புதன், ஏப்ரல் 20, 2011

அந்திமாலையில் அறிவியல்

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
கடந்த சில வாரங்களாக 'அந்திமாலையில் அறிவியல்' பகுதியில் எமது நண்பரும், விஞ்ஞானியுமாகிய திரு.க.பொன்முடி அவர்களின் தொலைக்காட்சி நேர்காணல்கள் இடம்பெற்று வருகின்றமை நீங்கள் அறிந்ததே. மேற்படி விஞ்ஞானி அவர்கள்  'ராஜ்' தொலைக்காட்சியில் 1.11.2009 அன்று நேரடியாக ஒளிபரப்பாகிய 'மக்கள் மேடை' நிகழ்ச்சியில் 'நில அதிர்ச்சி' குறித்து நேயர்களின் கேள்விகளுக்கும், ஊடகவியலாளர் திரு.முருகானந்தம் அவர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தார். அதன் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பகுதிகள் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்றன. அதன் நான்காவது பகுதியை இன்று உங்களுக்காகத் தருகிறோம்.

விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள் 'ராஜ்' தொலைக்காட்சியில் அளித்த விளக்கம். (சுனாமி ஏன்? எதற்கு? எப்படி?)

பகுதி 4


உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

செவ்வாய், ஏப்ரல் 19, 2011

நாடுகாண் பயணம் - போட்ஸ்வானா

நாட்டின் பெயர்:
போட்ஸ்வானா (Botswana)

முழுப் பெயர்:
போட்ஸ்வானாக் குடியரசு 

அமைவிடம்:
தெற்கு ஆபிரிக்கா 

எல்லைகள்:
வடக்கு, மேற்கு - நமீபியா 
தெற்கு, தென்கிழக்கு - தென்னாபிரிக்கா 
வடகிழக்கு - ஸிம்பாப்வே
குறுகிய எல்லையில் - சம்பியா

தலைநகரம்:
கபோரோனே (Gaborone)

அலுவலக மொழிகள்:
ஆங்கிலம், செட்ஸ்வானா 


சமயங்கள்:
கிறீஸ்தவம் - 71.6 %
மத ஈடுபாடு இல்லாதோர் - 20.6 %
பழங்குடி சமயங்கள்: 6 %
ஏனையோர்: 1.4 %

கல்வியறிவு:
81 %

ஆயுட்காலம்:
58.5 வருடங்கள் 

ஆட்சிமுறை:
பாராளுமன்ற ஜனநாயகம் 

ஜனாதிபதி:
இயன் காமா(Ian Khama)

ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம்:
30.09.1966

பரப்பளவு:
581,730 சதுர கிலோ மீட்டர்கள் 


சனத்தொகை:
2,029,307 (2010 மதிப்பீடு)

நாணயம்:
புலா (Pula / BWP)

இணையத் தளக் குறியீடு:
.bw

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-267

கனிய வளங்கள்(இயற்கை வளங்கள்):
இரத்தினக் கற்கள், நிக்கல், சோடா

ஏற்றுமதிப் பொருட்கள்:
துணிவகைகள், இறைச்சி, சோடா, நிக்கல், இரத்தினக் கற்கள்.

விவசாய உற்பத்திகள்:
கால்நடைகள், சோளம்,தானியங்கள், அவரையினங்கள், சூரியகாந்தி,வேர்க்கடலை, இறுங்கு(கம்பு).

தொழிற்சாலை உற்பத்திகள்:
வைரம் பட்டை தீட்டுதல், உப்பு, செப்பு, நிக்கல், சோடா, பொட்டாஷ், நிலக்கரி, இரும்பு, வெள்ளீயம்(சில்வர்) துணி உற்பத்தி, இறைச்சி பதனிடல்.



நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • வைரக்கல் அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்நாட்டின் 70 % மான நிலப்பகுதி பாலைவனமாகும்(கலஹாரி பாலைவனம்)
  • நாட்டு மக்களில் 2 % பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • நாட்டு மக்களில் 30 % பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர் 
  • நாட்டு மக்களில் 25 % பேர் எயிட்ஸ்(HIV) நோயினால் பீடிக்கப் பட்டுள்ளனர். உலகில் அதிக எயிட்ஸ் நோயாளிகள் உள்ள நாடுகளின் வரிசையில் இரண்டாம் இடத்தில் இந்நாடு உள்ளது.(முதலாம் இடத்தில் உள்ளது சுவாஸிலான்ட் ஆகும்)
  • இறுதியாக 2009 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி இந்நாட்டில் 320,000 பேர் எயிட்ஸ் நோயினால் பீடிக்கப் பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.


திங்கள், ஏப்ரல் 18, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

இரத்தத்தில் கையை நனைப்பவன், கண்ணீரால்தான் அதைக் கழுவவேண்டும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்து ஓம்பி 
வேள்வி தலைப்படா தார் (88)

பொருள்: விருந்தினரைப் போற்றி அவ்வேள்வியின் பயனை அடையாத அறிவில்லாதவர், பொருளை வீணே காத்து இழந்து ஆதரவற்றவரானோம் என்று பின்னர் வருந்துவர்.

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது. கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்த்தான் வெளியேற்ற வேண்டும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இனைத்துணைத்து என்பதொன்றுஇல்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன். (87)

பொருள்: விருந்தினைப் போற்றுதலால் உண்டாகும் வேள்வியின் பயன் ஓர் அளவினை உடையது அன்று. விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவாக அமையும்.

சனி, ஏப்ரல் 16, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்கமுடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்.