிடம்: 
ஆபிரிக்கக் கண்டம் 


தலைநகர்: 
அல்ஜியர்ஸ் 


நாட்டு எல்லைகள்: 
வடகிழக்கு - துனீசியா 
கிழக்கு - லிபியா 
மேற்கு - மொராக்கோ 
தென்மேற்கு - மேற்கு சகாரா, மவுரிட்டானியா, மாலி 
தென்கிழக்கு - நைகர்
வடக்கு - மத்திய தரைக்கடல் 


நாட்டு மொழிகள்: 
அரபி, தமாசைட் & பிரெஞ்சு 


சமயம்: 
80% முஸ்லீம்கள், 20% கிறீஸ்தவம்(புரட்டஸ்தாந்து), மிகச்சிறிய அளவில் யூதர்கள்.


கல்வியறிவு: 
70% 


சனத்தொகை: 
ஏறக்குறைய 3 கோடியே 48 லட்சம் (2010 மதிப்பீடு)


நாட்டின் பரப்பளவு: 
2,381,741 சதுர கிலோ மீட்டர்கள்


அரசாங்க முறை: 
பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி முறை.


ஜனாதிபதி: 
அப்தல் அசீஸ் பூட்டபிளிக்கா 


பிரதமர்: அகமத் அவ்யாஹியா 


நாணயம்: 
அல்ஜீரியன் தினார் 


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு: 
00-213 

பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்த திகதி:
1962ஆம் ஆண்டு, ஆடி மாதம் 5ஆம் திகதி 

இந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருட்கள்:
பருத்தி, புகையிலை, ஒலிவ் எண்ணை/காய் , கோதுமை, பார்லி, ஓட்ஸ், பழங்கள், காய்கறிகள்.

கனிய வளங்கள்:
நிலக்கரி, பெற்றோலியம், எரிவாயு.

நாட்டின் பெருமைகளில் சில:
மத்திய தரைக்கடலில் உள்ள மிகப்பெரிய நாடு என்ற பெருமையும்,
ஆபிரிக்கக் கண்டத்தில், சூடானுக்கு அடுத்தபடியாக ஆபிரிக்காவின் இரண்டாவது பெரிய நாடு என்ற பெருமையோடு,
உலகில் உள்ள மிகப்பெரிய நாடுகளின் வரிசையில் 11 ஆவது இடத்திலும் உள்ளது.

கல்விப்பெருமை:
நம் நாட்டவர்கள், ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களைப் புகழ்ந்து பேசுவது போல, அராபியர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாட்டு மக்கள் அல்ஜீரியப் பல்கலைக் கழகங்களைப் புகழ்ந்து பேசுவர்.

சரித்திரக் குறிப்பு:
துருக்கியால் உருவாக்கப்பட்ட 'ஒட்டோமான்' இராச்சியத்தில் அல்ஜீரியா ஒரு பகுதியாக இருந்தது.
மிகப்பெரிய அளவில் அடிமைகள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆபிரிக்க நாடு.
அன்றுமுதல் இன்றுவரை மிகப்பலமான ஒரு இராணுவ பலமுள்ள ஆபிரிக்க நாடு.
பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளால் ஆளப்பட்டது.
17 ஆம் நூற்றாண்டு வரை அல்ஜீரியர்கள் மிகப்பெரும் கடற் கொள்ளையர்களாக இருந்து, ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் சவாலாக விளங்கினர்.
இந்நாடு சீனா மற்றும் ரஷ்யாவிற்கு நேசநாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக