ஆக்கம்: வினோதினி பத்மநாதன், டென்மார்க்

எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் எதற்காகவும் நாம் கொண்டிருக்கும் மதிப்பீடுகளை விட்டுக் கொடுக்காதீர்கள்.
உலகம் வெகு வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் ஒரு விடயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள் வேறு ஒருவன் அதை செய்து முடித்து விட்டுப் போய்க்கொண்டே இருப்பான்
மற்றவர்கள் முடியாது என்று நினைக்கின்ற ஒரு விடயத்தை முடித்துக் காட்டுவது தான் உண்மையான வெற்றி.

நியாயமான வழியில் நிறைய பணம் சேர்ப்பதில் தவறில்லை.
ஆனால் அதில் ஒரு பங்கை நல்ல விடயங்களுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.
வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை ஒரே மாதிரியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
எப்போதுமே தயாராக இருக்கின்றவர்களுக்குத் தான் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.
கோடிகணக்கில் பணத்தை இழந்தாலும் தவறான வழிகளில் ஈடுபட்டு அதன் மூலம் நிம்மதியான நித்திரையை மட்டும் இழந்து விடாதீர்கள்.
பணத்தின் மிகப் பெரிய பயனே அதனை இல்லாதவர்களுக்குக்
கொடுத்து மகிழ்வது தான்.
ஆகவே அன்பான உறவுகளே நம்முடைய தொழில் எதுவாக இருந்தாலும், நாம் அதிக ஆர்வத்துடன் உத்வேகத்துடனும் ஈடுபட்டால் அதுவே சிறந்தது.
3 கருத்துகள்:
மிக அருமையான விடயங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன. வாழ்த்தகள் சகோதரி. தொடரட்டும் பணி.
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
பயனுள்ள அருமையான பதிவு - நன்றி பாபு நடேசன்
கருத்துரையிடுக