பலாப்பழம்
புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் மிகவும் குறைவு. சிறிதளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் - சி சத்துகள் இருக்கின்றன. மெக்னீஷியம், சோடியம், கந்தகம், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டாம். மலச் சிக்கலைப் போக்கி, நல்ல சக்தியைக் கொடுக்கும். உடலுக்கு மாவுச் சத்து தேவைப்படுபவர்கள், தினமும் நான்கு சுளைகள் எடுத்துக் கொள்ளலாம்.வாழைப்பழம்
இதில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச் சத்து ஆகியவை குறைவாக இருக்கின்றன. பீட்டா கரோட்டின், வைட்டமின் - சி ஆகிய சத்துகள் மிகக் குறைவு. மெக்னீஷியம் ஓரளவு இருக்கிறது. சர்க்கரை, மாவுச் சத்து அளவு மிகவும் அதிகம். இதய நோயாளிகளுக்கு நல்லது. ஜீரண சக்தியைக் கொடுக்கும். உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தினமும் காலை, இரவு என இரண்டு வேளையும் சாப்பிடலாம். அதிக எடை இருப்பவர்கள் தவிர்க்கவும்.
கிர்ணிப்பழம்
சாத்துக்குடி
உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும். இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் சர்க்கரை ஆகியவை அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் பி1, பொட்டாசியம், வைட்டமின் - சி குறைந்த அளவும் ஓரளவு நார்ச் சத்தும் இருக்கின்றன. அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், மருந்து மாத்திரை உட்கொள்பவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும். புளிப்புச் சுவை இருப்பதால், அசிடிட்டி, அல்சர், வாயு பிரச்னை, நெஞ்செரிச்சல் இருந்தால் சாப்பிடக் கூடாது. திராட்சையைக் கொட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் நார்ச் சத்து உடம்பில் சேரும்.
மாதுளை
புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை மிகவும் குறைவாக இருக்கின்றன. மாவுச் சத்து, நார்ச் சத்து, நீர்ச் சத்து ஆகியவை மிகவும் அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் - சி, ஆக்சாலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம், மெக்னீஷியம், கந்தகம் ஓரளவு இருக்கின்றன. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும். இதயநோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாம். நாக்கு வறண்டு போகாமல் இருக்கும். சோர்வு என்பதே இருக்காது.
அன்னாசிப் பழம்
சர்க்கரையின் அளவும் நார்ச் சத்தின் அளவும் மிகவும் அதிகமாக இருப்பதால், உடலுக்குத் தேவையான சக்தி உடனடியாகக் கிடைக்கும். கால்சியம், பாஸ்பரஸ் மிகவும் குறைந்த அளவே இருக்கின்றன. இரும்பு, வைட்டமின் - சி போன்றவை மிதமான அளவில் இருக்கின்றன.
பொட்டாசியம் அளவு குறைவாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. மலச் சிக்கல் பிரச்னை வராது. ஜீரணிக்கும் தன்மை அதிகம்.
கொய்யாப் பழம்
பப்பாளி

மாவுச் சத்து மிகுதியாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் - சி ஆகியவை மிகக் குறைந்த அளவிலும், இரும்பு, பீட்டா கரோட்டின் போன்றவை ஓரளவும் இருக்கின்றன. ரத்த ஓட்டத்துக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம், மெக்னீஷியம் அதிகமாகவும், யூரிக் ஆசிட் சிறிதளவும் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
நன்றி: vanakkammoments.blogspot.com









1 கருத்து:
good...
கருத்துரையிடுக