சனி, ஜூன் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை


கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடையார். (404)

பொருள்: படிக்காதவனுடைய அறிவு சில இடங்களில் மிகவும் நன்றாய் இருப்பினும், கற்றறிந்த சான்றோர்கள் அதை நன்றென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வாழையின் மகத்துவம்


வாழைத் தண்டை பொரியல்கூட்டுசாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத்தெரியும்அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்துகொள்வோம்.வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும்சிறுநீர் தாராளமாகப்பிரியும்மலச் சிக்கலைப் போக்கும்நரம்புச் சோர்வையும் நீக்கும்வாழைத் தண்டுச் சாற்றைஇரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால்வறட்டு இருமல் நீங்கும்.கோழைக் கட்டையும் இளகச் செய்யும்பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம்உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பதுஅனைவரும் அறிந்த விஷயம்அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்துஎடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர்துவர்ப்பு இருந்தால்சுவையிருக்காது என்று நினைத்துவிடுகின்றனர்.அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு `பி’ வைட்டமின்கிடைக்கிறதுபல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.
வாழை அநேக மருத்துவப் பயன்களைக் கொண்டதுகுறிப்பாக விஷப் பூச்சிகளின்தாக்குதலின்றி காக்கும் தன்மை வாழைக்கு உண்டுஇதனால்தான் சுபகாரியங்களில்வாழையை முதன்மையாக நட்டு வைக்கின்றனர்.வாழை ஒரு கிருமி நாசினியாகும்.வாழையின் ஒரு சிறிய கன்றை நட்டு வைத்தால் அதிக பட்ச கன்றுகளுடன் ஒரு குடும்பமாககாட்சி தரும்வாழையை அம்பணம்அரம்பைஓசைகதலிகவர்சேகலிதிரணபதி என்றபெயர்களில் அழைக்கின்றனர்.
 அடுக்கு வாழைரஸ்தாளி வாழைபூவன் வாழைகருவாழைகொட்டை வாழைசெவ்வாழை,நவரை வாழைநாட்டு வாழைபசும் வாழைபேயன் வாழைமலை வாழைமொந்தன் வாழைவேள் வாழைபச்சை வாழைமோரீஸ் வாழைகற்பூர வாழைநேந்திரம் வாழைசந்தனவாழைமட்டி வாழைரசக்கதலிகதலிவாழைமதுரவாழைசிங்கன் வாழைகல்வாழை எனபல வகைகள் உள்ளன.
 வாழையின் மருத்துவப் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்அவற்றில் சில மருத்துவப்பயன்களை அறிவோம்.

வாழை இலை
வாழை இலையில் உணவு பரிமாறுவது தென்னிந்திய விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம்வகிக்கிறது.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும்உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மைகொண்டதுஇதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறதுவாழையிலையின் மேல்உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்உணவை மேலும் 

வெள்ளி, ஜூன் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை


கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின். (403)

பொருள்: கற்றவர் முன்னிலையில் ஒன்றையும் பேசாமல் அமைதியாக இருக்கப் பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரேயாவர்.

ஆப்பிள் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

ஆப்பிள் பழம் உடலுக்கு ஆராக்கியமானது என்பது காலம் காலமாக அறியப்பட்ட ஒரு விடயம். தினசரி ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதன் மூலம் மருத்துவர்களை அணுக விடாமல் தடுக்கலாம் என்ற ஒரு கூற்றும் உள்ளது.
அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது. ஆப்பிள் குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
சீனாவை சேர்ந்த ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸென் யூ சென் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு இது. ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சாராசரியாக மனித ஆயுளை 10 சதவீதம் அதிகரிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
பழங்களை குறிப்பாக ஆப்பிளை தேடிச் செல்லும் வண்டுகள் உள்ளிட்ட பூச்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவற்றின் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகமாக இருப்பதன் மூலமும் இது உறுதியாகி உள்ளது.
இது குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் ஸென் யூ சென் கூறியதாவது: ஆப்பிளில் உள்ள பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உடலில் உள்ள நோய்க் கிருமிகளை பெருமளவில் அழிக்கிறது. இதனால் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியத்துடன் உடல் பருமன் குறைவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதை ஏராளமான ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வும் அதையே வலியுறுத்தி உள்ளது. 
தக்காளி, ப்ராகலி, ப்ளூபெரி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களில் உடலுக்கு மேலும்

வியாழன், ஜூன் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை


கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றுஅற்று. (402)

பொருள்: கல்லாதவன் தானும் அவையில் பேச வேண்டும் என்று விரும்புதல், இரண்டு முலைகளும் இல்லாத ஒருத்தி பெண்மையை விரும்பியது போலாகும்.

இன்றைய பொன்மொழி


மூத்தோர் சொல் 


த்து வயதில் பெண் தேவகன்னியாக இருப்பாள், பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள், நாற்பதில் சாத்தானாவாள், எண்பதில் சூனியக் காரியாவாள்

கோடையில் எச்சரிக்கை!

கோடைகாலம் தவிர்க்க முடியாதது. ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும். நாம்  கையாளும் இயற்கை வழிமுறைகள் நம் உடலையும் கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.

கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயற்சியும் ஆயாசமும் கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது  இயற்கை. கோடை காலத்தில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுவதால் நமக்கு தாகமும்  வறட்சியும் ஏற்படுகிறது.

இது போன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சைச்சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது  மிகவும் நல்லது. இளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும்.

அவ்வாறு இருப்பவர்கள் அவற்றுடன் சிறிது மிளகுத் தூளை சேர்த்துக் கொண்டால் போதும். எலுமிச்சை  சாற்றுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

நாம் அருந்தும் குளிர்பானங்கள், காபி, டீ போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதிலாக பனைவெல்லம் சேர்த்துக்  கொள்வது நன்மை தரும்.

எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும் ஜூஸாக எடுத்துக் கொள்வதைவிட சுவைத்துச் சாப்பிட்டால் அதன் பலன் இரட்டிப்பாகும்.
பனைநுங்கு சாப்பிடலாம். சுத்தமான மோரில் உப்பு போட்டு அதிக அளவு அருந்தலாம். புதுப்பானையில் இரண்டு கிராம் முருங்கைப் பிசினை போட்டு சில மணி நேரம் ஊறிய பின் தாகம் எடுக்கும்போது குடித் தால் தாகம் தணியும். இளநீர் சாப்பிடலாம்.

அகத்திக்கீரை, நல்லெண்ணெய், வெந்தயம் முதலியவற்றைக்கொண்டு தலை முழுகி வந்தால் உடல் உஷ்ணம் முற்றிலும் நீங்கும்.

கோடையில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே மோருடன் கீழாநெல்லியைக் கலந்து காலை வேளையில்,வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதேபோல் மூலநோய் உள்ளவர்களுக்கும் கோடைகாலத்தில் அவஸ்தை ஏற்படும். இவர்கள் மாங்காயில் உள்ள பருப்பை அரைத்து மோரில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழம் நிறைய சாப்பிடுவது நல்ல  பலனளிக்கும்.

முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, வெள்ளைப்பூசணி, சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களை சாலட்டாக மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

கோடைகாலங்களில் கனரக ஆலைகளில் வாகனங்களில் பணிபுரிபவர்களுக்கு உடல் அதிக உஷ்ணம் அடைந்து அநேகப் பிரச்னைகள் ஏற்படும்.

இதற்கு சீரகம், வெந்தயம் இரண்டையும் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டு மோரில் கலந்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும்.

அஜீரணக்கோளாறுகள், மலச்சிக்கல் மேலும்

புதன், ஜூன் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 41 கல்லாமை


அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல். (401)

பொருள்: நிரம்பிய நூல் அறிவு இல்லாமல் ஒருவன் அறிவுடையோர் சபையில் சென்று பேசுதல், அரங்கம் இல்லாமல் தெருவில் நின்று நடனம் ஆடுவதற்கு ஒப்பாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

மரண சிந்தனைகள்

மரணம் என்றால் என்ன? உடலை விட்டு உயிர் பிரிவதா? அதுதான் மரணமா?

ஒருவகையில் மரணம் என்பது உடலை விட்டு இந்த உயிர் பிரிவதுதான். ஏன் உடலைவிட்டு இந்த உயிர் பிரிகிறது? இந்த உடல் தான் வாழ தகுதியில்லை என்று உயிர் கருதுகிறபோது இந்த உடலை துறக்கத் தீர்மானிக்கிறது. அதைத்தான் மரணம் என்கிறோம்.

சரி. இது மட்டும்தான் மரணமா? இல்லை. நிறைய மரணங்கள் வாழ்க்கையில் உண்டு. ஒரு குழந்தை பிறக்கும்போது அது தூய்மையாய் இருக்கிறது. நம் இதயத்தில் உள்ள உயிரில் பல உள்ளுயிர்கள் உள்ளன. நாம் வளர வளர அத்தனை உள்ளுயிர்களும் இந்த பேருயிருக்குள் வளரத்துவங்குகின்றன. இந்த உள்ளுயிர்களை நாம் குணங்கள் என்றும் பேரிட்டு அழைக்கிறோம். 

இவற்றின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. கடவுள் ஒருவரே இவ்வுயிர்கள் கணக்கில் வைக்க முடியும். இவற்றை ஒரு மனிதன் எப்படி பயன்படுத்துகிறானோ அவ்விதமாகவே அவன் நல்லவனாகவோ தீயவனாகவோ மாறுகிறான். 

குழந்தையானது வளரும்போது தாய்ப்பாலுக்காக தாயை ஏமாற்றுகிறது பாருங்கள். அங்கே நிகழ்கிறது முதல் உள்ளுயிரின் மரணம். பள்ளியில் படிக்கும்போது, விளையாடும்போது பொய் சொல்கிறது பாருங்கள். அங்கே நிகழ்கிறது அடுத்த மரணம். 

களவு செய்யும்போது அடுத்த மரணம் நிகழ்கிறது. அடுத்தவர் பொருளை இச்சிக்கும்போது அடுத்த மரணம். வளர்ந்து வாலிபனான பிறகு முறையற்ற காதல், காமம் என்று சீரழிகிறது பாருங்கள். அப்போது நிகழ்கிறது அடுத்த மரணம். 

இப்படியாக மரணம் மரணம் மரணம் என்று நமக்குள் மரணங்களே நிகழ்ந்து கொண்டு இருப்பதால் நமக்குள் உள்ள அந்த தீய மனிதனே வளர்ந்துதான் இன்று பேயாட்டம் ஆடுகிறான். கடைசியில் இந்தப் பேருயிர் உடலை விட்டுப் பிரிந்து விடுகிறது. 

மாறாக சிறு வயதிலிருந்தே முறையாக நல்லொழுக்கங்களை பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்க்கும்போது நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் (உள்ளுயிர்கள்) வளர்ந்து பெரியவராகும்போது நமக்குள் இருக்கும் அந்த நல்ல மனிதன் வளர்ந்து நமக்கும் நம் குடும்பத்துக்கும் நம் சமுதாயத்துக்கும் நம் நாட்டிற்கும் ஏன் இந்த முழு உலகத்துக்குமே பயன்தரும் அற்புதமான மனிதனாகிறான். பூரண ஆயுள் எனும் கட்டிடத்துக்கு நல்ல குணங்களே அஸ்திபாரங்களாகும். 

ஜீவனுள்ளவனாவதும் மரணவாசனையுடையவனாய் மாறுவதும் நம் கையில்தான் இருக்கிறது. 

இறப்பிற்காக நாம் அழ வேண்டுமா? நிச்சயம் வேண்டும். நெருங்கியவர் பிரிந்தால் நெஞ்சம் தாங்குமா? 

பட்டினத்தார் என்ன சொல்கிறார் தெரியுமா?

“அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் கடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையம் தீமையும் பங்கயத்தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதிரு என்ஏழை நெஞ்சே!”

இதே பட்டினத்தார்தான் தன் தாய் மேலும்

செவ்வாய், ஜூன் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. (400)

பொருள்: ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியேயாகும். ஏனைய மணி, பொன் முதலிய செல்வங்கள் அழியக் கூடியன. ஆதலால் அவை செல்வங்கள் ஆகா.


இன்றைய சிந்தனைக்கு

பீட்டர் அபெலார்ட்

விந்தையான சிலரையும், மோசமான மனிதர்களையும் பார்க்கும்போது "இவர்கள் ஏன் இப்படி? என்று நொந்துபோய் விடாமல் "இவர்கள் இப்படித்தான்" என எண்ணிக் கொள்ளுங்கள்.

இன்சுலினை கட்டுப்படுத்தும் வழிகள்


மனித உடலின் ஆரோக்கியத்திற்கு இன்சுனின் சுரப்பு அவசியமாகும். குறைந்த அளவு இன்சுலின் சுரப்பு உடலின் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கிவிடும். 

எனவே இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் மருத்துவர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளனர். 

சரியான உறக்கம் தேவை

உடலுக்கும் தரும் ஓய்வுக்கும், ஹார்மோன் சுரப்பதற்கும் தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 24 மணிநேரத்தில் 7 மணி நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதுவே உடலில் சரியான அளவில் இன்சுலின் சுரக்கச் செய்யும். உறக்கம் குறைபாடு ஏற்பட்டால் மன உளைச்சல் உள்ளிட்ட ஏற்பட்டு இன்சுலின் சுரப்பில் பாதிப்பில் ஏற்படும். நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு இதுவே காரணமாகிறது. 

பரிசோதனை கட்டாயம்

நமது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன்மூலம்தான் அதற்கேற்ப உணவை எடுத்துக்கொள்ள முடியும். இன்சுலின் அளவு சரியாக சுரப்பதற்கு உணவுமுறையும் அவசியம். இதன் மூலம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுப்படும். 

திட்டமிடுவது அவசியம்

உணவு திட்டமிடல் அவசியம். தினசரி மூன்றுவேளை உணவு அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும். புரதம், மாவுப்பொருட்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். ஒருவேளை உணவு தவறினாலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைத்து மயக்க நிலையை ஏற்படுத்திவிடும். எனவே சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்வது அவசியம். 

இனிப்பு மிகுந்த உணவுகள்

உண்ணும் உணவில் குறைந்த குளுக்கோஸ் உள்ள உணவுகளை கண்டறிந்து உண்ணவேண்டும். காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் போன்றவை குறைந்த குளுக்கோஸ் அளவுள்ள உணவுகளாகும். அது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். டைப் 2 நீரிழிவு ஏற்படுவதை தடுக்கும். 

நார்ச்சத்து உணவுகள் 

மாவுச்சத்துள்ள உணவுகளை உண்பது உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சிரமம் உண்டாகும். எனவே நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது உணவு ஜீரணத்தன்மை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். மேலும் உடலில் கொழுப்பு அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தும். இது இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்தும். 

உடற்பயிற்சி அவசியம்

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். குறைந்த ரத்த அழுத்தம், இதயநோய் போன்றவற்றை தடுக்கும். எடையை கட்டுக்குள் வைத்து இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தும். தொடர்ந்து யோகா செய்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கும்.
நன்றி: இதயபூமி 

திங்கள், ஜூன் 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காம்உறுவர் கற்றுஅறிந் தார். (399)

பொருள்: கற்றறிந்தவர் தாம் இன்பமடையக் காரணமாகிய கல்வியால், உலகத்தினரும் இன்பமடையும் சிறப்பைக் கருதி அக்கல்வியை மேலும் விரும்பிக் கற்பர்.

இன்றைய சிந்தனைக்கு

மகாத்மா காந்தி

பிரச்சனைகளே இல்லாத வாழ்வை வேண்டுவதைக் காட்டிலும், அதை சமாளிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.

வெற்றிலை


மருத்துவக் குணங்கள்:
  1. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
  2. இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.
  3. வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
  4. இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
  5. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
  6. அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் மேலும் 

ஞாயிறு, ஜூன் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து. (398)

பொருள்: ஒருவனுக்கு அவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவியோடு போகாது. ஏழு பிறவிகளிலும் தொடர்ந்து சென்று உதவும் இயல்பு உடையதாகும்.

இன்றைய பழமொழி

அராபியப் பழமொழி

திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

ஐரோப்பா பயண அனுபவங்கள்


ரு காலத்தில் வெளிநாட்டுக்குப் போய் வந்தவர்களைக் கண்களை மலர்த்தி நான் பார்ப்பதுண்டு. வெளிநாடு சென்று வருவது என்பது ஏதோ முற்பிறவியில் செய்த அதிர்ஷடம் என நான் நினைப்பேன். சாவதற்குள் ஒரு முறையேனும் கடல் கடந்து சென்று வெளிநாடுகளைக் கண்டுவந்து விடவேண்டும் என்ற தணியாத ஆவல் எனக்கிருந்தது.  ஆனால் இக்காலத்தில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். அயல்நாடுகளுக்குப் பயணம் என்பது நம் கிராமங்களிலுள்ள படிப்பறிவில்லாக் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூடதற்போது சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது.

என் மகன் பிரான்சில் அப்போது மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்ததால்அவனது அழைப்பை ஏற்று 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்று வாரங்கள் என் கணவருடன் ஐரோப்பா சென்று வந்தேன். 1950 களில் பாரீஸில் வேலையிலிருந்த என் தந்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாரீஸைத் திரும்பவும் பார்க்க விருப்பப்பட்டு எங்க்ளுடன் பயணத்தில் கலந்து கொண்டார். பிரான்ஸ்,இங்கிலாந்துஇத்தாலி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு நாங்கள் சென்று வந்தோம்.

ஐரோப்பா யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குச் செல்ல ஷென்கன் விசா (schengen visa) வாங்கவேண்டும். ஆனால் அதே யூனியனின் அங்கத்தினர்களான இங்கிலாந்துசுவிட்சர்லாந்து நாடுகளுக்குச் செல்ல அப்போது தனி விசா வாங்க வேண்டும்.(இப்போது ஏதும் மாறியிருக்கிறதா எனத் தெரியவில்லை) பிரான்சின் தூதரகம் புதுச்சேரியிலேயே இருப்பதால் பிரான்ஸ் விசா வாங்குவதில்எங்களுக்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை. விசாவிற்கான விண்ணப்பப் படிவமும் எளிமையாகத் தான் இருந்தது. விண்ணப்பம் கொடுத்த ஐந்து நாட்களுக்குள் எங்களுக்கு ஷென்கன் விசா கிடைத்து விட்டது.

அதற்குப் பிறகு தான் இங்கிலாந்து விசாவிற்கு விண்ணப்பித்தோம். அடேயப்பா! படிவத்தின் பத்துப் பனிரெண்டு பக்கங்களைப் பூர்த்தி செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு நாட்கள் லண்டன் போய்ச் சுற்றிப் பார்ப்பதற்காக விண்ணப்பித்திருந்தோம்.

'எங்கெங்கு பயணம் செய்யப்போகிறீர்கள்எங்குத் தங்கப்போகிறீர்கள்அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் முகவரிஉறவினர் வீடு என்றால் அவரது பெயர் மற்றும் முகவரி?' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்துவிட்டார்கள் கேள்வியின் நாயகர்கள்!

அதில் வரும் இன்னும் சில கேள்விகளைப் பாருங்கள்:-

'எப்போதாவது போர்க்குற்றம்மனித குலத்துக்கெதிரானப் போராட்டம்,இனப்படுகொலை (war crimes, war against humanity, genocide) போன்ற நடவடிக்கைகளில் பங்கு கொண்டவராயிருந்தால் அது பற்றிய விபரங்கள்?

எந்த நாட்டிலாவது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதுண்டாதீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்த துண்டாஆம் எனில் அதன் விபரம்?'

எனக்கு ஒரு சந்தேகம். எந்தத் தீவிரவாதியாவது முறையாகப் பாஸ்போர்ட்விசா வாங்கிப் பயணம் செய்வானா?  அப்படியே செய்தாலும் இந்தக் கேள்விகளுக்கு 'ஆம் நான் ஒரு தீவிரவாதி தான் இந்தந்த நாடுகளில் நான் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன் என்று உண்மையைச் சொல்வானா?'

சென்னையில் விசா விண்ணப்பப் படிவம் கொடுத்த போது கைரேகைகண்கள் முதலானவற்றைப் பதிவு செய்து கொண்டார்கள். எல்லாவற்றையும் கொடுத்து மூன்று வாரங்களாகியும் விசா கிடைத்தபாடில்லை. கடைசி நேரத்தில்டென்ஷன் அதிகமானதுடன் நாங்கள் பதிவு செய்திருந்த விமானத்தை மேற்கொண்டு பணம் கொடுத்து ஒருவாரத்திற்கப்புறம் மாற்ற வேண்டியதாய்ப் போய் விட்டது. கடைசியில் வெறுத்துப்போய் மேலும் 

சனி, ஜூன் 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


யாதானும் நாடாமல், ஊர்ஆமால், என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. (397)

பொருள்: கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகும்; எந்த ஊரும் சொந்த ஊராகும். அப்படியிருக்க ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமல் இருப்பது எதனால்?

இன்றைய பொன்மொழி

அரிஸ்டோட்டில்

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை.

தொப்பை குறைக்க அன்னாசி


ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்


1. அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறதது.
   
2. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
   
3. ஒவ்வொரு வீட்டுச் சமையறையிலும் சமையலுக்கு பயன்படும் பொருட்களின் மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்துவருகிறோம். இவற்றின் அளப்பறிய பயன்களை அறியாமலே நாம் மேலும் 

வெள்ளி, ஜூன் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி



தொட்டனைத்து ஊறும் மணற்கேணி; மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.

பொருள்: மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணற்று நீர், தோண்டும் அளவுக்கு ஏற்பச் சுரக்கும். அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற கல்வியின் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும்.

இன்றைய பொன்மொழி

யாங் ஸீ

உலகிற்கு அதிபதியாக இருப்பினும் ஒரு நல்ல நண்பன் இல்லாவிடில் அவன் ஏழைதான். உலகைக் கொடுத்து ஒரு நல்ல நண்பனை வாங்கினாலும் அது ஆதாயம்தான்.

குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்

பச்சை மற்றும் சிவப்பு மிளகாய்:

சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை.
*
பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
*
வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது.

வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய்.

லத்தின் பெயர்: Capsium Firutesceans, Linn; Solonacea.

மருத்துவக் குணங்கள்: மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.

மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.

மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.

மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக மேலும் 

வியாழன், ஜூன் 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். (395)

பொருள்: செல்வர் முன்பு வறியவர் ஏங்கி நின்று யாசித்தல் போலக் கல்வி உடையவர் முன்பு வணக்கத்தோடு பணிந்து நின்று கற்பவர்களே, உயர்ந்தவராவர். அவ்வாறு கல்லாதவர் தாழ்ந்தவரேயாவர்.

இன்றைய பொன்மொழி

ஹென்றிக் இப்சன்

உன் தகுதி பிறருக்குத் தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

பறக்கும் பட்டத்திலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரம் – புதிய கண்டுபிடிப்பு


காற்றின் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால் உலகின் மின்தேவையைவிட 100 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காற்றைக்கொண்டு மின்சாரம் பிறப்பிப்பதற்கு காற்றாலைகளை அமைத்து காற்றாடிகள் மூலமே (Wind turbines) இதுவரை காலமும் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. புவி மேற்பரப்பிலிருந்தான உயரம் அதிகரிக்கும்போதே காற்றின் வேகம் அதிகரித்து பெறக்கூடிய மின்சாரமும் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவு உயரத்துக்கு காற்றாடிகளை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவேதான் புவி மேற்பரப்பிலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் காற்றின் சக்தியை பயன்படுத்துவதற்காக பட்டத்தைப் பயன்படுதும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு  மேலும் 

புதன், ஜூன் 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (394)

பொருள்: பலரும் மகிழுமாறு அவர்களுடன் கூடிப் பழகி, பின்னர் இவரை இனி எப்போது காண்போமோ என்று அவர்கள் எண்ணி ஏங்குமாறு அவர்களை விட்டுப் பிரிதலே கற்றறிந்த புலவர் தொழிலாகும்.

இன்றைய பொன்மொழி

பிளேட்டோ

எல்லாம் சரியாக இருக்கிறது என்பவனிடமும், எதுவும் சரியில்லை என்பவனிடமும் எச்சரிக்கையாய் இரு.

மது என்னும் அரக்கன்

உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து, சின்னாபின்னமாக்கக் கூடிய மற்றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.

மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும் சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.

சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.
நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும் கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.
உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது.
இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில் ஒரு மிருகமாக்கி விடும். மனிதத் தன்மை அழிந்து மிருக சக்தி ஏற்படுவதால் அவர்களுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாது.
நாள்தோறும் சிறிது மதுவைக் குடித்து வருபவர் தனக்கு மதுவால் அதிக தீங்கு நேரவில்லை. நேராது என்று எண்ணி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். ஆனால் அவர் தனது ஈரல் மூளை நரம்புகள் சிறுநீரகங்கள் பாலின உறுப்புகள் நுரையீரல்கள் இரைப்பை இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தைப் பாதிக்க நேர்ந்தால் இந்த உறுப்புகளெல்லாம் சிறிது சிறிதாகக் கெட்டுவருவதை மேலும்