எல் சல்வடோர் (El Salvador)
வேறு பெயர்கள்:
ரிப்புப்ளிக்கா தே எல் சல்வ டோர்(Republica de El Salvador)*ஸ்பானிய மொழியில் இந்தப் பெயர். 'சல்வடோர்' என்றால் ஸ்பானிய மொழியில் மீட்பர்/இயேசு என்று பொருள்படும்.
அமைவிடம்:
மத்திய அமெரிக்கா
தலைநகரம்:
சன் சல்வடோர் (San Salvador)
எல்லைகள்:
வடக்கு - குவாட்டமாலா
கிழக்கு - ஹொண்டுராஸ்
மேற்கு - பசுபிக் சமுத்திரம்
*தெற்கில் உள்ள அண்டை நாடாக நிக்கரகுவாவைக்கூற முடியும்.
அரசாங்க முறை:
ஜனாதிபதி தலைமையிலான கூட்டாட்சிக் குடியரசு.
ஜனாதிபதி:
மௌரிஸியோ புநெஸ்(Mauricio Funes)*இது 17.01.2012 அன்று உள்ள நிலவரமாகும்.
துணை ஜனாதிபதி:
சல்வடோர் செரைன்(Salvador Ceren)*இது 17.01.2012 அன்று உள்ள நிலவரமாகும்.
ஸ்பெயின் நாட்டிடமிருந்து விடுதலை:
24.06.1865
மத்திய அமெரிக்கக் குடியரசிடமிருந்து விடுதலை:
13.11.1898
மொழிகள்:
அலுவலக மொழி ஸ்பானிஷ்(மத்திய அமெரிக்க ஸ்பானிஷ்)
மற்றும் பூர்வீக மொழிகள் நாஹாட்(Nahuatl), மாயா(Maya) இது தவிரவும் தனியார் பாடசாலைகளில் ஜெர்மன், டச், பிரெஞ்சு, அடிப்படை ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்பிக்கப் படுகின்றன.
சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கர் 57%
புரட்டஸ்தாந்துகள் 21%
ஜெகோவாவின் சாட்சிகள் 1.9%
சமயம் சாராதோர் 16.8%
சிறிய தொகையில் யூதர்கள்
இனங்கள்:
மெஸ்டிசோ 86%
வெள்ளையர்(கோக்கேசியன்) 12%
பூர்வீக அமெரிக்கர்(செவ்விந்தியர்கள்) 1%
ஆயுட்காலம்:
ஆண்கள் 57 வருடங்கள்
பெண்கள் 62
கல்வியறிவு:
81%
பரப்பளவு:
21,040 சதுர கிலோ மீட்டர்கள்
சனத்தொகை:
6,134,000 (2009 மதிப்பீடு)
நாணயம்:
அமெரிக்க டாலர் (USD)
*1.01.2001 தேதிவரை 'சல்வ டோரியன் கொல்ன்' நாணயமாக இருந்து மேற்படி தேதியில் இருந்து நாட்டின் நாணயம் அமெரிக்க டாலர் ஆகியது.
இணையத் தளக் குறியீடு:
.sv
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 503
வேலையில்லாத் திண்டாட்டம்:
7,2%
வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
38%
இயற்கை வளங்கள்:
நீர் மின்சாரம், அனல் மின்சாரம், பெட்ரோலியம், விவசாய நிலங்கள்.
விவசாய உற்பத்திகள்:
காப்பி, சீனி, சோளம், அரிசி, அவரைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, இறுங்கு(கம்பு), மாட்டிறைச்சி, பால் உற்பத்திப் பொருட்கள்.
தொழில்கள்/தொழிற்சாலைகள்:
உணவு பதனிடல், மதுபான உற்பத்தி, பெட்ரோலியம், எரிவாயு, இரசாயனப் பொருட்கள், உர வகைகள், துணி வகைகள், மரத் தளபாடங்கள், மென்பொருள் உலோகங்கள்.
ஏற்றுமதிகள்:
இணைக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள், காப்பி, சீனி, துணிவகை, தங்கம், மதுபானம், எரிவாயு, இரசாயனப் பொருட்கள், மின்சாரம், இரும்பு, ஈயம், உருக்கு உலோகங்கள்.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
- மத்திய அமெரிக்காவில் பொருளாதாரத்தில் அதி வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- 12 வருட கால உள்நாட்டுப் போரில் சிக்கிய நாடு. இப்போரில் 75,000 மனித உயிர்கள் மாண்டு போயின.
- 1992 ஆம் ஆண்டில் ஐ.நாவின் அனுசரணையுடன் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அமைதி நிலவுகிறது.
- அமெரிக்காவில் வாழும் சல்வடோரியன் மக்கள் உழைக்கும் பணத்தில் பெரும்பகுதியை தமது தாய் நாட்டிற்கு அனுப்புகின்றனர். இதன் மூலம் இந்நாடு பெருமளவு அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்கிறது.
- நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து சென்றாலும் இன்னமும் 38% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதும் 1000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை காணப் படுவதும் குறிப்பிடத் தக்கது.
- அமெரிக்கக் கண்டத்தின் பூர்வீக இனங்களில் ஒன்றாகிய 'மாயா' இன மக்கள் இந் நாட்டிலும் பரவலாக வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப் படுகின்றன. அம்மக்கள் தமது மரபுப்படி அமைத்த கோயில்கள், பிரமிட்டுக்கள் நாட்டில் பரவலாகக் காணப் படுகின்றன.
- எரிமலை வெடிப்புகள், நில நடுக்கங்கள், புயல்கள் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படும் நாடு.
- அமெரிக்கக் கண்டத்திலேயே சனத்தொகை அடர்த்தி கூடிய நாடு.
- குற்றங்கள், கொலைகளின் வீதம் அதிகமுள்ள நாடுகளில் ஒன்று.
- நாட்டில் போர் நின்று போனாலும் குழு மோதல்கள் போன்றவை நின்று விடவில்லை. குழு மோதல்கள், குற்றக் கும்பல்களுக்கிடையிலான மோதல்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்நாடும் ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக