திங்கள், அக்டோபர் 31, 2011

இசைஞானியின் துணைவியார் காலமானார் !

கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரை இசையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் துணைவியார் திருமதி.ஜீவா இளையராஜா அவர்கள் இன்றைய தினம்(31.10.2011 திங்கட்கிழமை)  சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.
கடந்த சில மாதங்களாக இருதய நோய் காரணமாக அவதிப்பட்ட திருமதி.ஜீவா இளையராஜா அவர்கள் இன்றைய தினம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
அவர்தம் மறைவிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இழப்பால் துயருறும் 'இசைஞானியின்' குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரிய பீடம் 
அந்திமாலை 

2 கருத்துகள்:

Vino Rooby சொன்னது…

Aathma Shanthiyadaya Pirarthippomaga !!!

Velaniyoor Ponnanna Ponnaiah சொன்னது…

எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் கணவர் மக்கள் மருமக்கள் உறவினர்கள் இனைவருக்கும் தெரிவித்து கொள்கின்றோம். இதை தெரியவைத்த அந்திமாலைக்கும் எமது நன்
றிகள்

கருத்துரையிடுக