திங்கள், டிசம்பர் 28, 2015
வெள்ளி, டிசம்பர் 25, 2015
செவ்வாய், நவம்பர் 17, 2015
மரண அறிவித்தல்
காசிலிங்கம் படிகலிங்கம்
காலஞ்சென்ற கௌசலாதேவியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சிவக்கொழுந்து ('அல்லைப்பிட்டி ஆச்சி') தம்பதியினரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(குலசிங்கம்) தங்கம்மா தம்பதியினரின்அன்பு மருமகனும்,
இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், 798 கட்சன் வீதி, வட்டக் கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த, தற்போது விசுவமடுவில் வசித்தவருமாகிய திரு.காசிலிங்கம் படிகலிங்கம் அவர்கள் நேற்றைய தினம்(16.11.2015) இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற காசிலிங்கம் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
சந்திரகாந்த், பிரசாந்த் ஆகியோரின் அன்புத்தந்தையும், லீலாவதி(இலங்கை), கமலாவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நடராஜா, மற்றும் செல்வரத்தினம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கச்சி(அல்லைப்பிட்டி),
இராசம்மா(யோகபுரம்,மல்லாவி),தெய்வானை(அல்லைப்பிட்டி), நாகம்மா(மண்டைதீவு), மற்றும் திருமதி.சிவகுரு கனகம்மா(மண்டைதீவு) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(மண்டைதீவு), செல்லத்துரை-'சாத்திரியார்'(விசுவமடு) ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிஷ்யந்தி(அவுஸ்திரேலியா),கஜந்தி(இலங்கை) கஜன்(அவுஸ்திரேலியா), ஆதவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் ஈமக் கிரியைகள் நேற்றைய தினம்(16.11.2015) திங்கட்கிழமை பிற்பகல் அவரது விசுவமடு இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் விசுவமடு 12 ஆம் கட்டையில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப் பட்டது.
உற்றார், உறவினர்,நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:திருமதி. சாருமதி சொர்ணலிங்கம்(சகோதரி)
தொடர்புகளுக்கு :
குடும்பத்தினர்.
0094-779671954
செவ்வாய், நவம்பர் 10, 2015
சனி, அக்டோபர் 24, 2015
இன்று நேர மாற்றம்! மறக்க வேண்டாம்.!
இன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (24.10.2015)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)ஐரோப்பியக் கண்டத்திலுள்ள நாடுகள்அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு)நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்படும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர்அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது.
ஆசிரிய பீடம்
அந்திமாலை
www.anthimaalai.dk
ஞாயிறு, செப்டம்பர் 20, 2015
5 ஆவது ஆண்டு நிறைவில் உங்கள் அந்திமாலை
உளமார்ந்த அன்புடன்
ஆசிரிய பீடம்
அந்திமாலை
www.anthimaalai.dk
வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015
'மயக்கம்'
A short film about a social issue. Film made by Tamils in Denmark.
டென்மார்க்கில் வாழும் தமிழ் இளையோர் நடித்த + தயாரித்த 'மயக்கம்' என்ற குறும்படம். புலம்பெயர் தமிழர்களையும் பாதித்து வரும் ஒரு சமூகப் பிரச்சனையே படத்தின் பேசு பொருளாகும். படத்தைப் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து ஊக்குவித்து ஆதரவு வழங்குமாறு உங்களை அன்போடு வேண்டுகிறோம்.டென்மார்க்கில் வாழும் தமிழர்களால் வெளியிடப் படும் முதலாவது 'குறும்படம்' இதுவாகும். இதைத் தயாரித்த, நடித்த இளையோரின் முதலாவதுமுயற்சி இது. தமிழக மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய 'இலங்கைத் தமிழ்' இப்படத்தில் உரையாடல் மொழியாக உபயோகிக்கப் பட்டுள்ளது என்பதை எமது தமிழக வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.
உங்கள் மேலான ஆதரவைப் படக் குழுவினர் வேண்டி நிற்கிறார்கள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)