நாட்டின் பெயர்:
முழுப் பெயர்:
ஆர்மீனியக் குடியரசு.
அமைவிடம்:
ஆசியா + ஐரோப்பா
தலைநகரம்:
யெரெவான்
நாட்டு எல்லைகள்:
கிழக்கு: அசர்பைஜான்
மேற்கு: துருக்கி
வடக்கு: ஜோர்ஜியா
தெற்கு: ஈரான் மற்றும் நக்சிவான் குடியரசு.
நாட்டின் பரப்பளவு:
29,743 சதுர கிலோமீற்றர்கள்.
சனத்தொகை:
3,250,000(2009 மதிப்பீடு)
நாணயம்:
டிராம்
நாட்டு மொழி:
ஆர்மீனியன்
அரசாங்க முறை:
ஜனாதிபதி ஆட்சிக் குடியரசு.
ஜனாதிபதி:
செர்ஸ் சர்க்ஸ்யான்
பிரதமர்:
டிக்றான் சர்க்ஸ்யான்
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-374
சமயங்கள்:
கிறீஸ்தவம்(உலகில் அரசாங்க மதமாக கிறீஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு)
மிகச் சிறிய தொகையில் முஸ்லீம்கள் மற்றும் யூதர்கள்.
கல்வியறிவு:
100% (சோவியத் ஆட்சியினால் பெற்ற நன்மை)
ஆயுட்காலம்:
ஆண்கள்: 70 வயது
பெண்கள்: 76 வயது
பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
கைத்தொழிற் துறை, இயந்திர உற்பத்தி, மருத்துவப் பொருட்கள் உற்பத்தி, ஆடைகள் ஏற்றுமதி.
ஏற்றுமதிப் பொருட்கள்:
இரசாயனப் பொருட்கள், மின்சார உபகரணங்கள், பதனிடப்பட்ட உணவுகள், துணிவகை.
இயற்கை வளங்கள்:
செப்பு, துத்த நாகம், தங்கம், ஈயம்.
உலக அரங்கத்தில்:
நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளை, அறிவியல் மேதைகளை உலகிற்குத் தந்த நாடு.

துயரம் தோய்ந்த வரலாறு:
முதலாம் உலகப் போரில் ஆர்மீனியாவின் மீது படையெடுத்த துருக்கிய இராணுவம் 15 லட்சம் ஆர்மீனியப் பொதுமக்களைக் கொன்று குவித்தது. லட்சக் கணக்கான பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர். பல லட்சம் பொதுமக்கள் வீடு, சொத்துக்களை இழந்து அகதிகளாயினர். இன்றும் உலகில் பல நாடுகளில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்மீனியர்கள் யுத்தம் தந்த வடுக்களின் சின்னங்களாக, அதன் சந்ததிகளாக, அகதி வாழ்க்கை வாழ்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக