திங்கள், நவம்பர் 01, 2010

நாடுகாண் பயணம் - அன்ரிகுவா மற்றும் பார்புடா



நாட்டின் பெயர்:
அன்ரிகுவா மற்றும் பார்புடா


முழுப்பெயர்:
இந்நாடு இரண்டு மிகப்பெரிய தீவுகளை ஆட்சிப் பிரதேசமாகக் கொண்டிருப்பதால் எப்போதுமே 'அன்ரிகுவா மற்றும் பார்புடா' என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இவ்விரு தீவுகளில் அன்ரிகுவா பரப்பளவில் பெரியதும், பார்புடா பரப்பளவில் சிறியதுமாகும்.

இந்நாட்டின் ஆட்சிக்குட்பட்ட ஏனைய சிறு தீவுகள்:
கிரேட் பேட், கிரீன், கினியா, லோங், மெய்டன், யோக் தீவுகள்.

அமைவிடம்:
கரீபியன் கடல் மற்றும் அத்திலாந்திக் சமுத்திரம்(தென் அமெரிக்கா)

தலைநகரம்:
சென்.ஜோன்ஸ்

நாட்டு எல்லைகள்:
நான்கு பக்கமும் கரீபியன் கடல் மற்றும் அத்திலாந்திக் சமுத்திரம்.

நாட்டின் பரப்பளவு:
440 சதுர கிலோமீற்றர்கள்.

சனத்தொகை:
சுமார் 85,632(2009 மதிப்பீடு)

நாணயம்:
கிழக்குக் கரீபியன் டொலர்

நாட்டு மொழிகள்:
அலுவலக மொழி - ஆங்கிலம்.
உள்ளூர் மொழி - அன்ரிகுவான் கிரியோலி.

அரசாங்க முறை:
அரசியின் ஆட்சிக்கு உட்பட்ட பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி.

நாட்டின் முடிக்குரிய அரசி:
இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து ராணி)

பிரதமர்:
பால்ட்வின் ஸ்பென்சர்

கௌரவ ஆளுநர்:
டேமா லூயிசா லேக் டக்

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
001-268

சமயங்கள்:
74% கிறீஸ்தவம்(அங்கிலிக்கன்)
25% பாப்டிஸ்ட்,பிரெஸ்பைடேரியன், கத்தோலிக்கம்.
மிகச் சிறிய அளவில் ராஸ்டாபரி, இஸ்லாம், யூதர் மற்றும் பஹாய்.

கல்வியறிவு:
90%(1998 மதிப்பீடு)

ஆயுட்காலம்:
ஆண்கள்: 72 ஆண்டுகள்
பெண்கள்: 76 ஆண்டுகள்

பிரதான வருமானம் தரும் தொழில்:
சுற்றுலாத்துறை(ஆண்டொன்றுக்கு சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள்), வங்கித்துறை.

ஏற்றுமதிப் பொருட்கள்:
பருத்தி, தைக்கப்பட்ட ஆடைகள், மதுபானம், வீட்டுத் தளபாடங்கள், பெற்றோலியம் சம்பந்தமான பொருட்கள், கைவினைப் பொருட்கள், வாகன உதிரிப் பாகங்கள், மிகச்சிறிய அளவில் காய்கறி, பழங்கள்(மாம்பழம்), விலங்குணவு.

இயற்கை வளங்கள்:
கருங்கல், சுண்ணக்கல், பீங்கான் களிமண், உப்பு, பொஸ்பேற்.

2 கருத்துகள்:

theeban சொன்னது…

very good best of luck

பெயரில்லா சொன்னது…

இத் தீவுகள் ஒருமுறை கிரிக்கெட் உலக கிண்ண கோப்பைக்கான ஒருநாள் போடியில் போட்டியில் கலந்து கொண்டமை நினைவில் வடுகுது

கருத்துரையிடுக