எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு விரைவாக அமைதியும், நட்பும் உருவாகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ, ஓதப்படுகிறதோ, கற்பிக்கப்படுகிறதோ, அடுத்தவர் வாசிக்கும் தருணத்தில் காதால் கேட்கப்படுகிறதோ அங்கு நிச்சயமாக நான் வாசம் செய்கிறேன்(வசிக்கிறேன்).
முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இறைவனால் கொடுக்கப் பட்டதை மனிதனால் தடுக்க முடியாது. இறைவனால் தடுக்கப்பட்டதை மனிதனால் கொடுக்க முடியாது. ஆகவே எல்லாம் இறைவன் செயல்.
உலகில் உங்களால் திருத்தக் கூடிய நபர் நீங்கள் மட்டுமே. வேறு எவரையும் திருத்தும் முயற்சியில் வீணாக நேரத்தைச் செலவு செய்ய வேண்டாம். மாற்றங்கள் என்பது முதலில் எம்மிடமே ஏற்பட வேண்டும். உலகில் நாம் காண விரும்பும் மாற்றம் நாமாகத்தான் இருக்க முடியும்.