ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
தனது நண்பனாகிய அன்டோனியோ, தனது படகுப்பயணத் திட்டத்தைக் கேட்டதும், பயந்தாங்கொள்ளியாக தப்பித்து ஓடுகிறான் என்பதைத் துணிச்சலுள்ள சிறுவன் கொலம்பஸ் ஒரு நொடியில் புரிந்து கொண்டான். அவன் கலங்கவுமில்லை, பதட்டப்படவுமில்லை, தனது சவால்நிறைந்த திட்டத்தைக் கைவிடவுமில்லை. அவன் சிந்தனையில் நின்றதெல்லாம், தன் பெற்றோர் தன்னைத் தேடுவதற்கு முன்பாக இந்தப் படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.அவன் தனக்கு அருகில் நின்றிருந்த, தான் வழமையாகப் பயிற்சியிலீடுபடும், ஒரு சிறிய படகை கூர்ந்து நோக்கினான். அது அவனுக்குத் தெரிந்த ஒரு ஏழை மீனவனுடையது. அந்தப் படகை வைத்துக்கொண்டு, அந்த மீனவன் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குச் செல்வதில்லை என்பதும், கரையை அண்டிய கடற்பரப்பிலேயே அந்த மீனவன் மீன்பிடியில் ஈடுபடுவான் என்பதும் கொலம்பஸ் அறிந்திலன். அத்துடன் பெரிய கப்பலுக்கும், நடுத்தரமான படகிற்கும், மிகச்சிறிய வள்ளத்திற்குமிடையிலான வேறுபாடுகூட அந்தச் சிறுவனுக்குத் தெரியாது. அது மாத்திரமின்றி தான் செய்ய முடிவெடுத்திருக்கும் இந்தப் பயணமானது, தனது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதும் அச்சிறுவனுக்குத் தெரியாது.

தூணிலிருந்து படகை முற்று முழுதாக விடுவித்ததும் காற்று வீசிய...
(அடுத்த வாரமும் தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக