வியாழன், மே 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்


இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு. (374)

பொருள்: ஒருவன் செல்வம் நிறைந்து காணப்படுகிறான். மற்றவன் கல்வி நிறைந்து காணப்படுகிறான். இவ்விரண்டிற்கும் விதிதான்(முன்வினை) காரணம். இது உலக இயல்பு.

இன்றைய சிந்தனைக்கு

பியரெ பொய்லெ

ஒரு பொய்யை உண்மையென ஒப்புவிக்க வேண்டுமானால் அதனைப் பல தடவைகள் சொல்வதுடன் தொடர்ந்து பல பொய்கள் சொல்ல நேரிடும். பொய் சொல்லுமுன் ஒரு கணமேனும் சிந்தியுங்கள்.

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை!


நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது.

புளிப்பு சுவையுள்ளவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்யும். உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் ரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது.

எலுமிச்சை பழத்தில் உள்ள "சிட்ரிக் அமிலம்" நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாக இருப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளுக்கு நல்ல மருந்தாகிறது. எலுமிச்சை சாறுக்கு பித்தநீரை சுரக்கும் தன்மை உண்டு. அதனால் காமாலை நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.

ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும் சக்தி எலுமிச்சை சாறுக்கு உள்ளதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு போன்ற நிலைகளில் இது பலனளிக்கிறது.

உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும். மலை ஏற்றம் செல்பவர்கள், எலுமிச்சம் சாற்றை நீரில் கலந்து குடித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும், களைப்பு நீங்கும். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும், மன பதட்டம் கொண்டவர்களும் எலுமிச்சை சாறில் நீர் கலந்து பருகலாம்.

எலுமிச்சை கழிவுகளை வெளியேற்றும் தன்மை வாய்ந்ததால் முக பருவால் துன்பப்படும் மேலும்

புதன், மே 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். (373)

பொருள்: நுட்பமான பல நூல்களை முயன்று கற்றாலும் ஊழிற்கு ஏற்றவாறு அவனுடைய சொந்த அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

இன்றைய பொன்மொழி

பிளேட்டோ

மனிதனிடம் வீரமில்லாத ஒழுக்கமோ, ஒழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன் கோழையாகவோ முரடனாகவோ ஆகிவிடுவான்.

செவ்வாய், மே 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்



பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை. (372)

பொருள்: செல்வம் அழிய வேண்டிய காலம் வந்தால் அறிவாளிக்கும் மதி மயக்கம் ஏற்படும். செல்வம் வரவேண்டிய காலம் வந்தால் மூடனுக்கும் நல்லுணர்வு ஏற்படும்.

இன்றைய பொன்மொழி

பெஞ்சமின் பிராங்ளின்

முயற்சி உடையவன் செல்வத்தை அடைகிறான். நல்ல உணவை உண்பவன் ஆரோக்கியத்தை அடைகிறான். உறுதி உள்ளவன் ஒழுக்கம், புகழ், செல்வம் இவற்றை அடைகிறான்.

நாடுகாண் பயணம் - காம்பியா

நாட்டின் பெயர்:
காம்பியா(The Gambia) 

வேறு பெயர்கள்:
காம்பியா குடியரசு(Republic of the Gambia)


அமைவிடம்:
கிழக்கு ஆபிரிக்கா


எல்லைகள்:
வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று பக்கங்களும் 'செனிகல்' எனும் ஒரேயொரு நாட்டை எல்லையாகவும், மேற்கில் ஒரு சிறிய நிலப் பரப்பு மட்டும் அத்திலாந்திக் சமுத்திரத்தை எல்லையாகவும் கொண்ட உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று.


தலைநகரம்:
பஞ்சுல்(Banjul)


அலுவலக மொழி:
ஆங்கிலம் 


தேசிய மொழிகள்:
மண்டிங்கா, வோலோவ், வூலா,செரீர், ஜோலா.


இனங்கள்:
மண்டிங்கா 42%
வூலா 18%
வோலோவ் 16%
ஜோலா 10%
செராகூலி 9%
ஏனையோர் 4%
*மேற்கூறிய இனங்கள் அனைத்தும் 'ஆபிரிக்கர்' எனும் இனப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப் படுகின்றனர். இவர்களைத் தவிரவும் ஆபிரிக்கர் அல்லாதோரின் தொகை 1% ஆகும்.


சமயங்கள்:
முஸ்லிம்கள் 90%
கிறீஸ்தவர்கள் 8%
ஆதிச்சமயத்தவர் 2%


கல்வியறிவு:
40%


ஆயுட்காலம்:
ஆண்கள் 61 வருடங்கள் 
பெண்கள் 66 வருடங்கள் 


ஆட்சிமுறை:
ஜனாதிபதி தலைமையிலான குடியரசு ஆட்சி


ஜனாதிபதி:
யாஹ்யா ஜாமே(Yahya Jammeh)


பிரித்தானியாவிடமிருந்து விடுதலை:
18.02.1965


பரப்பளவு:
11,295 சதுர கிலோ மீட்டர்கள்
*இலங்கையின் வட மாகாணத்தின் பரப்பளவை ஒத்த(சுமாராக) நிலப்பரப்பு. 
**இந்நாட்டின் அமைப்பை உலக வரைபடத்தில் பார்க்கும்போது ஓர் மண்புழு ஊர்ந்து செல்வதைப் போன்ற தோற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கும்.உலகில் உள்ள சிறிய நாடுகளில் நீளம் கூடிய ஆனால் அகலம் மிகவும் குறைவான நாடுகளுள் ஒன்று.
***இந்நாட்டின் அகலம் வெறும் 48.2 கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் மிகவும் சிறிய நாடு இதுவாகும்


சனத்தொகை:
1,705,000 
*இலங்கையின் வட மாகாணத்தில் வாழும் மக்கள் தொகையை ஒத்த சனத்தொகை.


நாணயம்:
டலாசி(Dalasi /GMD) 


வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
ஏறத்தாள மூன்றில் ஒரு பங்கினர்(சுமாராக 33% பேர்)


இணையத் தளக் குறியீடு:
.gm


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 220


பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை.


விவசாய உற்பத்திகள்:
அரிசி, வாற்கோதுமை, கோதுமை, இறுங்கு, அவரையினங்கள், சோளம், வேர்க்கடலை(கச்சான்) எள்ளு, மரவள்ளிக் கிழங்கு, செம்பனை எண்ணெய்(பாமாயில்), தேங்காய், கால்நடைகள்.


தொழிற்சாலை உற்பத்திகள்:
குளிர்பானங்கள், பிஸ்கட் வகைகள், சோப் வகைகள், துணி வகைகள், வேர்க்கடலை, மீன், காட்டு மூலிகைகள், விவசாய இயந்திரங்கள் தயாரிப்பு, விவசாய இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களைப் பொருத்தும் தொழிற்சாலைகள், மரவேலை, உலோக உருக்கு.


ஏற்றுமதிகள்:
வேர்க்கடலை, மீன், பருத்தி, பருத்தி நூல், துணிவகைகள், செம்பனை எண்ணெய்(பாமாயில்)


திங்கள், மே 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. (371)

பொருள்: செல்வம் வருவதற்குத் தேவையான விதி வரும்போது, முயற்சி தானாக உண்டாகும். அது அழிய வேண்டிய நேரம் வருமாயின் சோம்பல் வளரும்.

இன்றைய சிந்தனைக்கு

ஹென்றி போர்ட்

"நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது".

ஞாயிறு, மே 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். (370)
பொருள்: ஒரு போதும் நிரம்பாத இயல்புடைய அவாவைக் கைவிட்டால், அப்போதே அழிவில்லாத மாறாத இன்பவாழ்வைப் பெறலாம்.

இன்றைய பொன்மொழி

அன்னை தெரேசா

தவறு செய்வது மனித இயல்பு. குற்றத்தை மன்னிப்பது கருணையின் இயல்பு. கருணை என்றாலும் 'அருள்' என்றாலும் அர்த்தம் ஒன்றுதான்.

தாரமும் குருவும் பகுதி 7.3

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 7.3
ஒன்பதாம் வகுப்பு நினைவலைகள்
திடீரென்று பாலர் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பை நோக்கித் தாவி விட்டேன் என நினைக்காதீர்கள். எல்லாம் காரணத்தோடுதான். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் எழுதிய இத்தொடரில் அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாலயத்தில் வகுப்பில் \மாணவர் தலைவர்\ ஆவதற்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் நான் ஒன்பதாம், பத்தாம் வகுப்பில் படித்த பள்ளியாகிய யாழ்/புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் மாணவர் தலைவன் ஆவதற்குரிய தகுதிகளைப் பற்றியும் சில வரிகள் கூற விரும்புகிறேன். நான் முன்னமே குறிப்பிட்டதுபோல் அது ஆண்கள் மட்டுமே கல்வி கற்கும் ஒரு தனியார் பாடசாலை. அது மிகவும் பிரபலமான வரலாற்றைக் கொண்ட பாடசாலை என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.அந்தப் பள்ளியில் 1980 களில் வகுப்பில் மாணவர் தலைவன் ஆவதென்றால் பின்வரும் தகுதிகள் மேற்படி மாணவனுக்கு இருத்தல் வேண்டும்.
  • மாணவன் சிறு வயது முதலே அக்கல்லூரியில் கல்வி கற்றவனாக இருத்தல் வேண்டும், படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருத்தல் வேண்டும்.
அல்லது
  • மாணவன் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும்.
அல்லது
  • அந்தக் கல்லூரியில் புகழ்பெற்ற மாணவனாக விளங்கிய ஒரு தந்தையின் மகனாக இருத்தல் வேண்டும்.
அல்லது
  • மிகவும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த, அந்தக் கல்லூரியின் நிர்வாகத்துடன் சம்பந்தப் பட்ட குருவானவர்கள், கன்னியாஸ்திரிகளுடன் ஏதாவது ஒரு வகையில் அறிமுகம் உள்ள ஒரு மாணவனாக இருத்தல் வேண்டும்.
அல்லது
  • உயர்ந்த பதவிகளை வகிக்கும் பெற்றோர்களின் பிள்ளையாக இருத்தல் வேண்டும்.
இவ்வாறு தகுதிப் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். நிலைமை இவ்வாறு இருக்கையில் மேலே குறிப்பிட்ட எந்தத் தகுதிகளும் இல்லாத நான், அந்தப் பள்ளியில் சேர்ந்து மூன்றே மாதங்களில் வகுப்பில் மாணவர் தலைவன் ஆகி விட்டேன். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் அல்லது நான் பழுகுகிறேன்/பொய் சொல்கிறேன் என்று நீங்கள் எண்ணக் கூடும். ஆனால் நான் சொல்வது சத்தியமான வார்த்தைகள்.
நீங்கள் கேட்கலாம் "மேலே குறிப்பிட்ட தகுதிகளில் நீல நிற எழுத்துக்களில் எழுதப்பட்ட தகுதிகூட உன்னிடம் இருக்கவில்லையா? என்று கேட்டால் எனது பதில் "இல்லை" என்பதுதான். காரணம் அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாசாலையில் எனது வகுப்பில் படித்த மாணவ, மாணவிகளோடு ஒப்பிடுகையில் நான் மிகவும் கெட்டிக்காரனே தவிரவும் யாழ்/சம்பத்திரிசியார் கல்லூரியில் என்னோடு கல்விகற்ற கல்விச் சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்,பொறியியலாளர்கள், அரச அதிகாரிகள், பரம்பரைக் கோடீஸ்வரர்கள் போன்றோரின் பிள்ளைகளோடு ஒப்பிடுகையில் நான் வெறும் சராசரி மாணவன்(Average Student) மட்டுமே. அப்படியிருக்கையில் நான் எவ்வாறு 'மாணவர் தலைவன்' ஆக முடிந்தது? என்பதுதானே உங்கள் கேள்வி. மேலே நான் குறிப்பிட்ட எல்லாத் தகுதிகளை விடவும் விசேடமாக ஒரு தகுதி என்னிடம் இருந்தது.(இப்போதும் இருக்கிறது) அது வேறொன்றும் இல்லை என்னிடம் இருந்த/இருக்கின்ற 'தமிழ்ப்புலமை' தான் அது. ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு தனியார் பாடசாலையில் தமிழ்ப் புலமைக்கு மதிப்புத் தரப்பட்டதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறதல்லவா? எனது விளக்கத்தை அறிவதற்கு இரண்டு வாரங்கள் மட்டும் பொறுத்திருங்கள்.
(தொடரும்)

சனி, மே 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். (369)

பொருள்: துன்பங்களுள் கொடிய ஆசையென்னும் துயரத்தை விட்டொழித்தால், நிலையான இன்பத்தைப் பெறலாம்.

இன்றைய சிந்தனைக்கு

கவியரசு கண்ணதாசன்

பாசமுள்ள சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு,வழக்கை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

புற்று நோயை குணப்படுத்தும் தங்கம்


ஆபரணங்கள், மற்றும் சிலைகள் போன்றவை செய்ய தங்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.தங்கம் புற்று நோயை குணப்படுத்தும் என தெரிய வந்துள்ளது. இதனால் அதற்கு மேலும் மவுசு அதிகரிக்கிறது.
தற்போது இது புற்று நோயை குணப்படுத்தவும் உதவும் என தெரியவந்துள்ளது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் கிரிப்த் பல்கலைக்கழகங்களை சேர்ந்த சர்வதேச நிபுணர் குழு இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.
அதன்படி தங்கத்தை வேதியியல் மாற்றம் செய்து, புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அதில் உள்ள ரசாயன பொருட்கள் புற்று நோயை உருவாக்கும் செல்களை மட்டுமே அழித்தன. மற்ற செல்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. எனவே தங்கத்தின் மூலமும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாகவே தங்கத்தின் மதிப்பு அதிகரித்து ஏழை எளிய மக்களின் எட்டா கனியாக உள்ளது. தற்போது புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவதன் மூலம் அதன் மவுசு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.





நன்றி: இதயபூமி

வெள்ளி, மே 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃதுஉண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். (368)

பொருள்: அவா இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. அவா இருந்தால் துன்பமும் விடாமல் வந்துகொண்டே இருக்கும்.

இன்றைய சிந்தனைக்கு

அடொல்வ் ஹிட்லர்

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப் படாதே. நீ நடந்தால் அதுவே ஒரு பாதைதான்.

வியாழன், மே 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றின் வரும். (367)

பொருள்: ஒருவன் ஆசையை முற்றும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்குரிய நல்வினைகள் தான் விரும்பியவாறே வரும்.

இன்றைய சிந்தனைக்கு

ஜெரமி பென்ட்ஹாம்

உங்கள் மனதில் தோன்றும் அர்த்தமில்லாத அச்சங்கள் பற்றி விழிப்புடன் இருங்கள். நோயைவிட அச்சமே மனிதனை அதிகம் கொல்லும். மனித மனதில் தோன்றும் லட்சக் கணக்கான பயங்களில் தொண்ணூறு வீதமானவை அர்த்தமே இல்லாதவை. அவை உங்கள் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும், ஆரோக்கியத்தையும் சிதைப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை.

அம்மாவின் ஆசை

எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. நான் கார் வாங்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. அம்மாவின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி விட்டேன் இந்த ஒன்றைத் தவிர.

கார் வாங்கினால் யானையைக் கட்டித் தீனி போடுகிற மாதிரி என்று கார் வாங்கிய நண்பன் ஒருவன் சொன்னதிலிருந்து கார் வாங்கப் பயம்.  மேலும் என்னொருவன் சம்பளத்தில் பையன்களைப் படிக்க வைக்க வேண்டும்.  நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் எகிறிப் பாயும் விலைவாசியில் குடும்பச் செலவுகளைக் கவனிக்க வேண்டும். அம்மாவின் மருத்துவச்செலவு, வீட்டுக் கடனுக்கு வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை எனச் செலவுப் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல, என்னால் கார் வாங்குவதைப் பற்றிக்
கற்பனை கூடச் செய்யமுடியவில்லை. 

ஒரு வழியாகப் பையன்கள் இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குச் சேரும் தருவாயில் தான் அம்மாவின் இந்த ஆசையைப் பற்றி நான் யோசிக்கத் துவங்கினேன். எல்லோரும் சேர்ந்து வெளியில் சென்று
வர கார் இருந்தால் தான் நல்லது எனக் குடும்பத்தினர் அனைவரும் நச்சரிக்கத் துவங்க சரியென்று தலையாட்டி வைத்தேன்.

மேலும் என் கம்பெனியிலும் பெட்ரோல் செலவுக்கு மாதா மாதம் தனியே 'அலவன்ஸ்' தருவதாகச் சொல்லவே மகிழ்ச்சியாகச் சம்மதம் தெரிவித்தேன்.  அடுத்து என்ன கார் வாங்குவது என ஒரு பட்டிமன்றமே நடந்தது வீட்டில். ஆளாளுக்கு ஒரு காரைச் சிபாரிசு செய்தனர்.

"அம்பாசிடர் கார் தான் தேவலை; அப்போ தான் நாமெல்லாரும் தாராளமா உட்கார்ந்து போக முடியும்," என்ற மனைவியின் யோசனை மேலும் 

புதன், மே 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


அஞ்சுவதோ ரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பதோ ஓரும் அவா. (366)

பொருள்: ஒருவன் அவாவிற்கு(ஆசைக்கு) அஞ்சி வாழ்வதே அறம். ஏனெனில் ஒருவனைச் சோர்வுகண்டு கெடுத்து வஞ்சிப்பது ஆசையே.

இன்றைய சிந்தனைக்கு

பியரெ பொய்லெ

உலகிலுள்ள சகலருக்கும் அன்பு காட்டு. சகலரையும் நம்பி விடாதே. அவர்கள் உன்னை நம்பும் வண்ணம் நடந்து கொள். உயிர்வாழ்வதற்கு 'அன்பு' என்பது அவசியமான ஊட்டச்சத்து என்பது சத்தியமான உண்மை. பலரின் வீழ்ச்சிக்கும் அன்பே காரணமாகிறது என்பதையும் நீ உணர்வாய்!

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங் காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,


முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.*வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள்.

இதை 'இதயத்தின் தோழன்' என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருள்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை 'என்சைம்', தேனீ கொட்டியதால் உடலில் ஏற்படும் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற 'ப்ராஸ்டாகிளாண்டின்ஸ்' என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும்.

இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருள்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும். யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெய்யையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

உடலில் 'செலனியச் சத்து' குறைவாக உள்ளவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும். புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். 

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
நன்றி இதயபூமி

செவ்வாய், மே 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்



அற்றவர் என்பார் அவாஅற்றார்; மற்றையார் 
அற்றாக அற்றது இலர். (365) 

பொருள்: எதிலும் பற்றில்லாதவர்கள் பிறவியற்றவர்களாவர். ஆசைக்கு அடிமையானவர்களுக்குப் பிறவியிலிருந்து விடுதலை இல்லை.

இன்றைய பொன்மொழி

தாகூர்

அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டுபோய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடிவிடாதே.

நாடுகாண் பயணம் - காபோன்

நாட்டின் பெயர்:
காபோன்(Gabon)

வேறு பெயர்கள்:
காபோனியக் குடியரசு(Gabonese Republic) அல்லது கபூன்

அமைவிடம்:
மேற்கு மத்திய ஆபிரிக்கா

எல்லைகள்:
வட கிழக்கு - ஈக்குவடோரியல் கினியா
வடக்கில் - கமரூன்
கிழக்கு மற்றும் தெற்கு - கொங்கோ குடியரசு
மேற்கில் - கினிய வளைகுடா மற்றும் அத்திலாந்திக் சமுத்திரம்.

தலைநகரம்:
லிப்ரவில்(Libreville)

அலுவலக மொழி:
பிரெஞ்சு

ஏனைய மொழிகள்:
பாங், மைனோ, ஷேப்பி, பபுனு,பண்ட்ஜாபி.

இனங்கள்:
பண்டு பழங்குடி, ஆபிரிக்கர்கள், ஐரோப்பியர்கள் குறிப்பாக பிரெஞ்சுக் காரர்கள், கலப்பு இனங்கள்.

சமயங்கள்:
கிறீஸ்தவம்
ஆதிச் சமயம்
மிகக் குறைந்த தொகையில் முஸ்லிம்கள்.

பிராந்திய மொழிகள்:
வ்வாங்(Fang) மற்றும் யேனே(Myene)


கல்வியறிவு:
73%
*இந்நாட்டில் கட்டாயக் கல்வி முறை நடைமுறையில் உள்ளது.


ஆயுட்காலம்:
ஆண்கள் 51 வருடங்கள்
பெண்கள் 52 வருடங்கள்
*எயிட்ஸ் நோய் காரணமாக இளவயதிலேயே பலரும் இறப்பதால் சராசரி ஆயுட்காலம் மிகவும் குறைவாக உள்ளது.2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்நாட்டில் சுமாராக46,000 எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.

ஆட்சிமுறை:
ஜனாதிபதி தலைமையிலான குடியரசு ஆட்சி

ஜனாதிபதி:
அலி பொங்கோ ஒண்டிம்பா(Ali Bongo Ondimba)*இது 22.05.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.
*உலகிலேயே ஒரு நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் தொடர்ச்சியாக 42 ஆண்டுகள்(1967-2009) ஒரே நபர் ஜனாதிபதியாகப் பதவி வகித்தது இந்நாட்டிலே ஆகும். அவரது பெயர் El hadj Omar Bongo Ondimba ஆகும். இவரது மகனே இந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஆவார். ஜனநாயக விதிமுறைப்படி இது தவறு ஆயினும், இது ஒரு உலக சாதனை ஆகும்.


பிரதமர்:
ரேமண்ட் ஓங் சிமா(Raymond Ndong Sima)*இது 22.05.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை:
17.08.1960


பரப்பளவு:
267,667 சதுர கிலோமீட்டர்கள்.


சனத்தொகை:
1,475,000(2009 மதிப்பீடு)*இலங்கையை விடவும் சுமாராக நான்கு மடங்கு பெரிய நாடாக இருப்பினும் சனத்தொகை சுமாராக பதினைந்து லட்சம் மட்டுமே.


வேலையில்லாத் திண்டாட்டம்:
21%


நாணயம்:
மத்திய ஆபிரிக்க பிராங்(CFA franc/XAF)


இணையத் தளக் குறியீடு:
.ga


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 241



இயற்கை வளங்கள்:
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வைரக் கற்கள், நைபோபியம், மங்கனீஸ், யுரேனியம், தங்கம், மரம், இரும்பு, ஈயம், நீர் மின்சாரம்.

விவசாய உற்பத்திகள்:
காப்பி, கொக்கோ, சீனி, மர எண்ணெய்(பாமாயில்), ரப்பர், ஆடு, மாடு, காகித மரம், மீன்.

தொழிற்சாலை உற்பத்திகள்:
பெட்ரோலியம் சுத்திகரித்தல், மங்கனீஸ், தங்கம், இரசாயனப் பொருட்கள் தயாரித்தல், கப்பல் பழுதுபார்த்தல், உணவு உற்பத்தி, குளிர்பானங்கள் தயாரிப்பு, துணிவகை உற்பத்தி, மரப்பலகைகள் தயாரிப்பு, மரப்பசை தயாரிப்பு, மர ஓட்டு வேலை, சீமெந்து தயாரிப்பு.

ஏற்றுமதிகள்:
மசகு எண்ணெய்(கச்சா எண்ணெய்/பெட்ரோலியம்), மரம், மங்கனீஸ், யுரேனியம்.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள செல்வந்த நாடுகளில் ஒன்று.இதற்குக் காரணம் இந்நாட்டின் பெற்றோலிய வளமும், குறைந்தளவு சனத்தொகையுமாகும்.
  • இந்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளபோதும், எந்தவொரு குடிமகனும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழவில்லை எனும் விடயம் ஆபிரிக்கர்களின் புருவங்களை உயர்த்தி நிற்கிறது.
  • இந்நாடு தனது அண்டை நாடாகிய ஈக்குவட்டோரியல் கினியாவுடன் ஒரு சில தீவுகள் சம்பந்தமாக நெடுங் காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சனையைக் கொண்டுள்ள நாடு ஆகும். மேற்படி தீவுகளில் பெட்ரோலியம் கிடைப்பதே மேற்படி பிணக்கிற்குக் காரணம் ஆகும்.
  • நாடு செல்வந்த நாடாக இருப்பினும் மக்களை ஆட்டிப் படைக்கும் சமுதாயப் பிரச்சினையாக எயிட்ஸ் நோய் உள்ளது.அத்துடன் 4000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் எனும் நிலை காணப்படுகிறது.

திங்கள், மே 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்


தூஉய்மை என்பது அவாஇன்மை; மற்றுஅது
வாஅய்மை வேண்ட வரும். (364)

பொருள்: தூய்மையான நிலையென்பது அவா இல்லாத நிலையாகும். அந்நிலை வாய்மையை விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்.

இன்றைய சிந்தனைக்கு

கலீல் ஜிப்ரான்

கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது. மாயை நண்பர்களை அழித்துவிடுகிறது.

பிரபலங்கள் - 10


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

காந்தி காந்தியம்


சத்தியமே வழிகாட்டு மொழி.
சத்தியமே பாதுகாக்கும் கேடயம்.
சத்தியமே மார்புக் கவசம்
சத்தியசொரூபி கடவுளென்றார்.
சத்தியமே கடவுள் மௌனமும்
சத்தியவாளரின் அனுமானக் கட்டுப்பாட்டிலொன்று.
உருசியென்பது எண்ணம், நாவிலில்லை.
உத்தம கையெழுத்து பிள்ளைகளுக்காகட்டும்.
பொருட்களைப் பார்த்து முதலில்
பிள்ளைகள் வரையக் கற்கட்டும்
பின்னர் எழுதிடக் கற்கட்டுமென்று
புதுப்பணி ஆசிரியத்தையன்றே மொழிந்தார்.
சத்தியத்தை நாடும் ஒருவனே
சரியான விதியைப் பின்பற்றுவான்.
வரவு, செலவிற்குக் கணக்கிடு!
ஒழுக்கமேயொருவனைக் கனவானாக்குமென்றார்.
பயம் போக்கும் மருந்து
பக்தியான இராமநாமமென்று
பணிப்பெண் ரம்பா ஆலோசனையில்
பணிவாகச் செபம் கற்றார்.
மகாத்மா பட்டம் பரவசமளிக்கவில்லை.
மகாத்மா பட்டத்தை மதியாதவர்.
மகாத்மா பட்டத்தில் வேதனையானவர்.
மகாத்மாவின் கூற்று இது.
உத்தமராய் உலகு போற்றும்
தித்திப்போ, கசப்போ – காந்தியின்
சத்தியசோதனை வாழ்வு
பத்தியமாகும் உலக மக்களிற்கு.
(காந்தி மறைவின் தினத்தையொட்டி எழுதியது.)

ஞாயிறு, மே 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
யாண்டும் அஃதுஒப்பது இல். (363)

பொருள்: ஆசையின்மைக்குச் சமமான சிறந்த பொருள் இவ்வுலகில் இல்லை. மறு உலகிலும் அதற்குச் சமமானதொரு பொருளைக் காண்பதரிது.

இன்றைய சிந்தனைக்கு

ஹென்றி போர்ட்

நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.

பப்பாளி பழத்தின் அற்புதம்

17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.
பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.

... வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை மேலும் 

சனி, மே 19, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம்37, அவா அறுத்தல்


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (362)

பொருள்: ஒருவன் ஏதாவது ஒன்றை விரும்புவதானால் பிறவாமையை விரும்ப வேண்டும். அது ஆசை அற்ற நிலையை(விரும்பாமை) விரும்பினால்தான் உண்டாகும்.

இன்றைய பொன்மொழி

ஜேம்ஸ் குக்

பிறருக்காக உழைத்துப் பாருங்கள்! அந்த ஆனந்தத்திற்கு இணையானது எதுவுமில்லை என்பதைக் காண்பீர்கள். சுயநலம் குடிசை போன்றது. பொதுநலம் மாளிகை போன்றது.

வெள்ளி, மே 18, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்




அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து. (361)

பொருள்: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்ற வித்து, அவா என்று கூறுவர்.