கடற்கன்னி (Mermaid) என்பது மேற் பகுதி பெண்ணாகவும், கீழ்ப்பகுதி மீன் வாலும் கொண்ட ஓரு நீர்வாழ் உயிரினம் பற்றிய கற்பனை விபரிப்பாகும். கடற்கன்னி பற்றிய நாட்டாரியல் கதைகள் ஐரோப்பா, சீனா, இந்தியா என உலகலாவிய கலாசாரங்களில் காணப்படும் ஓர் விடயமாகும். முதன் முதலாக இது பற்றிய கதைகள் புராதன அசிரியாவில்(தற்போதைய 'ஈராக்') காணப்பட்டது. 'அட்டாகடிசு' எனும் தேவதை தன் மனிதக் காதலனைத் தவறுதலாகக் கொன்றதும், அவமானத்தினால் கடற்கன்னியாக மாறினாள் என அக்கதை கூறுகின்றது. இன்னுமொரு நாட்டாரியல் பின்வருமாறு கூறுகிறது: "அஃதாவது மனிதாபிமானம், நன்மை செய்தல் அல்லது மனிதனுடன் காதலில் வீழ்தல் ஆகிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு 'கற்பனையாக' இந்தக் 'கடற்கன்னி' பற்றிய கதைகள் இருக்கக் கூடும்" எனக் கூறுகின்றது.
ஆனால் இன்றுவரை உலகில் ஒரு தடவையேனும் மேற்கூறப் பட்ட படைப்பாகிய 'கடற்கன்னியை' கண்ணால் கண்டவர் எவருமில்லர். வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட மீன் இனங்கள் மீனவர்களின் வலையில் பிடிபடும்போது அது 'கடற்கன்னி' என மீனவர்கள் நம்புவதும், அதுவே வதந்தியாகி, பத்திரிகைச் செய்திகளாக இடம்பெறுவதும் உண்டு. ஆனால் 'கடற்கன்னி' எனப் படுவது ஒரு கற்பனைப் படைப்பு என்பதை விஞ்ஞானிகள் அறிவர்.

1 கருத்து:
ஆனால் 'கடற்கன்னி' எனப் படுவது ஒரு கற்பனைப் படைப்பு என்பதை விஞ்ஞானிகள் அறிவர். Ennum theduvom...vaasippoom... nanry.. Very happy new year 2016...
கருத்துரையிடுக