வெள்ளி, அக்டோபர் 07, 2011

வாழுவியற் குறட்டாழிசை - 13


ஆக்கம்: வேதா இலங்காதிலகம்.
டென்மார்க்.

முயற்சியுடைமை.

முயற்சியுடன் முனைவோனின் நல்ல வினை
அயர்ச்சி  காண்பது அரிது.
த்தனை செல்வம் குறைந்தாலும் முயற்சியாளன்
சித்தம் என்றும் சோர்வதில்லை.
தேனீயின் சுறுசுறுப்புடைய முயற்சியாளனால் ஒரு
விநாடியும் சோர்ந்திட முடியாது.
பொறாமை அனல், வெட்கக் குமிழ்கள்
தேறாத தடையாகும் முயற்சிக்கு.
முயற்சியாளனுக்கு அயர்ச்சியற்ற மனமே காந்தம்.
பயிற்சி ஒன்று தேவையில்லை.
றும்பின் அயராத முயற்சியாளனுக்கு  என்றும்
வறுமையென்பது தோல்வி தான்.
முயற்சியுடையோன் வாழ்வு புன்னகைத் தோட்டம்.
இழந்தோனிற்கு மயான வட்டம்.
முயற்சியாளன் சுய நம்பிக்கைக்காரன். தனவந்தன்.
யெயம் பெறுவது திண்ணம்.
யாருக்கும் தலை வணங்காத வாழ்வை 
ஓயாத முயற்சியாளன் கொள்வான்.
முயற்சி ஆனந்தத்தின் சைகை, சாதனைக்
கயிறு, நல்லேணிப் படி.
(திவான் பகதூர் பாவாந்தப் பிள்ளையின் யாப்பருங்கல விருத்தியுரையின் படி” இரண்டடியாய் ஈற்றடி குறைந்த இஃது குறட்டாழிசை என்பர்.” 
இலக்கிய அறிவு சார்ந்த அன்புள்ளத்தின் திருத்தத்தை ஏற்று இனி  குறள் – தாழிசை  என்று வருகிறது)

2 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

super

Vetha. Elangathilakam. சொன்னது…

முயற்சியுடையோர் உலகில் மிகக் குறைவோ! பின்னூட்ட வரவையிட்டுக் கூறுகிறேன். அந்திமாலைக்கும் விநோதினிக்கும் மிக்க நன்றி. God bless you all.

கருத்துரையிடுக