கியூபா (Cuba)
வேறு பெயர்கள்:
கியூபா குடியரசு (ஆங்கில மொழியில் Republic of Cuba மற்றும் ஸ்பானிய மொழியில் Republica de Cuba)
அமைவிடம்:
பசுபிக் சமுத்திரத்தில் 'கரீபியன்' வட்டம்.
எல்லைகள்:
தீவு என்பதால் நான்கு பக்கமும் பசுபிக் சமுத்திரம் இருப்பினும் அண்டை நாடுகளாக
வடக்கில் - அமெரிக்கா(USA),
தெற்கில் - கேய்மன் தீவுகள் மற்றும் ஜமாய்க்கா
தென் கிழக்கில் - கெயிட்டி டொமினிக்கன் குடியரசு
மேற்கில் - பஹாமாஸ் மற்றும் மெக்சிக்கோ
தலைநகரம்:
ஹவானா (Havana)
அலுவலக மொழி:
ஸ்பானிஷ்
தேசிய இனங்கள்:
வெள்ளையர் 65 % , ஆபிரிக்கர் 10 %, முலாட்டோ மற்றும் மெஸ்டிசோ 24.8 %
கல்வியறிவு:
ஆயுட்காலம்:
ஆண்கள் 76,2 வருடங்கள்
பெண்கள் 80,4 வருடங்கள்
ஆட்சி முறை:
பொதுவுடைமைக் கூட்டாட்சிக் குடியரசு
ரௌல் காஸ்ட்ரோ (Raul Castro) *இது 11.10.2011 அன்று உள்ள நிலவரம் ஆகும்.
ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயினிடமிருந்து சுதந்திரப் பிரகடனம்:
10.10.1868
குடியரசாகிய தேதி:
20.05.1902
பரப்பளவு:
109,884 சதுர கிலோ மீட்டர்கள்
சனத்தொகை:
11,241,894 (2010 மதிப்பீடு)
நாணயம்:
கியூபன் பெசோ (Cuban peso)
இணையத் தளக் குறியீடு:
.cu
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 53
விவசாய உற்பத்திப் பொருட்கள்:
கரும்பு, புகையிலை, புளிப்பான பழங்கள், காப்பி, அரிசி, உருளைக் கிழங்கு, அவரை, கால்நடைகள்.
தொழிற்சாலைகள்:
சீனி, பெற்றோலியம், புகையிலை, கட்டிடப் பொருட்கள், நிக்கல், உருக்கு, சீமெந்து, விவசாய இயந்திரங்கள் உற்பத்தி, மருந்து வகைகள்.
ஏற்றுமதிகள்:
சீனி, நிக்கல், புகையிலை, மீன், மருத்துவப் பொருட்கள்(மருந்துப் பொருட்கள்), பழங்கள்.
2 கருத்துகள்:
Thank you very much for the info
Very good news
கருத்துரையிடுக