புதன், அக்டோபர் 17, 2012

ரோஜாபூ மருத்துவப்பயன்கள் --இய‌ற்கை வைத்தியம்


மூலிகையின் பெயர் :- ரோஜா.
தாவரப்பெயர் :- ROSA DAMESCENA.
தாவரக்குடும்பம் :- ROSACEAE.
வேறு பெயர்கள் :- சிறுதாமரை, குலாப்பூ, பன்னீர்பூ, ரோஜாப்பூ. எனபன.
வகைகள் :- வெள்ளை, இளஞ்சவப்பு, கருஞ்சிவப்பு,மஞ்சள் மற்றும் பச்சை.
பயன் தரும் பாகங்கள் :- பூ, மற்றும் மொட்டு.
வளரியல்பு :- இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. ரோஜா வியாபாரமாக பல்கேரியா, இட்டலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகமாகப் பயிரிடுகிறார்கள் ரோஜா 5000 வருடங்களுக்கு முன்பே இந்தாயிவில் இருந்துள்ளது. அதன் பின் தான் மற்ற நாடுகளுக்குப் பரவிற்று. ரோஸ் வொயின் பெரிசியா நாட்டில் பிரபலமானது. அதை அரசர்களும், இராணிகளும், பெரும் பிரமுகர்களும் தான் பயன் படுத்துவார்கள். வீடுகளிலும் தோட்டங்களிலும் அளகுக்காக வளர்கின்றனர். காடுகளில் தன்னிச்சையக வளரும். இது சிறு செடி வகையைச் சேர்ந்தது. கூர்நுனிப் பற்களுள்ள கூட்டிலைகள்யுடையது. இதில் முட்கள் காணப்படும். நல்ல ஈரமும் உரமும் இருந்தால் நன்கு வளரும். இலைகளின் விளிம்புகள் அரும்புகள் இருக்கும். இளஞ்சிவப்பு நிறமுடைய ரோஜா நறுமணத்துடன் இருக்கும். காட்டு ரோஜா மணமிருக்காது. ரோஜா கட்டிங்மூலமும், பதியம் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள் :- ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு
கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.

ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகைப்பிடயளவு இதழை ஒரு சட்டியில் போட்டு ஒருடம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிஅதில் பாதி கசாயத்தைஎடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும்மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.

ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடயளவு கொண்டு வந்து ஆய்ந்துஅதை அம்மியில்வைத்து மைபோல அரைத்துஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக்காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும்இந்த விதமாக மூன்றே நாட்கள்சாப்பிட்டால் சீத பேதி குணமாகும்தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்கபூரண
மாகக் குணமாகும்.

பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கொளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறுத்து, காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயம் பித்த்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களைச் 
சேர்க்க க்கூடாது.

ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும். போட்டது முதல், காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதல் சாப்பிட வேண்டும். காலையில் வெய்யிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக