செட்டிநாட்டு உணவகங்கள் பிரபலமாகக் காரணம் என்ன? செட்டிநாட்டுச்சமையலில் அப்படி என்ன விசேஷம்? இந்தக் கேள்விகளோடு, சிங்கப்பூரில் செட்டிநாட்டு உணவகம் ஒன்றை நடத்திவரும் திரு.பழனிச்சாமி என்பவரை அணுகினேன், ஆனால் அவரது பதில்கள் என்னைப் பெரியளவில் ஆச்சரியப்பட வைக்கவில்லை. அவர் கூறினார், "நாங்கள் எங்கள் சமையலில், சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்கிறோம்" அவரது இந்தப் பதில் என்னைத் திருப்திப் படுத்தவில்லை, நான் அவரிடம் திருப்பிக் கேட்டேன் "பெரும்பாலான உணவகங்கள் சுத்தத்தைத் தானே கடைப்பிடிக்கிறார்கள்? அவரிடமிருந்து பதில் அமைதியாக வந்தது. "இல்லை அது உங்கள் தவறான பார்வையும், போலித்தோற்றமும்" என்றார். அவர் மேலும் என்னிடம் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு: இலங்கையில், தமிழகத்தில் மட்டுமன்றி, மேற்கத்திய நாடுகளிலும் பெரும்பாலான உணவகங்கள் சுத்தத்திற்கு முக்கியத்துவம் தருவது குறைவு. வாடிக்கையாளர்களின் வரவு இதனால்தான் குறைய ஆரம்பிக்கிறது. இதை வாடிக்கையாளர்கள் நன்கு அறிவார்கள். எந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறதோ, அங்கு சுவை மட்டுமின்றி சுத்தமும் மேம்பட்டதாயிருக்கிறது என்று அர்த்தம்.
அப்படியில்லாவிட்டால் ஒரேயொரு விதிவிலக்கு மட்டும் உண்டு, அதாவது, அந்த உணவகங்களுக்கு அருகில் வேறெந்த உணவகங்களும் இல்லாமல் இருந்தால் 'வேறு வழியில்லாமல்' அந்த உணவகத்தை மக்கள் தேர்வு செய்வார்கள். அப்படியானால் செட்டிநாடு உணவகங்கள் எல்லாமே சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பவையா? இதுதான் நான் அவரிடம் கேட்ட அடுத்த கேள்வி.
(அடுத்த வாரமும் தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக