செவ்வாய், அக்டோபர் 18, 2011

நாடுகாண் பயணம் - சைப்பிரஸ்

நாட்டின் பெயர்:
சைப்பிரஸ் (Cyprus)

வேறு பெயர்கள்:
சைப்பிரஸ் குடியரசு (Republic of Cyprus) அல்லது 'சைப்பிரஸ் தீவு'
*டென்மார்க் மொழியில்(டேனிஷ் மொழியில்) இந்நாட்டை 'குய்ப்பொன்' என அழைத்தாலும் எழுதப்படும்போது Cypern என்றே எழுதுகின்றனர் என்பதை டென்மார்க்கில் வாழும் வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும். 


அமைவிடம்:
கிழக்கு மத்திய தரைக் கடல் மற்றும் ஆசியக் கண்டம்


அண்டைநாடுகள்:
கிழக்கு - சிரியா 
மேற்கு - கிரேக்க நாடு 
வடக்கு - துருக்கி 
தெற்கு - எகிப்து 

எல்லைகள்:
தீவு என்பதால் நான்கு பக்கமும் மத்திய தரைக் கடல் என்றே கூற வேண்டும். ஆனால் சைப்பிரஸ் ஒரு சிறிய தீவாக இருப்பினும் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான எல்லைகளையும், புவியியல் அமைவையும் கொண்டுள்ளது.
அவை பின்வருமாறு:-
 • வடகிழக்கில் துருக்கி நாட்டிற்குச் சொந்தமான 'சைப்பிரஸ்' பகுதியும்,
 • கிழக்கில் பிரித்தானிய இராணுவத்திற்குச் சொந்தமான Dhekelia எனும் பெயருடைய இராணுவத் தள நிலப் பரப்பையும்,
 • தெற்கு மத்திய பகுதியிலும் பிரித்தானிய இராணுவத்திற்குச் சொந்தமான Akrotiri எனும் பெயருடைய இராணுவத் தள நிலப் பரப்பையும்.
 • மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமாக துருக்கி மற்றும் கிரேக்க நாடுகளின் சைப்பிரஸ் பகுதியை பிரிக்கும் அல்லது ஊடறுத்துச் செல்லும் பச்சைக் கோடு(Green line) எனப்படும் ஐ.நா. எல்லைக் கோட்டில்/நிலப் பரப்பில்(UN buffer zone) 1964 ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் நிலை கொண்டுள்ளனர். துருக்கி மற்றும் கிரேக்க நாடுகள் எல்லையை மீறி விடாமல் காப்பதும், இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டுவிடாமல் காப்பதுமே இப்படையினரின் நோக்கமாகும்.இருப்பினும் 20.07.1974 இல் எல்லைக் கோட்டை மீறியதால் துருக்கி மற்றும் கிரேக்க நாடுகளுக்கிடையில் யுத்தம் மூண்டது என்பதை வரலாற்றின் மீது ஆர்வம் உள்ளோர் அறிவீர்கள்.
தலைநகரம்:
நிக்கோசியா (Nicosia)

மொழிகள்:
கிரேக்க மொழி மற்றும் துருக்கிய மொழி.

இனங்கள்:
கிரேக்கர் 77% 
துருக்கியர் 18%
ஏனையோர் 5%


சமயங்கள்:
கிரேக்க பழமைவாதக் கிறீஸ்தவம் 78%
சுன்னி இஸ்லாம் 18%
ஏனைய கிறீஸ்தவர் 1,3
ஏனையோர்(இந்துக்கள், சீக்கியர், பஹாய், யூதர்,கத்தோலிக்கர், புரட்டஸ்தாந்துகள்) 2,7%


கல்வியறிவு:
97,6 %

ஆயுட்காலம்:
ஆண்கள் 75 வருடங்கள் 
பெண்கள் 80.7 வருடங்கள் 

ஆட்சி முறை:
ஜனாதிபதி தலைமையிலான குடியரசு 

ஜனாதிபதி:
டிமிற்றிஸ் கிரிஸ்டோபியஸ்(Dimitris Christofias) *இது 18.10.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம்:
19.02.1959 

பரப்பளவு:
9,251 சதுர கிலோ மீட்டர்கள் 

சனத்தொகை:
தெற்கில்(கிரேக்க சைப்பிரஸ் பகுதியில்) 803, 147 பேர் 
வடக்கில்(துருக்கிய கட்டுப்பாட்டுப் பகுதியில்) 285,356 பேர் 
தீவின் மொத்தச் சனத்தொகை 1,088,503 (2010 மதிப்பீடு)

நாணயம்:
யூரோ (கிரேக்க சைப்பிரஸ் பகுதியில்/சைப்பிரஸ் குடியரசில் யூரோவும், துருக்கிய சைப்பிரஸ் பகுதியில் துருக்கியின் நாணயமாகிய லிராவும் புழக்கத்தில் உள்ளன.)

இணையத் தளக் குறியீடு:
.cy

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 357 


விவசாய உற்பத்திகள்:
புளிப்பான பழங்கள், காய்கறிகள், பார்லி, திராட்சை, ஒலிவ மரத்தின் காய் மற்றும் எண்ணெய், கோழி இறைச்சி மற்றும் முட்டை, பன்றி இறைச்சி, பாற்பண்ணை உற்பத்திகள், பாலாடைக் கட்டி(Cheese)

தொழில் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
சுற்றுலாத்துறை, உணவு தயாரித்தல் மற்றும் பதனிடல், சீமெந்து மற்றும் ஜிப்சம் உற்பத்தி, கப்பல் பழுதுபார்த்தல், துணிவகை உற்பத்தி, மென் ரக ரசாயனப் பொருள் உற்பத்தி, உலோகப் பொருட்கள் உற்பத்தி, மரம், காகிதம்(பேப்பர்), கல், களிமண்.

ஏற்றுமதிகள்:
புளிப்பான பழங்கள், உருளைக் கிழங்கு, மருந்து மாத்திரைகள், சீமெந்து, துணிவகை.

துருக்கியக் கட்டுப்பாட்டுப் பகுதியில்

விவசாய உற்பத்திகள்:
புளிப்பான பழங்கள், திராட்சை, உருளைக் கிழங்கு, ஒலிவ மரத்தின் காய் மற்றும் எண்ணெய், கோழி இறைச்சி மற்றும் முட்டை, ஆட்டிறைச்சி, பாற்பண்ணை உற்பத்திகள்.

தொழில் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
உணவு உற்பத்தி மற்றும் பதனிடல், துணிவகை உற்பத்தி, கப்பல் பழுதுபார்த்தல், களிமண் மற்றும் ஜிப்சம், செப்பு, மரத் தளபாடங்கள்.

ஏற்றுமதிகள்:
புளிப்பான பழங்கள், பாற்பண்ணை உற்பத்திகள், உருளைக் கிழங்கு, துணிவகைகள். 


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
 • ஒரு நாடு என்ற வரையறைக்குள்ளும், ஒரு தீவு என்ற வகைப்படுத்தலுக்கும் உட்படக் கூடிய ஆனால் இறைமையுள்ள அரசு.மத்திய தரைக் கடலில் உள்ள மூன்று தீவுகளில் மிகப் பெரிய தீவு இதுவாகும்.
 • ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுள் ஒன்று. சைப்பிரஸ் நாட்டுப் பிரஜைகள் ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வசிப்பதற்கு உரிமை உடையவர்கள்.
 • 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் மேற்படி தீவு துருக்கி நாட்டினால் பிரித்தானியப் பேரரசிற்கு விற்கப் பட்டது.
 • ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு நாடு. மேற்படி நாட்டின் தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு கிரேக்க நாட்டிலிருந்து கப்பல்களில் தண்ணீர் எடுத்து வரப் படுகிறது. 83 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அண்டை நாடாகிய துருக்கி மேற்படி சைப்பிரஸ் நாட்டிற்குத் தண்ணீர் விற்க மறுக்கிறது. ஆனாலும் துருக்கி நாடு அரபுக்களின் எதிரியாகிய 'இஸ்ரேல்' நாட்டிற்கு குழாய்மூலம் தண்ணீரை விற்று வருகிறது.
 • உலகில் மொத்தத் தேசிய வருமானத்தில் பெரும் தொகையைக் கல்விக்காகச் செலவு செய்யும் நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் சைப்பிரஸ் உள்ளது. முதலாவது இடத்தில் டென்மார்க்கும், இரண்டாவது இடத்தில் சுவீடனும் உள்ளன.
 • உலகில் உழைக்கும் வர்க்கத்தில் உள்ளோரில் பெரும் பகுதியினர் உயர் கல்வி கற்றவர்களாக உள்ள நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.முதலாவது இடத்தில் பின்லாந்து உள்ளது குறிப்பிடத் தக்கது.
 • ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வீதியின் இடது பக்கமாக வாகனத்தை ஓட்டுகின்ற நான்கு நாடுகளில் சைப்பிரஸ்ஸும் ஒன்று. ஏனைய மூன்று நாடுகளும் முறையே ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, மற்றும் மால்ட்டா ஆகும்.
சைப்பிரஸ் நாட்டின் வரலாற்றை அறிவதற்கு ஆர்வமுள்ளவர்கள் இங்கே அழுத்தவும்:

3 கருத்துகள்:

Vetha. Elangathilakam. சொன்னது…

வடகிழக்கில் துருக்கி நாட்டிற்குச் சொந்தமான 'சைப்பிரஸ்' பகுதியும்,
good information. Thank you anthimaalai.

Uthayan சொன்னது…

Very nice imformation, Thanks for Thasan

Akilan சொன்னது…

Very good Article, following like this story

கருத்துரையிடுக