ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.0
அல்லைப்பிட்டி 1977
மாலைதீவு விமான நிலையத்தில் தரித்து நிற்கும் விமானம் |
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் 'மாலைதீவு' பற்றிய எனது பதிவினை நிறுத்தியிருந்தேன். மாலைதீவைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஏராளமான தகவல்கள் இருப்பினும், உரிய தருணம் வரும்போது அந்திமாலையில் 'நாடுகாண் பயணம்' பகுதியில் மாலைதீவும் இடம்பெறும் என்பதால் விரிவான தகவலகளைத் தவிர்த்து விட்டு, ஒரு சில பொது அறிவுத் தகவல்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
******************************
மாலைதீவு திவேஹி இனச் சிறுமி |
'திவேஹி'(Dhivehi) எழுத்து வடிவம் |
ஒரு சில நூற்றாண்டுகள் வரை சுதந்திரமாக எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஆட்சி செய்து வந்தனர். அதன் பின்னர் அடுத்தடுத்துத் தமிழ் மன்னர்களும், இலங்கையின் சிங்கள மன்னர்களும் இச் சிறிய நாட்டின் மீது படையெடுத்து இந்நாட்டைக் கைப்பற்றி ஆண்டனர். இந்நாட்டைக் குறுகிய காலங்கள் சோழ மன்னனாகிய 'இராஜ ராஜ சோழனும்' அதிக காலங்கள் இலங்கையின் சிங்கள மன்னனாகிய 'மகா பராக்கிரம பாகுவும்' ஆண்டனர். பராக்கிரம பாகுவின் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் பௌத்த ஆலயங்கள் கட்டப் பட்டன என இலங்கையின் 'மகா வம்சம்' கூறுகிறது. இலங்கையின் பராக்கிரம பாகுவின் ஆட்சி, இந்நாட்டை 'அராபியர்கள்' கைப்பற்றியவுடன் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாகவே இவர்களது 'திவேஹி மொழி' உச்சரிப்பு சிங்கள மொழியை ஒத்ததாக இருப்பினும் எழுத்து வடிவம் அராபிய எழுத்துக்களுடன் ஒத்துப் போகிறது. மேற்படி தீவுகள் ஒரு பூமாலையில் பல பூக்கள் தொடுக்கப் பட்டது போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் 'மாலை தீவுகள்' எனப் பெயர் பெற்றது. இவ்வாறு நாட்டின் பெயர் 'மாலைதீவு' என முழுக்க முழுக்க தமிழ்ப் பெயர் ஆக இருந்து பின்னர் அராபியர்களின் ஆட்சிக் காலத்தில் 'திவேஹி' மொழியில் 'திவேஹி ராஜ்யஹே ஜும்ஹூரியா'(தமிழில் மாலைதீவுக் குடியரசு) என மாற்றம் பெற்றது.
(தொடரும்)
4 கருத்துகள்:
குட்டித் தொகுப்பு மாலை தீவு பற்றி. மிக்க நன்றி.
அருமையான புதிய தகவல்கள். இணைப்பிற்கு நன்றி. தாரமும் குருவும் இந்த தொடர் super
Excellent, and very good story.
கருத்துரைத்த, பாராட்டிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.
கருத்துரையிடுக