வியாழன், ஜனவரி 05, 2012

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

விழித்து எழுந்தவுடன் கிடைப்பதல்ல வெற்றி.
வீழ்ந்து எழுந்தவுடன் கிடைப்பதுதான் வெற்றி.
வலிகள் இல்லாமல் கிடைத்தால் அதன் பெயர் வெற்றியும் அல்ல, அதைப் பெற்றவன் 'வீரனும்' அல்ல.

பிரபலங்கள் - 5


ஆக்கம் வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
ந்திரக் குரலோன் சந்திரபாபு.
ற்பெருமை மிக்க அழகன்
தன் நடிப்பே சவால் என்றவன்.
மேற்கத்திய நடையுடை பாவனையில் 
மோகமுடைய இளம் பருவம்.
சொந்தக் குரலின் பாட்டு
தந்திடும் ரசனையின் ஆட்டம்.
சுந்தர முகம் பார்த்தால்
முந்திடும் ஆனந்தச் சிரிப்பு.
ந்திரகுலம் தூத்துக்குடியில்
சுதந்திரப் போராட்ட வீரர்கள்
ரோட்றிக்ஸ் ரொசலினுக்கு
பிறந்தார் பனிமயதாசன்.
செல்லப் பெயர் பாபு. பாபுவே
பெருமிதமாய்ச் சூடியது சந்திரபாபு.
பள்ளிக் கல்வி இலங்கையிலே.
காமராசர் அரவணைப்பிலும் சிலகாலம்.
ன்னிசைப் பாட்டு, ஓவியம்
நடனம், நாடகம், சிற்பம்
நடிப்பாம் பல் கலையிலீடுபாடு.
மது, தற்பெருமையிவன் பலவீனம்.
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்
சினிமாவிற்கு அறிமுகமாக்கினாராம்.
தன அமராவதி முதற்படம் (1947)
பிள்ளைச் செல்வமிறுதிப் படம்.(1974)
தினைந்தாண்டுகள் நகைச்சுவையரசன்.
‘தட்டுங்கள் திறக்கப்படும்’ இயக்குனர்.
கதை, இயக்கம், நடனம், 
திரைக்கதை நான்குமிணைத்த முதலியக்குனர்.
எழுத்தாளர் யெயகாந்தன் ரசிகர்.
முழுநட்பை அவருடன் பேணினார்.
சினிமாவில் ஒளிர்ந்த இவன் 
சொந்த வாழ்வு சோகமயமானது
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-11-2010.
இவரது முக்கிய சில பாடல்கள்….
1. குங்குமப்பூவே  கொஞ்சும் புறாவே..
2. உனக்காக எல்லாம் உனக்காக..
3. நானொரு முட்டாளுங்க..
4. பிறக்கும் போதும் அழுகின்றான்…
5. சிரிப்பு வருது…சிரிப்பு வருது…
6. ஒன்னுமே புரியலே உலகத்திலே..
7. பொறந்தாலும் ஆம்பிளையாய்..
8. புத்தியுள்ள மனிதரெல்லாம்…
9. என்னைத் தெரியலையா இன்னும்…
10. பம்பரக் கண்ணாலே..

புதன், ஜனவரி 04, 2012

பாரீஸ் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் 800 ஆயிரம் யூரோ மதிப்புடைய 20 கிலோ தங்கக் கட்டிகள்


பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் Massy-Palaiseau  ரயில் நிலையம் அரு‌கே ரயிலில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் இருந்து 20 கிலோ தங்கத்தை மேலும் 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல். (233)  

பொருள்: நெடுநாள் நீடித்து நிலைக்கும் புகழுக்கு ஒப்பான ஒரு பொருளை உலகில் காண்பது மிகவும் அரிதாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

இளமை என்பது வயதால் அல்ல எண்ணங்களாலேயே அறியப் படுகிறது. கற்றுக் கொள்வதை நிறுத்தாதவன் 'முதியவன்' ஆனாலும் அவன் இளைஞன். கற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டவன் வயதால் இளைஞனே ஆனாலும் அவன் முதியவனே.

செவ்வாய், ஜனவரி 03, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ் (232) 

பொருள்: இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்பவர்க்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

இவ்வுலகில் நம்பிக்கைக்குரிய நான்கு நண்பர்களுக்கு ஈடு இணையான செல்வம் ஏதுமில்லை.