வியாழன், ஜனவரி 12, 2012

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்.

இன்று சுவாமி விவேகானந்தரின் 149 ஆவது பிறந்த தினம் ஆகும். அதனை முன்னிட்டு அவரது பொன்மொழிகளில் சில:-



  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகி விடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகி விடுகிறாய்.
  • மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகிறான்.
  • பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு ஒப்பானவன்.
  • காயம்படாதவன்தான் அடுத்தவனின் தழும்பைக் கண்டு சிரிப்பான்.
  • எப்போதும் சுருங்கி, மலர்ந்து கொண்டு இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவதை மட்டும் கவனித்துக் கொண்டு சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக் காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

''..நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்...''
இதை யாருமே நம்புவதாகத் தெரியவில்லையே. ரெம்பக் கெட்டதாகவே தானோ பலர் எண்ணுவது என்று நம்பத் தோன்றுகிறது பல நடவடிக்கைகள். ஒரு இணையத்தளம் நடத்தும் சிரமம் எவ்வளவு பெரிது!!!! நேயர்களின் கருத்து வந்தால் அந்தச் சுமை கூட சிறு மலரை ஏந்துவது போல ஆனந்தம் தருமே!

கருத்துரையிடுக