சனி, அக்டோபர் 29, 2016

இன்று நள்ளிரவில் நேர மாற்றம். மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (29.10.2016)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)ஐரோப்பியக்  கண்டத்திலுள்ள நாடுகள்அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு)நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்டும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர்அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது. 
அமெரிக்கக் கண்டத்தில்(கனடா உட்பட) இந்த நேர மாற்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற இருப்பதும் ,  
அவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியா) இந்த நேர மாற்றம் கடந்த 2.10.2016 அன்றும் இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்கது.
ஆசிரிய பீடம் 
அந்திமாலை 
www.anthimaalai.dk 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக