வெள்ளி, ஏப்ரல் 08, 2016

தமிழுக்கு மகுடம்

'தமிழுக்கு மகுடம்' எனும் தலைப்பில் ஒரு மகத்தான விழா ஒன்றினை டென்மார்க்கின் ஓகூஸ்(Aarhus) நகரத்தில் வாழும்
இளைஞர்களாகிய 'ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர்' ஏற்பாடு செய்துள்ளனர். மேற்படி விழா நாளை சனிக்கிழமை(09.04.2016) அன்று ஓகூஸ் நகரத்தில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் டென்மார்க்கில் வாழும் அனைத்துத் தமிழ் உறவுகளும், முக்கியமாக 'ஓகூஸ் நகரத்தில்' வாழும் அனைத்து தமிழ்
உள்ளங்களும் தவறாது கலந்து கொண்டு தமிழுக்கும், இவ்விழாவுக்கும் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் வண்ணம் அன்போடும், உரிமையோடும் அழைக்கின்றேன். நிகழ்வில் சிந்தனைக்கு விருந்தளிக்கும் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும், கல்விமான்களின் உரையும் இடம்பெறவுள்ளன. நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக
அடியேன்(இரா.சொ.லிங்கதாசன்) அழைக்கப் பட்டுள்ளேன். அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர்! என ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் சார்பிலும், என் சார்பிலும் உளமார்ந்த அன்போடு வேண்டி   நிற்கிறேன்.

உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.
நேரம்: பிற்பகல் 14:00 மணி 
விழா மண்டபம்: Vorrevangskolen, Vorregårds Alle 109, 8200 Aarhus N
தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கங்கள்: 31860112, 53575343


ஒன்றுபட்டு உயர்வோம்
மிக்க அன்புடன்
இரா.சொ.லிங்கதாசன்
ஆசிரியர்
அந்திமாலை இணையம்

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

விழாச் சிறப்புற இடம்பெற்று
தமிழ் சிறப்புற மேலோங்க
எனது வாழ்த்துகள்!

யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/

கருத்துரையிடுக