ஆங்கில மொழியில்: அந்திமாலையின் முகநூல் நண்பர்
திரு,ராஜ ராஜன், ஆவடி, சென்னை, இந்தியா.
தமிழில்:இ.சொ.லிங்கதாசன், டென்மார்க்.
- சுறாவின் உடலில் எலும்புகள் எதுவும் கிடையாது. அதன் எலும்புகள் 'கசியிளையம்' எனும் மென்மையான ஒருவகைத் திடப் பொருளால் ஆனது. மனிதர்களின் காதுகளும் இத்தகைய 'கசியிளையங்களால் ஆனவையே.
- கடலை, குறிப்பாகச் சமுத்திரங்களை மனிதர்கள் எந்தளவுக்கு அசுத்தம் செய்துள்ளார்கள் என்பதையும் ஆபத்தான பகுதியாக மாசு படுத்தி உள்ளார்கள் என்பதையும் அண்மைக் காலத்தில் நியூசிலாந்துக் கடற் பகுதியில் இறந்து கரையொதுங்கிய சுறா ஒன்றின் வயிற்றிலிருந்து மீட்கப் பட்ட பொருட்கள் நமக்கு சாட்சி கூறுகின்றன. மேற்படி சுறாவின் வயிற்றிலிருந்து பின்வரும் பொருட்கள் மீட்கப் பட்டன:
- நியூசிலாந்து பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட Swell Shark எனும் சுறா இனம் 'நாய்களைப் போலக்' குலைக்கும் தன்மை கொண்டவை என அறியப் பட்டுள்ளது.
- சுறாவின் தோல் மிகவும் வலிமை மிகுந்தது என்பது நம்மில் பலர் அறியாது. சுறாவின் தோலில் மிகவும் கூர்மையான பற்கள் போன்ற பகுதி காணப் படுகிறது. இப்பகுதி வெட்டும் தன்மை கொண்டது. இவை நீக்கப் படக் கூடியவை. சிறிய பற்களைப் போன்ற இப்பகுதிகள் நீக்கப் பட்டபின் சுறாவிலிருந்து மிகவும் பலம்வாய்ந்த ஒரு தோல் கிடைக்கும். சுறாவின் தோலிலிருந்து ஒரு ஜோடி காலணி(செருப்பு அல்லது சப்பாத்து) தயாரிக்கப் பட்டால் அது 'மாட்டுத் தோலிலிருந்து' தயாரிக்கப் பட்ட காலணியை விடவும் நான்கு மடங்கு காலம் உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.
- சுறாக்களுக்கு மிகவும் கூர்மையான புலன்கள் உள்ளன. ஒரு சுறாவை தண்ணீரில் நீந்துகின்ற மிகவும் 'மோப்ப சக்தியுடைய மூக்கு' என்று கூறலாம். ஏனெனில் சுறாவுக்கு மிகவும் கூர்மையான மோப்ப சக்தி உள்ளது. ஒரு சுறா இரவு நேரத்தில் கடலில் நீந்திக் கொண்டிருந்தாலும் அதன் 'இரை' கடலுக்கு அடியிலுள்ள மணலில் புதையுண்டு இருந்தாலும் தனது மோப்ப சக்தியால் அதனைக் கண்டு பிடித்துவிடும். அத்துடன் தண்ணீரில் ஏற்படும் மிகச் சிறிய அசைவையும், அதிர்வையும் உணரும் தனமையைக் கொண்டது. ஒரு சுறாவானதுகடலில் நூற்றுக்கணக்கான அடி தூரத்தில் இன்னொரு உயிரினம் ஏற்படுத்தும் ஒலியைக் கூட உணரும் தன்மை கொண்டதோடு அது எங்கிருந்து ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கும் திறமையையும் கொண்டது.
- சுறாவானது Puffer எனும் மீனினத்தை மட்டும் பிடித்து உண்ணாது. இதற்குக் காரணம் Puffer மீன் ஒரு பலூனைப் போல ஊதிப் பருத்து விடுவதுடன், அதன் உடல் முழுவதும் முள்ளம் பன்றியை ஒத்த முட்கள் காணப் படுவதால் அவை சுறாவின் வாயைக் குத்திப் 'பதம்' பார்த்துவிடும் தன்மை கொண்டவை.
- உலகில் பெரும்பாலான சுறாக்கள் குட்டிகளை ஈனுகின்றன. ஒரு சில சுறா இனங்களே முட்டை இடுகின்றன.
- உலகில் பெரும்பாலான சுறா இனங்கள் ஒரே தடவையில் 6 தொடக்கம் 12 குட்டிகளை ஈனுகின்றன. விதிவிலக்காக Hammerhead எனும் சுறா இனமும் 'புலிச்சுறா' எனும் இனமும் ஒரே தடவையில் 40 குட்டிகளை ஈனுகின்றன.
- பெரும்பாலான சுறா இனங்கள் ஒரு மணி நேரத்தில் 20 தொடக்கம் 40 மைல்கள் நீந்தக் கூடிய வல்லமை உள்ளவை. Mako எனும் சுறா இனம் ஒரு மணித்தியாலத்தில் 60 மைல்கள் நீந்திச் சாதனை படைக்க வல்லது.
- ஒரு சுறாவுக்கு மூன்று வகையான துடுப்புக்கள் உள்ளன. இரண்டு வகையானவை முதுகுப் புறமாகவும், ஒரு வகை அதன் உடற் பகுதியிலும் காணப்படும்.
- திமிங்கிலச் சுறாவே உலகிலுள்ள மிகப்பெரிய மீனினமாகும்.
- ஒரு திமிங்கிலச் சுறாவிற்கு 4,000 இற்கு மேற்பட்ட பற்கள் உள்ளன. ஒவ்வொரு பல்லும் 1/8 இன்ச் நீளம் கொண்டவை. சுறாவின் பற்களில் சுமார் 1000 பற்கள் அதன் வாழ்நாளில் வீழ்ந்து, திரும்ப முளைக்கின்றன.
- ஒரு திமிங்கிலச் சுறா சுமாராக 90,000 பவுண்டுகள்(சுமார் 45,000 கிலோ) எடை கொண்டது. உலகின் இரண்டாவது பெரிய சுறா இனமாகிய Basking சுறா சுமார் 40 அடி நீளமானது.
இறுதியாக ஒரு கேள்வி:
உலகில் மனிதருக்கு மிகவும் ஆபத்தானவை குளவிகளா, சுறாக்களா?
விடை:
'குளவிகளே' (காட்டுக் குளவி, கருங் குளவி, மூத்திரக் குளவி) சுறாக்களை விட ஆபத்தானவை. ஏனெனில் ஒவ்வொரு வருடமும் குளவிகளால் கொட்டப்பட்டு(குத்தப் பட்டு) நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்துபோகின்றனர். ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான மக்கள் கடலில் நீச்சலுக்கு சென்றபோதிலும் சராசரியாக 6 பொதுமக்களே சுறாக்களால் கொல்லப் படுகின்றனர். உலகில் 25 வகையான சுறாக்களே மனிதர்களைக் கொல்லும்/தாக்கும் தன்மை உள்ளவை. ஆனால் மனிதர்களோ வருடாந்தம் ஆயிரக் கணக்கான சுறாக்களைக் கொன்று குவிக்கின்றனர். சுறாக்கள் உணவுக்காகவும், எண்ணெய்க்காகவும், தோலுக்காகவும், விளையாட்டுக்காகவும்(கடலில் சாகசம்) கொல்லப் படுகின்றன.
8 கருத்துகள்:
These are very good facts. Thanks both of you.
அருமை. தகவல்களுக்கு மிக்க நன்றி.
மிகவும் ஆச்சரியப் பட வைத்த தகவல்களுக்கு நன்றி.
என்னைப் போல் ஆங்கிலத்தில் குறைந்த மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை செந்தமிழில் அறிந்துகொள்ள உதவி செய்கிறீர்கள். நன்றிகள். இன்னும் எதிர் பார்க்கிறேன்.
அருமை. தகவல்களுக்கு மிக்க நன்றி.
வியக்க வைக்கும் தகவல்கள் அந்திமாலை. வாழ்த்துகள்.
சுறா பற்றி அல்லைப்பிட்டியைச் சேர்ந்த மிஸ். தில்லையம்பலம்(சுண்டுக்குழி மகளிர் கல்லூரயின் முதல் தமிழ் அதிபர்) அவர்கள் எழுதிய புத்தகம், இலங்கை கல்வித் திணைக்கழத்தினால் பாட நூலாக வைக்கப் பட்டிருந்ததாம்.அது பற்றி மேலும் அறிய ஆவல். யாருக்காவது தெரியுமா??!
Very good
கருத்துரையிடுக