புதன், செப்டம்பர் 28, 2016

மரண அறிவித்தல்

இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 'வேலன்சீமா' ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட 'ராசா' என்று அழைக்கப்படும் வரப்பிரகாசம் மரியதாஸ் அவர்கள்(ஓய்வு பெற்ற தொலைபேசி இயக்குனர், ஆதார வைத்தியசாலை தெல்லிப்பழை)  நேற்றைய தினம்
செவ்வாய்க்கிழமை(27.09.2016)  ஏழாலையில் காலமானார்.
அன்னார் காலம் சென்ற வரப்பிரகாசம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மலோசனியின் அன்புக் கணவரும், ராஜ மேனகன் (பொது சுகாதார பரிசோதகர், தெல்லிப்பழை), தாட்சாயணி (லண்டன்), வாகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ரோகிணி, தயானந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், அக்க்ஷயா, அனுஜா ஆகியோரின் அன்புப் பேரனும் 
காலஞ்சென்ற பத்மினி, ஜுலியஸ்(அல்லைப்பிட்டி), குணபாலசிங்கம் ( மல்லாவி, முல்லைத்தீவு), நித்தியலட்சுமி (வவுனியா) சரோஜினி(அல்லைப்பிட்டி), லிங்ககுரு(பிரேமா, வவுனியா) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை(29.09.2016) முற்பகல் 9:00 மணியளவில் ஏழாலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஏழாலை மத்தி 'உசத்தி யோடை'  இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: ராஜேஷ்குமார் ஜுலியஸ் (பெறாமகன்)

தொடர்புகளுக்கு: 
ராஜ மேனகன்(மகன்) தொலைபேசி: 0094- 21- 321 0928 / 0094771234623
ராஜேஷ்குமார் (பெறாமகன், பிரான்ஸ்) தொலைபேசி : 00 - 33651369352        

செவ்வாய், செப்டம்பர் 20, 2016

6 ஆவது ஆண்டில் உங்கள் அந்திமாலை

இணைய உலகில் கால் பதித்து ஆறு  ஆண்டுகளை நிறைவு செய்து ஏழாவது ஆண்டை நோக்கிப்
பயணிக்கும் இந்த நாளில் (20.09.2016) இவ் இனிய தருணத்தில் தமது வருகையின் மூலம் பேராதரவு நல்கிவரும் வாசக உள்ளங்களையும், தன்னலம் கருதாத உழைப்பினை வழங்கிய, வழங்கி வருகின்ற அனைத்து உள்ளங்களையும் போற்றி வணங்குகிறோம். 


உளமார்ந்த அன்புடன் 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை 
www.anthimaalai.dk