செவ்வாய், பிப்ரவரி 19, 2013

நன்றி, நன்றி, நன்றி.

அந்திமாலையில் வாசகர் வருகை
  70,000 தைத் தாண்டியது.

எமது பேரன்பிற்குப் பாத்திரமான வாசகப் பெருமக்களே!
எமது அந்திமாலையின் உதயம்பற்றி முறைப்படி மின்னஞ்சல் ஊடாகவும், 'முகப் புத்தகம்' (facebook) ஊடாகவும், ஒரு சில அன்பு உள்ளங்களுக்குக் கடிதமூலமாகவும் அறிவித்தல் கொடுக்க ஆரம்பித்த 20.09.2010 தேதி தொடக்கம் இன்றைய தினம் (19.02.2013) செவ்வாய்க் கிழமை  பிற்பகல் 15.30 மணிவரை 'அந்திமாலை' இணையத்தளத்திற்கு வருகைதந்த வாசகர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 ஆகியது. இவ்விணையமானது ஒரு ஆத்ம திருப்திக்காகவும், பொழுதுபோக்கிற்காகவுமே எம்மால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் காரணமாகவே நாம் 'தினசரிச் செய்திகளை' வெளியிடுவதில்லை. உலகில் தினசரிச் செய்திகளை வெளியிடுகின்ற சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இணையத் தளங்களும், தமிழ் கூறும் நல்லுலகத்தைச் சேர்ந்த தனி மனிதர்களால், நேரம் கிடைக்கும்போது பதிவேற்றம் செய்யப்படும் நாற்பதினாயிரத்திற்கு  மேற்பட்ட தமிழ் வலைப் பதிவுகளும் உள்ளன என்பதை உங்களில் சிலரேனும் அறிவீர்கள். மொத்தமாக நாற்பத்திரெண்டாயிரத்திற்கு  மேற்பட்ட இணையங்களோடு போட்டியிட்டு இணைய உலகில் கால் பதிக்க வேண்டிய ஒரு கடினமான சூழலில் 'அந்திமாலை' பிறப்பெடுத்தது. இருப்பினும் எமது அன்பு வாசகர்களாகிய உங்களது ஆதரவால் இரண்டு வருடங்களைத் தாண்டியும் அந்திமாலை ஒரு தரமான, அறிவு தரும் இணையமாக உங்கள்முன் பவனி வருகிறது. ஏறத்தாழ இருபத்தியேழு மாத காலத்திற்குள் வாசகர் வருகைப்பதிவேட்டைத் தமது வருகையால் நிரப்பி, வரவு எண்ணிக்கையை எழுபதினாயிரத்திற்கு மேற்பட்டவர்கள்' என்ற சிறப்பான நிலைக்குக்  கொண்டுவந்திருக்கும் எமது அன்பு வாசகப் பெருமக்களை 'அந்திமாலை' இருகரம்கூப்பி வணங்குகிறது.
வளர்ச்சிப்பாதையில் எழுபதாவது அடியை எடுத்து வைத்திருக்கும் எமது அந்திமாலை இணையத் தளத்திற்கு நீங்கள் கொடுக்கும் பேராதரவிற்கு உளமார்ந்த நன்றிகள். உங்கள் பேராதரவு இன்றுபோல் என்றும் தொடரும் என்று உளமார நம்புகிறோம்.
இந்த மனம் மகிழும் இனிய தருணத்தில் எமக்கு ஆக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்கிய, வழங்கிவருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களையும் நன்றியோடு வணங்குகிறோம். அதேபோல் எங்கள் சோர்வை அகற்றி புத்துணர்ச்சியோடு எம்மைச் செயற்படத் தூண்டும் உங்கள் அனைவரது வருகைக்கும் எமது சிரம்தாழ்ந்த நன்றிகள். தொடர்ந்து எமது தளத்திற்கு வருகை தருவதோடு, கருத்துரைகள் இட்டு எம்மையும், எமது படைப்பாளிகளையும் ஊக்குவிக்கின்ற வாசகர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகுக. அதேபோல் எம்மை தொடர்ந்தும் உற்சாகப்படுத்திய, ஊக்குவிக்கின்ற அத்தனை நல் இதயங்களுக்கும் எம் நன்றிகள் உரித்தாகுக.   என்றும் வேண்டும் இந்த இனிய உறவு.
வாருங்கள்! ஒன்றுபட்டு உயர்வோம்.



நன்றியுணர்வுடன் 
அந்திமாலையின் சார்பாக,
இ.சொ. லிங்கதாசன்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 65 சொல் வன்மை

நாநலம் என்னும் நலன் உடைமை அந்நலம் 
யாநலத்து உள்ளதூஉம் அன்று. (641)
 
பொருள்: ஒருவனுக்கு இன்றியமையாத குணங்களுள் சிறந்தது நாவன்மையாம். அந்த நலம் ஏனைய நலங்களையும்விட மேலான சிறப்புடையது.

இன்றைய பழமொழி

ஐஸ்லாந்துப் பழமொழி 

பறவையின் கூட்டில் தானியங்களை இறைவன் போடுவதில்லை. உட்கார்ந்தே இருக்கும் பறவை பட்டினிதான் கிடக்க வேண்டும்.

எந்த மாதத்தில் பிறந்தவர்களை எந்தநோய் தாக்கும்? – ஓர் ஜோதிட ரிப்போர்ட்!

பிறப்பும், இறப்பும் மனிதர்களின் கையில் இல்லை.
குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட மாதத்தில் பிறக்க வேண்டும் என்பது எவ்வாறு இறைவனால் நிச்சயிக்கப்பட்டதோ அதேபோல ஒருவரின் இறப்பும் முதலிலேயே நிர்ணயம் செய்யப்பட்டதுதான்.
ஒருவரின் பிறந்த மாதத்திற்கும் அவர்களுக்கு தோன்றும் நோய்கள், வகிக்கும் பதவிகளுக்கும் தொடர்பிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒருவர் பிறந்த மாதத்திற்கும் அவரை தாக்கும் நோய்க்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் தென்மேற்கு முசௌரி மாநில பல்கலைக்கழகமும், ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.

கற்றல் குறைபாடு

ஜனவரியில் பிறந்தவர்களுக்கு அல்சீமர் நோய்(Alzheimer's disease) எனப்படும் மூளைச் சிதைவு/அறிவாற்றல் இழப்பு/கடும் ஞாபக மறதி  தாக்குதல் அதிகம் இருந்தது தெரியவந்தது.

பிப்ரவரியில் பிறந்தவர்களுக்கு பிபோலர் டிசாடர்/Bipolar disorder) (இரு முனையப் பிறழ்வு/மன விரக்தி) நோயும்,  

மார்ச் மாதத்தில் பிறந்தவர்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும், ஆட்டிசம் தாக்குதலும் இருந்தது கண்டறியப்பட்டது.

ஏப்ரல், மே மாதங்களில் பிறந்தவர்களுக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு நோய் தாக்குதல் அதிகம் காணப்பட்டது.
நுரையீரல் நோய்கள்

ஜூன், ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் பிறந்தவர்களுக்கு நீரிழிவு, பர்க்கின்சன் எனப்படும் நோய்கள் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது.

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிறந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர் தோல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்
இந்த ஆய்வு முடிவினை மருத்துவ உலகத்தினரும் உண்மை என்று ஒத்துக்கொண்டிருக்கின்றனர்.
சீசனைப் பொருத்தே நோய்கள் தோன்றுவதால் ஒருவர் பிறக்கும் மாதத்திற்கும் அவர்களுக்கு வரும் நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொழிலுக்கும் பிறப்புக்கும் தொடர்பு
அதேபோல குழந்தைகள் பிறக்கும் மாதத்திற்கும், எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலைக்கும் தொடர்பு இருப்பதாக லண்டன் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த முறை நடத்தப்பட்ட தேசிய கணக்கெடுப்பு அறிக்கையினை பயன்படுத்தி அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

அதில் ஜனவரியில் பிறந்தவர்கள் ஆட்சியராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடிகர்களாகவும் உள்ளதாக தெரியவந்தது.
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும் இருக்கின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் பிறந்த மாதங்களின் அடிப்படையில் அவர்கள் 19 விதமான பணிகளில் இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் பல் டாக்டர்களாக பணி புரிவதாக கண்டறிந்துள்ளனர்.

அமாவாசையில் பிறப்பது யோகம்
அமாவாசை திதியில் பிறப்பவர்கள் யோகம் நிறைந்தவர்கள் என்று சோதிடவியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையைப் பொறுத்து அவர்களின் குணநலன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்களாகவும், வைகாசியில் பிறந்தவர்கள் பொய்கூறுபவர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும், ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்.
நாடாளும் ராஜதந்திரிகள்

ஆவணி மாத அமாவாசையில் பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்களாகவும், புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்களாகவும், ஐப்பசியில் பிறந்திருந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள்.
கார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்களாகவும், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்களாகவும், மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்று நாற்பது வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர்.
தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகவும், பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள் என்றும் அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை சோதிட ரீதியாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்ப பிறந்தீங்க,எப்படி இருக்கீங்க..?
நன்றி:tamilcinematv.com

திங்கள், பிப்ரவரி 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 64 அமைச்சு

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். (640)
 
பொருள்: முறையாக ஆராய்ந்து அறிந்த போதிலும் செயல் திறமை இல்லாத அமைச்சர்கள் முடிவில்லாத செயல்களையே செய்வர்.

இன்றைய பொன்மொழி

பெஞ்சமின் பிராங்ளின் 

 

சோம்பேறித்தனம் எல்லாவற்றையும் பிரச்சனைக்குரியதாக்கும், சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும்.

ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 64 அமைச்சு

பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துஉள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். (639) 
 
பொருள்: அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குத் தீங்கு நினைக்கும்அமைச்சனைவிட, எழுபது கோடிப் பகைவர் இருந்தாலும் பாதகமில்லை.