தொகுப்பு .யோ. வேந்தன்
கனடா
- நீதி, நேர்மை உலகில் எங்கும் நிறைந்திருக்கும். அதற்கு எப்போதும் அழிவில்லை. ஆனால் அநீதி சிலகாலம் நிலைத்து நிற்பதுபோல் தோன்றும், விரைவில் மறைந்துவிடும்.
- நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்படுவோமேயானால், இறைவன் பார்வை நிச்சயம் எம்பக்கம்.
- கடவுள் எனும் கல்லுக்கு ஊற்றும் பாலை முதலில் ஏழைப் பாட்டாளியின் பிள்ளைக்குக் கொடு.
- உன்னால் தினமும் ஒரு ஏழைக்காவது உணவளிக்க முடியும், முயன்றுபார்! இறைவன் உனக்கு வழிவகுப்பான்.
- முயற்சிகளின் பலனே வெற்றி, முயற்சியின்மையின் பலனே தோல்வி.
- தோல்வி மனிதனை வெற்றியடைய வைக்கிறது, தோல்வியடையும்போது முயற்சிக்கான வழிவகைகள் கண்டுபிடிக்கப்படுகிறது.
- மனிதன் தன்னைத்தானே முதலில் அறியவேண்டும். எம்மை நாம் அறியும்போது, சரி எது, தவறெது என எளிதில் அறிய முடிகிறது.
- ஆழ்ந்து சிந்திப்பதால் அறிவு விரிவடைகிறது, அவ்வறிவைக்கொண்டு நன்மை தீமைகளைப் பகுத்தறிய முடிகிறது.
- நல்லதை நாடி, நல்லன செய்வோனுக்கு என்றும் நன்மையே கிடைக்கும்.
- மிகப்பெரிய உண்மை எது? உங்களால் எல்லாம் முடியுமென்றும் சொல்லமுடியாது, அதேவேளை உங்களால் எதுவும் முடியாதென்றும் கூற முடியாது.
2 கருத்துகள்:
verrygood
verry nice.
கருத்துரையிடுக