சனி, நவம்பர் 06, 2010

முதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 7

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது
சிங்கப்பூர்
யாழ்ப்பாணம் 
நான் பாடசாலையில் படித்த காலத்தில், பெரியவர்கள் பேசுவதை ஆர்வமாகக் கேட்கும் பருவத்தில், அவர்கள் பேச்சிலிருந்து நான் புரிந்துகொண்டதெல்லாம், "சிங்கப்பூர் என்பது எமது யாழ்ப்பாண நகரத்தை ஒத்த அளவு நிலப்பரப்பைக் கொண்ட ஒரு சிறிய நாடு என்பதாகும்" இதில் "யாழ்ப்பாண நகரத்தை ஒத்த அளவு நிலப்பரப்பு" என்ற கருத்து ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஏனெனில் யாழ்ப்பாண நகரின் நிலப்பரப்பு 20,2 சதுரகிலோமீற்றர்களாகும், 
ஆனால் சிங்கப்பூரின் நிலப்பரப்பு 710,2 சதுர கிலோமீற்றர்கள். சிலவேளை புவியியல் 'அறியாமை' காரணமாக யாழ்மக்களில் சிலர் "சிங்கப்பூர், யாழ்ப்பாண மாவட்டம் அளவேயான நிலப்பரப்பைக் கொண்டது" எனக் கூறியிருப்பின் அது ஓரளவுக்கேனும், ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகும். ஏனெனில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலப்பரப்பு 1025 சதுர கிலோமீற்றர்கள். இது சிங்கப்பூரின் நிலப்பரப்பிலிருந்து 314,8 சதுர கிலோமீற்றர்கள் அதிகமானதாகும். சிங்கப்பூர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பரப்பளவைப் பற்றித் துல்லியமாகத் தெரியாத எவரேனும் சிங்கப்பூர் நாடு, யாழ்ப்பாண மாவட்டம் அளவேயான நிலப்பரப்பைக் கொண்டது என்று கூறினால் அதை ஓரளவேனும் ஏற்றுக் கொள்ளலாம்.

சரி, சிங்கப்பூரின் பரப்பளவைப் பற்றிப் பார்த்தாயிற்று, சிங்கப்பூரின் சனத்தொகை எவ்வளவு? இவ்வருட சிங்கப்பூர் அரசின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி சிங்கப்பூரில் 50,76,700 (ஐம்பதுலட்சத்து எழுபத்தாறாயிரத்து எழுநூறு) பேர் வாழ்கிறார்கள். இவர்களில் 42 சதவீதத்தினர், வெளிநாட்டவர்களாவர். இந்த நாட்டில் நிலத்திற்கடியில் குடிநீர் கிடையாது, மண்ணில் கிணறு தோண்டினால் கிடைப்பது 'உவர்நீராகும்', அப்படியானால் இந்த ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிநீருக்கும், தமது நாளாந்தத் தேவைகளுக்கும் தண்ணீருக்கு(நன் நீருக்கு) என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? உங்கள் கேள்விக்கான விடை இதுதான்,
சிங்கப்பூர் மக்கள் பின்வரும் நான்கு வழிமுறைகளில் தமக்குத் தேவையான தண்ணீரைப் பெறுகிறார்கள்:

  1. தண்ணீரை இறக்குமதி செய்தல்.
  2. உபயோகிக்கப்பட்ட தண்ணீரைச் சுத்திகரித்துத் திரும்ப உபயோகித்தல்.
  3. மழைத் தண்ணீரைச் சேமித்து உபயோகித்தல்.
  4. கடல்நீரைக் குடிநீராக்கி உபயோகித்தல்.
இனி ஒவ்வொரு செயல்முறைகளையும் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
    1. தண்ணீரை இறக்குமதி செய்தல்:


    சிங்கப்பூர் என்ற சிறிய நாடு பிரித்தானியாவிடமிருந்து 16.9.1963 இல் உத்தியோகபூர்வமாகச் சுதந்திரமடைந்தது. சுதந்திரத்தின் பின்னர் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் மலேசியக் கூட்டமைப்பில்(கூட்டிணைவில்) ஒரு மாநிலமாக இணைந்திருந்தது. அதன் பின் மலேசியக் கூட்டமைப்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 9.8.1965 இல் மலேசியாவை விட்டுப் பிரிந்து சுதந்திர நாடாகியது. இந்நாடு மலேசியாவுடன் சேர்த்து பிரித்தானியர்களால் ஆளப் பட்டபோதும், மலேசியக் கூட்டமைப்பில் ஒரு ஒன்றியமாக(மாநிலமாக) இருந்தபோதும் மலேசியாவிடமிருந்து 'இராட்சதக் குழாய்கள்' மூலமாகவும், மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் இருக்கும் சுமார் 1 கிலோமீட்டர் தூரமுள்ள பாதை வழியாக... 
    அடுத்த வாரமும் தொடரும்   


    1 கருத்து:

    china சொன்னது…

    verry good

    கருத்துரையிடுக